Friday, 26 December 2025

நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள்

🌿 நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள்

— உங்கள் உடல் ஏன் சோர்வடைகிறது என்பதற்கான உண்மை —

இன்றைக்கு பலர் இப்படிச் சொல்கிறார்கள்👇

> “என்ன பிரச்சனைனே தெரியல…”
“மருந்து குடிக்கிறேன்… ஆனா சரியாவே இல்ல…”
“உடல் ஓய்வெடுக்கவே மாட்டேங்குது…”

இதற்குப் பின்னாலிருக்கும் முக்கிய காரணம்
👉 நமது நரம்பு மண்டலம் (Nervous System) தான்.

நம்ம உடலில் ஹார்மோன்கள் தனியாக வேலை செய்யவில்லை.
அவை எல்லாம் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.

👉 நரம்பு மண்டலம் அமைதியாக இருந்தால்
→ ஹார்மோன்களும் அமைதியாக இருக்கும்

👉 நரம்பு மண்டலம் எப்போதும் பதற்றத்தில் இருந்தால்
→ ஹார்மோன்களும் அதேபோல் குழப்பமாகிவிடும்

🧠 நரம்பு மண்டலம் என்றால் என்ன?

இது நம்ம உடலின் Control Center.
இது தான் முடிவு செய்கிறது👇
• நாம் பாதுகாப்பிலா?
• ஓய்வெடுக்கலாமா?
• சண்டை போட வேண்டுமா?
• ஓட வேண்டுமா?

❗ உடல் எப்போதும்
“பயம் / அழுத்தம் / கவலை” என்று நினைத்தால்
👉 அது Survival Mode-லேயே மாட்டிக்கொள்ளும்.

🔥 1. கார்டிசோல் – ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (எளிய விளக்கம்)

கார்டிசோல் கெட்டது இல்லை.
அபாய நேரத்தில் நம்மை காப்பாற்ற உருவானது.

🛑 பிரச்சனை எப்போது வருகிறது?
அபாயம் முடிந்தும்
👉 கார்டிசோல் குறையாமல் இருந்தால்.

இன்றைய வாழ்க்கையில்👇
• வேலை அழுத்தம்
• பணப் பிரச்சனை
• குடும்ப பொறுப்புகள்
• உறவுப் பிரச்சனை
• பயம் & எதிர்பார்ப்பு

இவை எல்லாம் உடலுக்கு “அபாயம் இன்னும் முடிவடையவில்லை” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.

இதனால் ஏற்படும் விளைவுகள்👇

• எப்போதும் மனக்கவலை
• சின்ன விஷயத்துக்கே கோபம்
• வயிற்றுப் பகுதியில் கொழுப்பு
• உடல் வீக்கம்
• சர்க்கரை திடீர் குறைவு
• மனதில் ஓயாத எண்ண ஓட்டம்

👉 High Cortisol = உடல் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது.

⚠️ 2. “Adrenal Fatigue” – உண்மையில் உடல் என்ன சொல்கிறது?

பலர் சொல்வார்கள்👇

> “எனக்கு சக்தியே இல்லை”
“எவ்வளவு தூங்கினாலும் சோர்வு”

இதன் அர்த்தம்👇
👉 நீண்ட நாட்களாக ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள்👇
• ஓய்வு எடுத்தாலும் சோர்வு
• எதிலும் ஆர்வமின்மை
• மயக்கம்
• இனிப்பு / உப்பு மீது அதிக ஆசை
• “சோர்வு + தூக்கம் வராமை”
• Burnout

👉 உடல் மெதுவாகச் சொல்வது:
“இனிமேல் என்னால் தாங்க முடியாது.”

🌙 3. தூக்கம் ஏன் கெடுகிறது?

நரம்பு மண்டலம் பாதுகாப்பாக உணரவில்லை என்றால்
👉 தூக்கம் வராது.

இதனால்👇
• Melatonin சரியாக சுரக்காது
• Cortisol இரவில் கூட உயர்ந்திருக்கும்

பொதுவான தூக்க பிரச்சனைகள்👇

• தூங்க ஆரம்பிக்க முடியாதது
• அதிகாலை 2–4 மணிக்கு விழித்தல்
• ஆழமான தூக்கம் இல்லாமை
• இரவில் மனம் ஓயாமல் ஓடுவது
• காலை சோர்வுடன் எழுதல்

👉 உடல் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே, அது ஓய்வெடுக்கும்.

---

🔄 எல்லாவற்றையும் இணைக்கும் உண்மை

நரம்பு மண்டலம் சீர்குலைந்தால்👇
• கார்டிசோல் உயரும்
• ஹார்மோன்கள் சமநிலை இழக்கும்
• தூக்கம் கெடும்
• உடலில் வீக்கம் அதிகரிக்கும்

நரம்பு மண்டலம் அமைதியானால்👇
• கார்டிசோல் குறையும்
• ஹார்மோன்கள் சீராகும்
• தூக்கம் ஆழமாகும்
• உடல் குணமடைய தொடங்கும்

---

🌱 மிக முக்கியமான உண்மை (மறக்கவேண்டாம்)

ஹார்மோன் பிரச்சனைகள் தீர
❌ கடுமையான டயட்
❌ உடலை கட்டாயப்படுத்துதல்
❌ “மனசை திடமாக வை” என்று சொல்லிக்கொள்வது
இவையெல்லாம் தீர்வு அல்ல.

✅ நரம்பு மண்டலத்திற்கு பாதுகாப்பு உணர்வை கொடுப்பதே முதன்மை.

அமைதி வந்தால்
👉 உடல் தானாகவே சீராகும்.

🙏 எல்லோருக்கும் தெய்வீக குணமடைதல் கிடைக்கட்டும் 🥰

---

❤️ இந்த தகவல் ஒருவருக்காவது உதவலாம்

👉 தயவுசெய்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
👉 அமைதியாகவே பலர் இதை அனுபவிக்கிறார்கள்.

📌 இதேபோன்ற ஆரோக்கிய & விழிப்புணர்வு பதிவுகளுக்கு
👉 எங்களது Facebook பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள்
👉 உங்கள் Follow, ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம் 🌿

Wednesday, 24 December 2025

பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சி

பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சி...........

நாம் பிறந்தது முதல் இறப்பது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். பல விஷயங்களைப் பிறர் சொல்லிக் கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம்.
சிலவற்றை பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கி றோம். இவை தவிர சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட கற்றுக்கொள்கிறோம். புதிதாக ஒன்றைக் கற்றுத்தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!
கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம். பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு கட்டாயமாகத் தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.
“ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.’
(திருமந்திரம்)
“மனம்’ என்பதை “ஆரியன்’ என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம்.
முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.
முதல் பாடலில் “குதிரை’ என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.
பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.
நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.
நேரம் நாசி
-----------
காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
வலது நாசிக் காற்று (சூரிய கலை)
* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
இடது நாசிக் காற்று (சந்திர கலை)
* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.
சுலபமான இயற்கையான மூச்சு
மூச்சின் சக்தியை அனுபவிக்க நாம் மூச்சுடன் ஒன்றி இருத்தில் வேண்டும்! அது எப்படி? இதோ அதற்கான உபாயம். மிக நீண்ட அல்லது மிகக் குறுகிய மூச்சுகளைத் தவிருங்கள். சாதாரண, இயல்பான, இயற்கையான மூச்சு போதும்.
இப்படி இயற்கையான, இயல்பான, சுலபமான மூச்சோடு நாம் ஒன்றியிருக்கும் போது, மெல்ல, மெல்ல எண்ணங்கள் குறைந்து, குறைந்து இறுதியில் மறைந்தே போகும்! மனம் வெற்று மனமாகும். அப்படி மனம் வெற்றிடமாகும் போது, அங்கு பிரபஞ்ச சக்தி வெள்ளமெனப் பாயும். நிரம்பி இருக்கும் இடத்தில் எதுவுமே புக முடியாது ஆனால் வெற்றிடத்தில் வெள்ளமெனப் பாயும், பிரபஞ்ச சக்தி! மனம் பேரொளியில் நிரம்பித் ததும்பி வழியும். அக்கணம்... நமது ’மூன்றாம் கண்’ திறந்து கொண்டு செயல்படத் துவங்கும். அந்த அற்புத அனுபவத்தில், நாம் நமது ஆத்ம விழிப்பை, அதன் சக்தியைப் பரிபூரணமாக உணர்ந்து அனுபவிக்கலாம்.
தியான விஞ்ஞானம்
---------------------
நம்து இரு புறக்கண்கள் போலவே அகத்திற்கென ஒரு கண் உண்டு. அதுவே நமது மூன்றாம் கண். நமது பெளதீக உடல் போலவே சூட்சும உடல் என்று ஒன்றுண்டு. புறக்கண்களும் பெளதீக உடலும் நமது உலகாய வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. உலகியல் உணர்வுகள் சார்ந்தது. ஆனால், நமது மூன்றாம் கண் பார்வை நமது ஆத்மசக்த்தியை, உள்ளே உறைந்திருக்கும் இறையை நமக்குக் காட்டிக் கொடுக்கும்! சூட்சும உடலோ நமது ஆன்மிக வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தும். அப்போதுதான் நாம் உணர்வோம், நமது இத்தனை நாள் வாழ்வு வாழ்வல்ல! இப்போது காணும் வாழ்வே வாழ்வென்பதை! இத்தனை அற்புத அனுபவங்களும் இயல்பான சுவாசத்தை மட்டும் கவனிக்கும் ’ஆனாபானசதி’ தியானத்தால் மட்டுமே சாத்தியம்! சாத்தியம்!!
இவ்வாறாக நாம் நமது முழு மற்றும் சிதறாத கவனத்தை, மூச்சின் மேல் செலுத்தும்போது அதுவே தியானம் என்றழைக்கப்படும் ’தவம்’ ஆகிறது. இத்தியானத்தைத் தொடர்ந்து பழகும்போது நாம், ஆன்மிக விஞ்ஞான தியானத்தில் சிறந்த, பரிபூரணமாகிறோம், பரிபக்குவ நிலையை, அதாவது முழுமையை அடைகிறோம்.
ஆன்ம விஞ்ஞானம்
--------------------
தியானத்தின் மூலமாக நாம் நமது கடந்த மற்றும் எதிர் காலங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். நமது கடந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்வதால், நாம் பல பிறவிகள் தாண்டி வந்திருப்பதை உணர்கிறோம். உயர்ந்த / தாழ்ந்த மற்றும் பல பிறவிகளைக் கடந்து வந்திருப்பதை உணர்கிறோம்.
எனவே, மாறி மாறி எடுத்த உடல்கள் பெரிதல்ல. மாறாமல் நம்முடனே வந்து கொண்டிருக்கும் ஆன்மாவே பெரிதென்று அறிகிறோம். "அயமாத்மா ப்ரம்மா" "அஹமாத்மா ப்ரம்மா" "தத்வம்ஸி" (நான் பிரம்மனாக இருந்தேன்.. நானே பிரம்மனாக இருக்கிறேன்.. நானே பிரம்மா) என்று படிப்படியாக உள்ளே உறைந்திருக்கும் இறை உணரும் செயல் நடக்கிறது என்பதை அறிகிறோம். ’நாமே எல்லாம்’, நாம் அழிவற்றவர்கள் என்பதை உணர்கிறோம். பல்வேறு பிறவி பெளதிக உடல்களின் இறப்பு நிகழ்ந்தாலும், மாறாத ஆன்மாவின் வளர்ச்சியே நமது உண்மையான வாழ்வென்பதை அறிகிறோம்!
இப்பாடமே 'ஆன்ம விஞ்ஞானம்' என்பதாகும்.
ஆன்மிகம்
-----------
சுவாச சக்தி மூலமாக நாம் தியான விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்கிறோம். தியான சாஸ்திரம் என்பது அதுவே. அந்த தியான சாஸ்திரம் மூலமாகவே நாம் ஆன்ம சாஸ்திரம் என்கிற ஆன்ம விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்கிறோம்.
ஆன்ம விஞ்ஞானத்தை நன்கு கிரகித்துக் கொண்ட பிறகே நாம் நமது தினசரி வாழ்வு பற்றியும், வாழ்தல் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படைக் கூறுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்... எப்படிப் பேசுவது... எப்படி சாப்பிடுவது... எப்படி வளர்வது... எப்படி தொடுவது.. எப்படி நடப்பது... இப்படி தினசரி நாம் செய்யும் பல செயல்களைப் பற்றி சரியாகப் புரிந்து அதன்படி நடக்க முடியும். இதுநாள்வரை இதெல்லாம் செய்திருக்கிறோம் தான்! ஆனால் அதன் நுணுக்கங்கள்... சரியான வழிமுறைகள் பற்றித் தெரிந்து கொள்ள ’ஆன்ம விஞ்ஞானக் கற்றல்’ மிக மிக அவசியம்!
இதுதான் ’பரிபூரண பரிபக்குவத் தன்மை’ (Enlightenment) அதாவது முழுமை (Perfection) இதைத்தான் ’ஆன்மிகம்’ என்கிறோம்.....

Sunday, 9 November 2025

akku panchar

அக்குபஞ்சர் மருத்துவம்:-

அக்கஸ் (Acus) பஞ்சுரா (Punctura) என்ற லத்தீன் வார்த்தை களிலிருந்து பிறந்ததுதான் அக்குபஞ்சர் (Acupuncture) என்ற சொல்.

  அக்கஸ் என்றால் ஊசி, பஞ்சுரா என்றால் குத்துதல் என்பது பொருளாகும்.

தசைக்கோளங்களை இயக்கும் நரம்புகளின் ஆக்கப் பணியினை நன்கு அறிந்திருந்த நம் முன்னோர்கள், நம் உடலின் பாகங்களில் சில மர்மப்புள்ளிகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருந்தார்கள் இந்த வர்மப்புள்ளிகள் நம் நாட்டில் வர்மப்புள்ளிகள் என்றும் சீன நாட்டினர் அக்குபஞ்சர் (Acupuncture Points) என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

மேற்படி அக்குபஞ்சர் புள்ளிகளில் விரலினால் அழுத்தியோ (Acupressure) அல்லது ஊசியினால் குத்தியோ, திருகியோ, உடலில் உள்ள தசைகளையும், நரம்புகளையும் மறத்துப்போகச் செய்யவும், அவைகளின் செயல்திறனை ஊக்குவிக்கவும் முடியும் என்றும் கண்டுபிடித்தார்கள்.
இந்த அதிசய கண்டுபிடிப்பே பின்னர் உடலில் உள்ள பாகங்களின் வியாதிகளைப் போக்கஅடிகோலியது. இந்த அக்குபஞ்சர். (Acupuncture Points) வியாதிகளைக் குணமாக்கும் வைத்திய முறையே அக்குபஞ்சர் வைத்திய முறை என்று அழைக்கப்படுகிறது.
அக்குபஞ்சரின் வரலாறு:-
  அக்குபஞ்சர் என்னும் அதிசய வைத்திய முறை 5000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதனை நெறிப்படுத்தி ஒரு அரிய கலையாக உலகிற்குக்கு வழங்கியவர்களில் முக்கியமானவர். கி.மு.2697-க்கும் 2596-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சீன நாட்டு சக்கரவர்த்தி ஹூவாங் டி சக்கரவர்த்தி என்பவர் ஆவார். இவரே அக்குபஞ்சரின் தந்தை என போற்றப்படுகிறார். இன்று இந்த சிகிச்சை முறை உலகம் முழுதும் பரவி உலக சுகாதார அமைப்பாலும் (WHO) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பஞ்சபூத சக்திகள்:-
இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்திலும் உள்ளது. எனவேதான் இப்பிரபஞ்சத்தை ஆங்கிலத்தில் மேக்ரோகாசம் என்றும் மனிதனை மைக்ரோகாசம் என்றும் கூறுகிறார்கள். எனவே இந்த மனித உடலுக்கு ஆதாரமாக உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம் நெருப்பு போன்ற பஞ்சபூத சக்தியின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும்பொழுது அதன் விளைவுகளையே நாம் நோய் என்று கூறுகின்றோம். இந்த பஞ்சபூத சக்திகளின் அளவுகளை சில புள்ளிகளை தூண்டுவதன் மூலம் சமநிலைப் படுத்துவதே அக்குப்பஞ்சர் மருத்துவம் ஆகும்.

 நெய்ஜிங் என்ற சீனப்புத்தகத்தின் கூற்றுப்படி நீர் நிலம், மரம், உலோகம், நெருப்பு ஆகிய இந்த ஐந்து பூதங்களின் சக்தி உடலில் உள்ளன. இவை மனிதனு க்கு மூலாதாரமாகவும் விளங்குகின்றன.

 சீனர்களின் பழங்கால தத்துவப்படி யின் (yin) என்பதும் யாங் (yang) என்பதும் எதிரிடையானதும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யக்கூடிய சக்தியாகும். இவற்றின் உயிர் ஆற்றலைப் பொருத்தே உடல் ஆரோக்கியம் அமைந்துள்ளது. இவற்றில் சமநிலை மாறுபட்டால் நோய் உண்டாகும்.

யின்(yin)-எதிர்மறை-குளிர்ச்சி-பெண்மை-திடமானது.

யாங்(Yang)-நேர்மறை-வெப்பம்-ஆண்மை-மென்மையானது

    நமது உடலில் 14உயிர் சக்தி ஓட்டப்பாதைகள் உள்ளன. இதில் 12இரட்டைப் பாதைகள் உடலின் இரு பக்கமும் உள்ளது. மற்ற இரண்டும் ஒற்றைப் பாதைகள் உடலின் முன் பக்கமும் பின்பக்கமும் உடலின் மத்தியில் ஓடுகிறது. இந்த உயிர் சக்தியானது உடலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை கடந்தே செல்கிறது. நமது உடலில் 76,000 அக்கு புள்ளிகள் உள்ளன. அதில் 864 புள்ளிகள் மட்டுமே அக்கால சீனர்கள் கண்டறிந்தார்கள். ஆனால் தற்போது 361 புள்ளிகள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.
சுன் (Cun) அளவவைகள்:-
இது அக்குபஞ்சர் புள்ளிகளின் இருப்பிடத்தை துள்ளியமாக கண்டறிய பயன்படும் அளவு முறையாகும்.இது நோயாளியின் கட்டைவிரல் அகலமே ஒரு சுன் எனப்படும். அல்லது நடுவிரலின் இரு ரேகைகளுக்கு இடையே உள்ள மையப் பகுதியே ஒரு சுன் எனப்படும்.

14சக்திப் பாதைகள்:-
1. நுரையீரல் சக்தி ஓட்டப்பாதை (LU)

2.பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதை (LI)

3.இரைப்பை சக்தி ஓட்டப்பாதை (ST)

4.மண்ணிரல் சக்தி ஓட்டப்பாதை (SP)

5.இதய சக்தி ஒட்டப்பாதை (H)

6.சிறுகுடல் சக்தி ஒட்டப்பாதை (SI)

7.சிறுநீரக சக்தி ஒட்டப்பாதை (K)

8.சிறுநீர்ப்பை சக்தி ஒட்டப்பாதை (UB))

9.இதய உறை சக்தி ஒட்டப்பாதை (P)

10.வெப்பமண்டல சக்தி ஒட்டப்பாதை (TW)

11.கல்லீரல் சக்தி ஒட்டப்பாதை (LIV)

12.பித்தப்பை சக்தி ஒட்டப்பாதை (GB)

13.இனவிருத்திப்பாதை (REN)

14.ஆளுமைப்பாதை (DU)

 
 
 
 
 
 
LUNG – நுரையீரல்
சக்தி ஓட்டத் தன்மை -யின்(Yin)
மொத்த புள்ளிகள் -11
தொடர்புடைய உறுப்பு -பெருங்குடல்
மூலகம்(Element). -உலோகம்
வெளிபுற உணவு உறுப்பு -மூக்கு

நுரையீரல் சக்தி ஒட்டப்பாதை:-

உடலின் முன்புறமத்தியக்கோட்டிலிருந்து 6 சுன்கள் பக்கவாட்டில் 1வது மற்றும் 2வது விலா எலும்புகளின் மத்தியில் ஆரம்பித்து தோள்பட்டை வழியாக மேலேறி கைகளின் உட்புற மேல்பக்கமாக முழங்கை மற்றும் மணிக்கட்டுவழியாகச் சென்று கைக் கட்டைவிரல் நகத்தின் வெளிப்புற கீழ் விழிம்பிலிருந்து 0.1 சுன் மேலே முடிகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்:_

Lu 1 உடலின் மத்திய கோட்டிலிருந்து 6 சுன் தூரத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது மார்பு எலும்புகளுக்கு மத்தியில் உள்ளது.

   இருமல், மார்புச்சளி, ஆஸ்துமா, தோல் நோய்கள். விரல் மூட்டுவலி.

Lu 2 காரை எலும்பு தோள்பட்டை எலும்பில் முறியும் இடத்தில் உள்ளது.

   தோள்பட்டை வலி

Lu 5 முழங்கை மடிப்பு ரேகையில் இரு தலை தசை நாரின் வெளிப் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் உள்ளது.

    முழங்கை வலி, சிறுநீர் விட்டு விட்டு வெளியேறுதல், தோல் நோய்கள். மாலை நேரத்தில் தோன்றும் காய்ச்சல்.

Lu 6 இப்புள்ளி Lu 5 ல் இருந்து 5சுன் கீழே ரேடியஸ் எலும்பின் உள்பக்கம் அமைந்துள்ளது.

     ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இருமல்.

Lu 7 மணிக்கட்டுக்கு ரேகையின் வெளிப்பக்க விளிம்பில் இருந்து மேல்நோக்கி 1.5 சுன் தூரத்தில் உள்ளது.

     மணிக்கட்டு வலி நுரையீரல் நோய்கள் கழுத்து பின்புறம் ஏற்படும் வலி.

Lu 8 மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்தில் இருந்து 1சுன் மேலே அமைந்துள்ளது.

    ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு, இருமல், நுரையீரலுக்கு சக்தி அளிக்கும் புள்ளி.

Lu 9 மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்தில் radial தமனியின் வெளிப்புறம்உள்ளது.

    மணிக்கட்டு வலி நுரையீரல் நோய்கள் பக்கவாதம்.

Lu 11 கட்டை விரல் நகக்கண்ணிலிருந்து 0.1 சுன் கிழே வெளிப்புறமாக உள்ளது.

திடீர் மயக்கம், அதிர்ச்சி, மனக்குழப்பம், மூக்கில் நீர் வடிதல்.

Large intestine – பெருங்குடல்
சக்தி ஓட்டத் தன்மை -யாங்
மொத்த புள்ளிகள் -20
தொடர்புடைய உறுப்பு -நுரையீரல்
மூலகம்(Element). -உலோகம்
வெளிபுற உணவு உறுப்பு -மூக்கு

பெருங்குடல் சக்தி ஒட்டப்பாதை:-

ஆட்காட்டி விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பில் இருந்து 0.1 சுன் துரத்தில் மேலே ஆரம்பித்து கைகளின் பின்புற மேல்ப்பக்கமாக மணிக்கட்டு மற்றும் முழங்கை வழியாக தோள்ப்பட்டையின் முன்புறத்தை அடைகிறது. அங்கிருந்து தோள் மற்றும் முன்புற கழுத்து வழியாக முகத்தை அடைந்து மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் நடுவே சென்று மூக்கு விழிம்பின் பக்கவாட்டில் முடிகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்

Li 1 ஆள்காட்டி விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பில் இருந்து 0.1சுன் தூரத்தில் உள்ளது.

    அலர்ஜி, தோல் நோய்கள், பெருங்குடல் நுரையீரல் நோய்கள்.

Li 4 கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைக்கும் போது ஏற்படும் தசைத் திரட்சியின் மேல் பகுதியில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

     இது இடுப்பிற்க்கு மேலே ஏற்படும் அனைத்து வலியையும் போக்கு கிறது, பெருங்குடல் நுரையீரல் மணிக்கட்டு வலிகள்.

Li 5 கட்டைவிரலை உயர்த்தும் போது கட்டை விரலுக்கும் மணிக்கட்டு பக்கவாட்டில் ஏற்படும் பள்ளத்தில் உள்ளது.

    இது மலச்சிக்கலுக்கு முக்கியமான புள்ளி, தூசி அலர்ஜி மணிக்கட்டு வலி.

Li 10 இது Li 11க்கு கீழே 2 சுன் தூரத்தில் உள்ளது.

   பக்கவாதம், கைகால் விழுந்து போதல்.

Li 11 முழங்கை ரேகையின் வெளிப்புற ஓரத்தில் உள்ளது.

    தோல் அலர்ஜி, பெருங்குடல் நுரையீரல் நோய்கள், முழங்கை வாதம் வலி.

Li 14 கையை தோளுக்கு கிடைமட்டமாக தூக்கினால் ஏற்படும் பள்ளம்.

     தோள்பட்டை வலி.

Li 15 கையை தோளுக்கு கிடைமட்டமாக தூக்கினால் ஏற்படும் முன்புற பள்ளத்தில் உள்ளது.

     தோள்பட்டை வலி, பின்புற கழுத்து வலி.

Li 18 குரல் வலை சங்கில் இருந்து 3 சுன் பக்கவாட்டில் கழுத்தின் முன்புறம் அமைந்துள்ளது.

     தைராய்டு மற்றும் திக்குவாய்

Li 19 மேலுதட்டின் நடுக்கோட்டில் இருந்து 0.1சுன் பக்கவாட்டில் உள்ளது.

      சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள், மூக்கடைப்பு, தும்மல், முகவாதம்.

Li 20 மூக்கு துவாரத்தின் வெளிப்புற விளிம்பை ஒட்டி அமைந்துள்ளது.

     சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள், மூக்கடைப்பு, தும்மல், முகவாதம்.

Tripple Warmer – மூவெப்பமண்டலம்

சக்தி ஓட்டத் தன்மை -யாங்
மொத்த புள்ளிகள் -23
தொடர்புடைய உறுப்பு -பெரிக்கார்டியம்
மூலகம்(Element). -நெருப்பு
வெளிபுற உணவு உறுப்பு -நாக்கு

மூவெப்பமண்டல சக்தி ஒட்டப்பாதை:-

  மோதிர விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0 சுன் துரத்தில் ஆரம்பித்து கைகளின் வெளிப்புறத்தில் சிறுகுடல் சக்தி ஒட்டப்பாதைக்கும் பெருங்குடல் சக்தி ஒட்டப்பாததைக்கும் நடுவில் சென்று தோள்பட்டையின் பின்புறத்தை அடைந்து கழுத்தின் இவாட்டு வழியாக காதின் கீழ் நுனிக்கு சென்று ஒரு சுற்று சுற்றி புருவத்தின் வெளிப்பு விளிம்பிற்கு எதிரே முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்:-

Tw 1 மோதிர விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சுன் தூரத்தில் உள்ளது. (சுண்டு விரல் பக்கம்)

     காய்ச்சல், அதிக உடல் உழைப்பினால் வரும் உடல் வலி.

Tw 2 மோதிர விரலை மடக்கும்போது கணுவின் முன்பாக உள்ள பள்ளம்.

     உடல் நடுக்கம் , குளிர்கால வலிகள்.

Tw 3 இது 4வது 5வது உள்ளங்கை எலும்புகளின் பின்புறமலைப்பகுதிக்கு இடையிலுள்ள பள்ளத்தில் உள்ளது.

     பகலில் குறைந்து இரவில் அதிகரிக்கும் வலிகள். காது சம்மந்தப்பட்ட நோய்கள், கை வாதம்.

Tw 5 மணிக்கட்டு பின்புற ரேகையில் இருந்து 2 சுன் மேலே அமைந்துள்ளது.

      ஒருபக்கத் தலைவலி, காது நோய்கள் கழுத்து பிடிப்பு.

Tw 6 மணிக்கட்டு மையத்தில் இருந்து 3சுன் மேலே உள்ளது.

     அதிக வியர்வை, மலச்சிக்கல்.

Tw 14 கையை மேலே உயர்த்தும்போது ஏற்படும் பின்புற குழி.

    மேல் கை வாதம். காது தொடர்பான நோய்கள்.

Tw 17 வாயைத் திறக்கும் போது காதுமடலின் கீழ் பின்புறம் ஏற்படும் பள்ளம்.

      காது தொடர்பான பிரச்சனைகள், முக வாதம்.

Tw 21 வாயைத் திறக்கும் போது காதின் முன்புறம் ஏற்படும் பள்ளம்.

      காது அடைப்பு. காது இரைச்சல்.

Tw 23 கண் புருவத்தின் வெளிப்புற ஓரத்தில் சிறிய பள்ளத்தில் உள்ளது.

      கண் எரிச்சல், கண் கூசுதல், தலைவலி.

Pericardium - இருதய மேலுறை
சக்தி ஓட்டத் தன்மை -யின்
மொத்த புள்ளிகள் -9
தொடர்புடைய உறுப்பு-மூவெப்பமண்டலம் 
மூலகம்(Element)-நெருப்பு
வெளிபுற உணவு உறுப்ப ு-நாக்கு

இருதய மேலுறை சக்தி ஒட்டப்பாதை:-

 மார்புக் காம்பிலிருந்து 1 சுன் வெளிப்பக்கம் ஆரம்பித்து தோள்படை வழியாக மேலேறி நுரையீரல் சக்தி ஒட்டப்பாதைக்கும் இருதய சக்தி ஓட்டப் பாதைக்கும் இடையே சென்று மணிக்கட்டை அடைந்து உள்ளங்கை மத்தியில் சென்று நடுவிரலின் மேல் நுனியில் முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்:-

P 3 முழங்கை மடிப்பு ரேகையில் இரு தலை தசைநாரின் உட்புற ஓரத்தில் உள்ளது.

    இருதய வலி, இருதய படபடப்பு.

P 6 மணிக்கட்டு ரேகையிலிருந்து 2சுன் மேலே இரு தசை நாரின் நடுவில் உள்ளது.

    குமட்டல், வாந்தி, தூக்கமின்மை, மனநோய், வலிப்பு, படபடப்பு,நெஞ்செரிச்சல், கரிப்பு ஆகியவை நீங்கும்.

P 7 மணிக்கட்டு ரேகையின் மத்தியில் உள்ளது.

    மணிக்கட்டு வலி, முடக்கு வாதம்.

P 8 விரல்களை மடக்கினால் நடுவிரல் முனை உள்ளங்கையில் படும் இடத்தில் உள்ளது.

      கை வாதம், உள்ளங்கை வியர்வை.

P 9 கை நடுவிரலின் முனையில் உள்ளது.

    அவசரகாலப் புள்ளி, மயக்கம், நடு இரவில் ஏற்படும் நெஞ்சு வலி.

Small intestine – சிறுகுடல்

சக்தி ஓட்டத் தன்மை -யாங்
மொத்த புள்ளிகள் -19
தொடர்புடைய உறுப்பு -இதயம்
மூலகம்(Element). -நெருப்பு
வெளிபுற உணவு உறுப்பு -நாக்கு

சிறுகுடல் சக்தி ஓட்டப்பாதை:-

 கை கண்டு விரல் நகத்தின் உட்புறம் கீழ் விளிம்பிற்கு மேலே 0 சன் ரத்தில் ஆரம்பித்து உள்ளங்கைத் தோலும் புறங்கைத் தோலும் சேருகின்ற கோட்டின் வழியில் கைகளின் கீழ்பக்கமாக மணிக்கட்டு மற்றும் முழங்கை வழியாக அக்குளின் பின்பக்க மடிப்பு ரேகையை அடைகிறது. பிறகு பின்பக்க தோள்பட்டையில் ஏறிசாய்வாக இறங்கிபிறகு மேலேறி கீழ் வளைவாக கழுத்தின் பக்கவாட்டை அடைந்துமுகத்தின் முன்புறத்தில் கன்ன எலும்புவரை சென்று நேராக வாயைத் திறக்கும்போது காதின் முன்புறத்தில் ஏற்படக்கூடிய பள்ளத்தில் முடிவடைகிறது.

    

புள்ளிகளும் தீரும் நோய்களும்:-

Si 1 கை சுண்டுவிரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 தூரத்தில் உள்ளது.

     இடுப்பு வலி, இதயவலி.

Si 3 உள்ளங்கையை மூடும்போது தெரிகின்ற இருதய ரேகையின் வெளிப்புறத்தில் உள்ளது.

    கழுத்து வலி, இதயவலி, தாய்ப்பால் சுரப்பின்மை.

Si 6 மணிக்கட்டு எலும்பின் கீழே அல்நார் எழும்பு சேருமிடத்தில் ஏற்படுகின்ற பள்ளத்தில் உள்ளது.

     கழுத்து வலி, மணிக்கட்டு வலி.

Si 9 கைகளை உடலுடன் சேர்க்கும் போது பின்புறம் ஏற்படும் கோட்டின் மோலே 1சுன் தூரத்தில் உள்ளது.

     கை வாதம், தோள்பட்டை மூட்டு வலி.

 Si 17 கீழ் தாடையின் வளைவுக் கோளத்தில் கீழே உள்ளது.

      ஒற்றைத் தலைவலி, பேச்சுத் திணறல், கீழ்தாடை எலும்பு வலி.

Si 19 வாயைத் திறக்கும் போது காதின் அருகே ஏற்படும் பள்ளத்தின் மத்தியில் உள்ளது.

     செவிட்டுத்தன்மை, காது இரைச்சல், காதில் சீல் வடிதல்; தலை சுற்றல்.

HEART – இருதயம்
சக்தி ஓட்டத் தன்மை -யின்
மொத்த புள்ளிகள் -9
தொடர்புடைய உறுப்பு -சிறுகுடல்
மூலகம்(Element) -நெருப்பு
வெளிபுற உணவு உறுப்பு -நாக்கு

இருதய சக்தி ஓட்டப்பாதை

அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கைகளின் உட்பக்க கீழ்பகுதி வழியாக முழங்கை மணிக்கட்டு மற்றும் உள்ளங்கை வழியாக சென்று கை சுண்டு விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே0 சுன் துரத்தில் முடிவடைகிறது.

 
புள்ளிகளும் தீரும் நோய்களும்:-

H 3 முழங்கை மடிப்பு ரேகையின் உட்புற ஓரத்தில் உள்ளது.

    முழங்கை வலி, கை நடுக்கம்.

 H 4 இது H5க்கு 0.5 சுன் மேலே உள்ளது.

     நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, சளி, டி.பி நோய்.

H 5 இது H 7ல் இருந்து 1 சுன் மேலே உள்ளது.

    பேச்சுத் திணறல், குரல் நாண் அலர்ஜி.

H 6 இது H 7 இருந்து 0.5சுன் மேலே உள்ளது.

    மனநிலை கோளாறு, இருதய கோளாறு.

H 7 மணிக்கட்டு ரேகையில் அல்நாரிஸ் தசை நாரின் வெளிப்பக்க பள்ளத்தில் உள்ளது.

    இருதய படபடப்பு, கவலை, தூக்கமின்மை, நெஞ்சுவலி, மனநோய், நரம்புத் தளர்ச்சி.

stomach – இரைப்பை
சக்தி ஓட்டத் தன்மை-யாங்
மொத்த புள்ளிகள்-45
தொடர்புடைய உறுப்பு-மண்ணீரல்
மூலகம்(Element)-நிலம்
வெளிபுற உணவு உறுப்பு-உதடு

இரைப்பை சக்தி ஒட்டப்பாதை

கீழ் இமைப்பையின் மையப் பகுதியில் கருவிழியில் நேர் கீழே ஆரம்பித்து நேர்கோட்டில் கீழிறங்கி கீழ் தாடையின் கீழ் விளிம்பில் வளைந்து காதின் முன்புறமாக மேலே புருவத்தின் வெளிப்புற விளிம்பில் இருந்து 3.5 கன்கள் துரத்தில் மேலே நிற்கிறது

கீழ் தாடையின் வளைகின்ற கீழ் விளிம்பில் இருந்து கழுத்து வழியாக கீழிறங்கி நெஞ்சு பகுதியை அடைந்து உடலின் முன்புற மத்தியக் கோட்டில் இருந்து 4 சுன்கள் துரத்தில் மார்பு வழியாக நெஞ்சுப் பகுதியை கடந்து உடன் முன்புற மத்தியக் கோட்டில் இருந்து 2 சன்கள் வயிற்றுக் கீழ்ப்பகுதியை அடைகிறது. பிறகு தொடையின் வெளிப்பக்க முன்புறமாக முழங்கால் மற்றும் கணுக்காலை அடைந்து கால் 2-வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேல்புறத்தில் O.1 சுன் துரத்தில் முடிவடைகிறது.

   
புள்ளிகளும் தீரும் நோய்களும்ம்

St 1 கருவிழியின் நேர் கீழே இமை மையத்தில் உள்ள புள்ளி

    கண் பார்வை தெளிவு பெறும், கண்நோய்.

St 2 இது ST 1 க்கு அரை இன்ச் கீழே உள்ளது

    சைனஸ், அலர்ஜி நீங்கும். முகவாதம், முகநரம்பு வலி, பல் வலி நீங்கும்.

St 3 இதுSt 2க்கு கீழே மூக்கு துவாரங்களின் பக்கவாட்டில் உள்ளது.

   சைனஸ், அலர்ஜி நீங்கும். முகவாதம், முகநரம்பு வலி, பல் வலி நீங்கும்

St 4 வாயின் ஓரத்திற்கு அரை இன்ச் வெளியே

    சைனஸ், அலர்ஜி நீங்கும். முகவாதம், முகநரம்பு வலி, பல் வலி நீங்கும்

st 8 நெற்றி முடிக் கோட்டிலிருந்து 0.5 சுன் மேலே உள்ளது.

    தலைவலி, ஒற்றை தலைவலி, தலைபாரம், கண்வலி.

St 18 நிப்பிளின்nipple கீழே 5, 6 வது விலா எழும்பின் மத்தியில் உள்ளது.

     தாய்ப்பால் சுரப்பின்மை, நெஞ்சு, மார்பகம் தொடர்பான நொய்கள்;

St 21 தொப்புளின் மையத்திலிருந்து 2சுன் பக்கவாட்டில் 4சுன் மேலே உள்ளது.

      நாள்பட்ட வயிற்றுவலி, தீவிரமான வயிற்றுவலி

St 25 தொப்புளின் மையத்தி லிருந்து 2’ அப்பால் வலது இடது இரண்டு பக்கமும் உள்ளது

      வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்சனை களும் நீங்கும்.

St 32 முட்டிச் சிப்பியிலிருந்து மேல்புற வெளிப்பக்கமாக 6 சுன் தூரத்தில் உள்ளது.

      கால்களில் ஏற்ப்படும் பக்கவாதம். மூட்டு வீக்கம்.

St 34 முட்டிச் சிப்பியின் வெளிப்புற ஓரத்திலிருந்து 2 சுன்கள் மேலே உள்ளது.

      வயிறு தொடர்பான பிரச்சனை, பக்கவாதம், முழங்கால் வலி.

St 36 டிபியா எழும்பின் தலைப்பகுதியில் துருத்தியிருக்கின்ற பாகத்திலிருந்து 1சுன் வெளிப்புறமாக பக்கவாட்டில் அமைந்துள்ளது.

      வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்சனை களும் நீங்கும்.

St 38 இது St 38ல் இருந்து 5 சுன் கீழே உள்ளது.

     வயிற்று வலி, தோள்பட்டைப் பிடிப்பு.

St 44 காலின் 2வது 3வது விரல்களுக்கிடையில் அமைந்துள்ளது.

   கண்வலி, பல்வலி, கால்வலி, மற்றும் இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து வலிகளும்.

Spleen – மண்ணீரல்
சக்தி ஓட்டத் தன்மை-யின்
மொத்த புள்ளிகள்-21
தொடர்புடைய உறுப்பு-இரைப்பை
மூலகம்(Element)-நிலம்
வெளிபுற உணவு உறுப்பு-உதடு

    
மண்ணில் சக்தி ஓட்டப்பாதை

கால் கட்டைவிரல் நகத்தின் உட்புற கீழ் விழிம்பிற்கு மேலே 0.1 சுன் தூரத்தில் ஆரம்பித்து பாதத்தின் இரு நிறங்களும் சேரும் கோட்டின் வழியாக உட்புற கணுக்கால் முட்டைச் சுற்றி டிபியா எனும்பின் உட்பக்க ஒரமாக முழங்காலின் உட்புறம் மற்றும் தொண்டையின் உட்பக் வழியாக உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சுன்கள் துரத்தில் வயிற்றுப்பகுதியைக் கடந்து பிறகு நெஞ்சுப்பகுதியில் உடலின் முன்புற மத்தியக் கோட்டிலிருந்து 6 சுன்கள் பக்கவாட்டில் 2-வது மற்றும் 3-வது விலா எலும்பின் மத்தி வரை சென்று பிறகு அக்குள் கோட்டில் கீழிறங்கி 6 வது மற்றும் 7-வது விழா எலும்புகளின் மத்தியில் முடிகிறது.

 
புள்ளிகளும் தீரும் நோய்களும்

Sp 1 கால் கட்டைவிரல் நகத்தின் விளிம்பில் 0.1 சுன் மேலே அமைந்துள்ளது.

     மண்ணீரல் கோலாறுகள், மாதவிடாய் சம்பந்தப்பட்ட நோய்கள்.

Sp 3 கால் கட்டை விரலின் உள்பக்கம் மெட்டார்சல் எலும்பின் அருகில் தோலின் இரு நிலங்களும் சேரும் இடம்.

     கர்ப்பப்பை கோளாறு, அதிக இரத்த போக்கு.

Sp 4 இது sp 3 க்கு மேலே 1.5 சுன் தூரத்தில் உள்ளது.

      வயிற்றுப் போக்கு.

Sp 5 உட்புற கணுக்கால் உச்சியில் இருந்து 1 சுன் பக்கவாட்டில்

     உடலில் உள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்கும் புள்ளி.

Sp 6 உட்பக்க கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பில் இருந்து 3சுன் மேலே டிபியா எலும்பின் உட்பக்க ஓரத்தில் உள்ளது.

     எல்லா விதமான கர்ப்பப்பை கோளாறுகள், உதிரப்போக்கு, இரத்தம் சுத்தமாகும்

Sp 9 டிபியா எலும்பின் தலைப்பாகத்தின் உள்பக்க முனையின் கீழ் பள்ளத்தில் உள்ளது.

    முழங்காலுக்கு கீழே உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

 Sp 10 முழங்கால் முட்டி சிப்பியின் மேல் பகுதியில் உள்பக்க ஓரத்தில் இருந்து 2சுன் மேலே உள்ளது.

       அலர்ஜி, தோல் நோய்கள், மூட்டு வலி, மாதவிடாய் கோளாறுகள்.

Sp 15 தொப்புளில் இருந்து 4சுன் பக்கவாட்டில் உள்ளது.

      மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, அஜீரணம்.

Sp 18 உடலின் நடுநிலைக் கோட்டில் இருந்து 6சுன் தூரத்தில் 4வது 5வது விலா எலும்பின் மத்தியில் உள்ளது.

      பால்சுரப்பு தொடர்பான குறைபாடுகள், நெஞ்சு வலி.

Sp 21 அக்குளின் நேர் கீழே 6வது 7வது விலா எலும்பின் மத்தியில் உள்ளது.

       கல்லீரல் நோய்கள், விலா எலும்பு நோய்கள்.

GALL BLADDER - (பித்தப்பை)
சக்தி ஓட்டத் தன்மை-யாங்
மொத்த புள்ளிகள்-44
தொடர்புடைய உறுப்பு-பித்தப்பை
மூலகம்(Element)-மரம்
வெளிபுற உணவு உறுப்பு-கண்

பித்தப்பை சக்தி ஓட்டப்பாதை

   கண்ணின் வெளிப்புற ஓரத்தில் இருந்து 0.5 கன் வெளிப்பக்க வாட்டில் ஆரம்பித்து காதின் முன்புறத்தில் றீனு 19-க்கு 65 கீழே இறங்கி பின்பு நேராக தலைமன் பக்கவாட்டை அடைந்து காதின் மேல்மடலில் இருந்து 1.5 கன் துரத்தில் காதை வெளிப்பக்கமாக சுற்றி காதின் பின்புறம் காதின் கீழ்மடலுக்கு இணையாக கோட்டில் நிற்கிறது. பின்பு காதை சுற்றிய பாதைக்கு இணையாக மீண்டும் தலையின் பகவாட்டுப் பகுதி வழியாக நெற்றியின் முன்பக்கத்தை அடைந்து கண்ணின் கருவிழிக்கு நேர் மேலே புருவத்தில் இருந்து கன் மேலே உள்ள புள்ளியை அடைகிறது. பிறகு அங்கிருந்து பின் தலையின் முடிக் கோட்டிற்குள் நுழைந்து பின் தலையும் கழுத்தும் சேர்கின்றபள்ளத்தில் உள்ள புள்ளியை அடைந்து கழுத்தில் பக்கவாட்டு வழியாக காலை எலும்புக் குழிக்கு மேலே உள்ள தசையிலுள்ள புள்ளியை அடைந்து அங்கிருந்து தோள்பட்டையின் முன்பகக் வாட்டு வழியாக நிப்பிள் கோட்டிலே 7வது 3வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ள புள்ளியை அடைந்து அங்கிருந்து 26 son எனும்பு முடிகின்ற முனையில் அமைந்துள்ள புள்ளிக்குச் சென்று பிறகு சாய்வாக கீழிறங் தொப்புளின் மத்தியில் இருந்து வருகின்ற செங்குத்துக் கோடும் ஒன்றையொன் வெடு இடத்தில் உள்ள புள்ளியை அடைந்து அங்கிருந்து உடலின் பின்புறமத்தியக் கோட்டில் இருந்து பிட்டத்தின் 3ல் 2 பங்கு துரத்தில் உள்ள புள்ளியைக் கடந்து தொடையின் வெளிப்பு நடுப்பக்கமாக முழங்கால்வழியாகச் சென்று 4வது விரல்நகத்தின் வெளிப்புறகீழ் விளிம்பிற்கு மேலே 0 சுன் துரத்தில் முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்

GB 1 கண்ணின் வெளிப்புற ஓரத்தில் 0.5சுன் தூரத்தில் உள்ளது.

     கண்ணில் நீர்வடிதல், எரிச்சல், கூச்சம், தலை வலி, முகரநரம்பு வலி.

GB 2 வாயைத் திறக்கும்போது ஏற்ப்படும் பள்ளத்தில் Si19க்கு கீழே 0.5 சுன் தூரத்தில் உள்ளது.

     காது தொடர்பான அனைத்து குறைபாடு களும் (செவிடு உட்பட) நீங்கும்.

GB 3 இது GB 2க்கு இணையாக காது அருகில் பல் கடிக் கும்போது அசையும் பகுதி.

     காது தொடர்பான அனைத்து குறைபாடு களும் (செவிடு உட்பட) நீங்கும்.

GB 4 காதின் மேல் பகுதி பல் கடிக்கும் போது அசையும் பகுதி

      பித்த வாந்தி, பித்த தலைவலி நீங்கும்.

GB 14 புருவ மத்தியில் அரை இன்க் மேலே.

   கண்பார்வை தெளிவு முன்பக்க தலைவலி, சைனஸ்.

GB 25 12வது மார்பெலும்பின் முனைப்பகுதி

      சிறுநீரக நோய்கள் நீங்கும்.

GB 30 இடுப்பில் ஊசி போடும் இடம்

அனைத்து கால் நோய்களும் நீங்கும்.

GB 31 நின்று கொண்டு கைகளைத் தொடையை ஒட்டி வைத்தால் நடுவிரலின் நுனிபடும் இடம்.

      கால் பக்கவாதம், கால் வலி, தொடை நரம்புவலி.

.GB 34 முழங்காலில் உள்ள பிபுலா எலும்பின் தலைப்பகுதிக்கு நேர் கீழே உள்ளது, இது தசைகள் தசைநார்களுக்கு முக்கியப் புள்ளி.

       தசைகள், தசைநார் நோய்கள், கால் கை வலிப்பு, மனம் சார்ந்த நோய்கள். நரம்பு வலிகள்.

GB 37 வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 5சுன் நேர் மேலே உள்ளது.

      கண் நோய்கள்,

GB 38 வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து ௪சுன் நேர் மேலே உள்ளது.

       நரம்புகளின் இயக்கத்திற்கு முக்கியமான புள்ளி, சுளுக்கு, பக்கவாதம், சூலப்பிடித்தல்.

GB 41 பாதத்தின் மேற்புறம் 4வது 5வது கால் விரல் எழும்புகள் சேருமிடத்தில் உள்ளது.

      பாதமேற்புறம் வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி.

GB 43 4வது 5வது கால் வி

Sunday, 7 September 2025

Train coach position

🚆✨ இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள் – உங்களுக்கு தெரியுமா? ✨🚆

நம்ம வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் பண்ணாதவர்கள் மிகக் குறைவு தான். ஆனா, ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி அடையாளங்கள், பயன்பாடுகள் இருக்கிறது தெரியுமா? 🤔

இங்கே உங்களுக்கு ஒரு விரிவான கையேடு:

---

1️⃣ SLR Coach (Seating-cum-Luggage Rake)

🔹 எப்போதும் ரயிலின் முதல் & கடைசி பெட்டி.
🔹 Guard (காப்பாளர்) இருக்கும் இடம்.
🔹 பாதி பகுதி → Luggage/Parcel,
மற்றொரு பகுதி → General seating (Ladies, Divyang).
🔸 வெளியில் மஞ்சள்-கருப்பு சாய்வு கோடுகள் இருக்கும்.

---

2️⃣ General Coach (UR/GEN)

🔹 Reservation தேவையில்லை.
🔹 நிறம் → பச்சை அல்லது நீலம்.
🔹 ஜன்னல் → கம்பி மட்டும் (கண்ணாடி இல்லை).
🔸 மிக அதிகமாக crowd இருக்கும் coach இது தான்.

---

3️⃣ Sleeper Class (SL)

🔹 Reservation அவசியம்.
🔹 Lower, Middle, Upper berth (3 படுக்கைகள்).
🔹 நிறம் → நீலம்.
🔸 பொதுவாக இந்தியாவில் அதிகம் பயன்படும் coach.

---

4️⃣ AC 3-Tier (3A)

🔹 Sleeper போல, ஆனா குளிர்சாதன வசதி (AC).
🔹 3 படுக்கைகள் (L, M, U).
🔹 கண்ணாடி ஜன்னல் + பிளைண்ட்ஸ்.

---

5️⃣ AC 2-Tier (2A)

🔹 2 படுக்கைகள் மட்டும் (Lower & Upper).
🔹 Privacy curtain இருக்கும்.
🔹 வசதி அதிகம், செலவும் அதிகம்.

---

6️⃣ AC First Class (1A)

🔹 இந்திய ரயில்களில் மிகச் சிறந்த வசதி.
🔹 தனிப்பட்ட cabins, door lock facility.
🔹 அதிக privacy + அதிக ticket rate.

---

7️⃣ Chair Car (CC / 2S)

🔹 விமான இருக்கை மாதிரி Chairs.
🔹 CC → AC வசதி,
2S → Non-AC வசதி.
🔹 Short journey க்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.

---

8️⃣ Pantry Car (PC)

🔹 ஜன்னல் இல்லை, kitchen மட்டும்.
🔹 உணவு சமைத்து, பயணிகளுக்கு வழங்கப்படும்.

---

9️⃣ Parcel Van

🔹 பெரிய கதவுகள் மட்டும் இருக்கும்.
🔹 பயணிகள் இல்லை – சுமை மட்டும் எடுத்துச் செல்லப்படும்.

---

🔟 Engine (Loco)

🔹 முழு ரயிலின் சக்தி.
🔹 வகைகள்:

WAP → Passenger train (மின்சாரம்)

WDP → Passenger train (டீசல்)

WAG → Goods train

---

💡 அடுத்த முறை நீங்கள் ரயிலில் ஏறும்போது, பெட்டியை பார்த்தவுடனே அது எந்த வகை என்பதை அடையாளம் காணலாம்!

Friday, 13 December 2024

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்! 

🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது. 

கேரளாவில் உள்ள சிறந்த  கடற்கரைகளுக்கான உங்களின்  வழிகாட்டி இதோ, ஒவ்வொன்றையும் தனித்துவமாக்குவது மற்றும் நீங்கள் எப்படி அங்கு செல்லலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது! 

1) கோவளம் கடற்கரை -

 பிறை வடிவ கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கக் காட்சிகளுக்குப் பிரபலமானது. 🚗 எப்படி செல்வது: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 16 கி.மீ. 

2) வர்கலா கடற்கரை -

 வியத்தகு பாறைகள் மற்றும் இயற்கை கனிம நீரூற்றுகளுக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி அடைவது: திருவனந்தபுரத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. 

3) மராரி கடற்கரை - 

அமைதி தேடுபவர்கள் மற்றும் ஆயுர்வேத பின்வாங்கல்களுக்கு ஏற்றது. 🚗 எப்படி செல்வது: ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. 

4) ஆலப்புழா கடற்கரை - 

அதன் வரலாற்றுத் தூண் மற்றும் அருகிலுள்ள உப்பங்கழிகளுக்கான சின்னம். 🚗 எப்படி அடைவது: ஆலப்புழை நகரில் அமைந்துள்ளது, ரயில் அல்லது சாலை வழியாக அணுகலாம்.

 5) செராய் கடற்கரை - 

கடல் மற்றும் உப்பங்கழிகளின் கலவைக்கு பிரபலமானது, நீச்சலுக்கு ஏற்றது. 🚗 எப்படி செல்வது: கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 25 கி.மீ.

 6) பேக்கல் கடற்கரை - 

கடலைக் கண்டும் காணும் கம்பீரமான பேக்கல் கோட்டைக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி செல்வது: காசர்கோடு ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ.

 7) பையாம்பலம் கடற்கரை -

 பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனம் கொண்ட குடும்பத்திற்கு ஏற்ற இடம். 🚗 எப்படி செல்வது: கண்ணூர் நகர மையத்திலிருந்து 2 கி.மீ. 

8) கப்பாட் கடற்கரை -

 1498 இல் வாஸ்கோடகாமா தரையிறங்கும் இடமாக வரலாற்றுச் சிறப்புமிக்கது. 🚗 எப்படி அடைவது: கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ. 

9) கப்பில் கடற்கரை - 

தங்க மணல் மற்றும் உப்பங்கழிக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி செல்வது: காசர்கோடு நகரத்திலிருந்து 12 கி.மீ. 

10) வக்காடு கடற்கரை -

 நதி-கடல் சங்கமம் மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பிரபலமானது. 🚗 எப்படி செல்வது: மலப்புரத்திலிருந்து 40 கி.மீ.

 11) பதிஞ்சரேக்கரா கடற்கரை -

 புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களுக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி செல்வது: மலப்புரத்திலிருந்து 40 கி.மீ. 

12) கொல்லம் கடற்கரை -

 அழகிய காட்சிகளை வழங்கும் ஒரு வரலாற்று துறைமுக கடற்கரை. 🚗 எப்படி செல்வது: கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. 

13) முழப்பிலங்காடு டிரைவ்-இன் பீச் -

 தென்னிந்தியாவின் ஒரே டிரைவ்-இன் பீச்! 🚗 எப்படி செல்வது: கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. 

14) ஃபோர்ட் கொச்சி கடற்கரை -

 அதன் சீன மீன்பிடி வலைகள் மற்றும் காலனித்துவ வசீகரத்திற்கு பிரபலமானது. 🚗 எப்படி செல்வது: எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. 

15) சங்குமுகம் கடற்கரை -

 உள்ளூர் மற்றும் சூரியன் மறையும் பிரியர்களுக்கு ஏற்றது. 🚗 எப்படி செல்வது: திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 8 கி.மீ. 

16) கடற்கரை - 

படகுகள் மற்றும் பரந்த உப்பங்கழிகளுக்குப் புகழ்பெற்றது. 🚗 எப்படி அடைவது: அலப்பியில் எளிதாக அணுகலாம். 

17) பேப்பூர் கடற்கரை -

 அதன் கப்பல் கட்டும் தளம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. 🚗 எப்படி செல்வது: கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. 

18) சினேகதீரம் கடற்கரை -

 நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களைக் கொண்ட குடும்ப நட்பு கடற்கரை. 🚗 எப்படி செல்வது: திருச்சூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. 

19) கடற்கரை -

 உள்ளூர் கலாச்சாரம் மற்றும் சுவையான கடல் உணவுகளுடன் பரபரப்பானது. 🚗 எப்படி அடைவது: கோழிக்கோடு நகரில், எளிதில் அணுகலாம்.

Sunday, 21 July 2024

மனிதர்கள்

தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்:

1. உப்புமூட்டை மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர். 

2. கொசு மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள். 

3. ஆதிக்க மனிதர்கள்: இந்த நபர்கள் பெருமையை தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்  உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும்  விரும்புபவர்கள்.

4. முதலை மனிதர்கள்: இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கி பழகுவார்கள், மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது அந்த தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

5. பச்சோந்தி மனிதர்கள்: இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

6. கனவுக் கொலையாளிகள்: இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.

7. குப்பை மனிதர்கள்: இந்த நபர்கள் எதிர்மறை மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்மறையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நேர்மறையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும்.

வாழ்த்துக்கள் நண்பர்களே...

Monday, 27 June 2022

tips

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

சமையலில் செய்யக்கூடாதவை

சமையலில் செய்யக்கூடாதவை. 

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. 

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். 

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்... 

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

நம் உடலைப் பற்றி அறிவோம்..

நம் உடலைப் பற்றி அறிவோம்...

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். 
மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள் :-

1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.

3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

5. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.

6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.

தசை :-

1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கால்கள் :-

1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.

2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள் :-

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தியுண்டு.

மூளை :-

1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

இறப்பு :-

மனிதன் உயிரிழந்தப் பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்
மூளை- 10 நிமிடங்கள்
கால்கள்- 4 மணிநேரம்
தசைகள்- 5 நாட்கள்
இதயம்- சில நிமிடங்கள் √

Friday, 3 June 2022

சுதர்சன சக்கரத்தின் சுழலும்

*சுதர்சன சக்கரத்தின் சுழலும்* *வேகம் எவ்வளவு தெரியுமா*?

இணையத்தில் deiveegaa என்ற முகநூல் பகதி தளத்தில் இந்த பதிவினை படித்தேன். 

இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. 

இதை படித்த போது 'அட' என என்னை ஆச்சரியப்படுத்தியதால்  உங்களுக்கு பகிர்கிறேன்.

பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு?

இப்படி ஒரு கேள்வியை நான் உங்களை கேட்டால் என்னை எப்படி பார்ப்பீர்கள்? 

உங்களுக்கு இது கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட தோனலாம்.. 

ஆனால் இதில்  விஷயம் இருக்கிறது..

பக்தியில் சிறந்த பெரியவர்களிடம் இந்த கேள்வியை கேட்டால் கூட கொஞ்சம் யோசனை செய்வார்கள். 

ஆனால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

சரி,பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு?என்ற கேள்விக்கான அறிவியல் பூர்வமான பதிலை தெரிந்து கொள்வோமா!

திருமால் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தின் சுழல் வேகம் 30கிமீ/வினாடி என்று துல்லியமாக கூற முடியும். 

எப்படிடிடிடிடி??????.

திருமால் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரம், சிவபெருமான் அளித்தது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு பக்தி செய்தி. 

திழருவீழிமிழலை,திருமாற்பேறும் ஆகிய இந்த இரண்டு ஊர்களும் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்

சிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்ச்சித்த, நாராயண மூர்த்தி, ஒருநாள் மலரொன்று குறையவே ,தன் கண்ணொன்றை எடுத்து இறைவன் திருவடியில் சமர்பிக்க, மகிழ்ந்த இறைவன் தான் கையில் வைத்திருந்த ,
சக்கரப்படை என்ற சுதர்ன சக்கரத்தை நாராயணனுக்கு வழங்கினான் என்பது வரலாறு.

திருமாலுக்கு சிவபரம்பொருள் வழங்கிய சக்கரம் சிவனிடம் எப்படி வந்தது? என்று ஆராயப் போனால் அதற்கு நாம் சலந்தராசுர வதம் என்ற, ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்

இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அசுரன் சலந்தரன்.

இறைவனை தவிர யாராலும் அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு திருக்கயிலாயம் நோக்கி வந்து, இறைவனுடன் போரிட வந்தான்

இறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, யாரப்பா நீ??என்றார்

நான் சலந்தரன்!! கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.

கயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது!!

கிழவரே!! என்னை பற்றி உமக்கு தெரியாது!!

சரி தெரிந்து கொள்கிறேன்!! 

உன் வலிமையை சோதித்து பார்ப்போம்!! 

நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன் 

அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன்* என்ற சிவ பெருமான் தன் கால் விரலால் தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்.

கேவலம் மண்ணை பெயர்த்து தலையில் வைப்பது ஒரு சாதனையா?? என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து அந்த சக்கரத்தை தூக்க முயற்சித்தான்..

சக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சுழல துவங்கியது!!

அதெப்படி சக்கரம் எப்படி உடனே சுழல துவங்கியது? என்கிற ஒரு  கேள்வி உங்களுக்குள் வரலாம்!

சக்கரம் எப்படி உடனே சுழல துவங்கியது?? என்று அறிய ஆவலென்றால் உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை தட்டி எழுப்புங்கள்..

இயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் எந்த ஒரு பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி

அதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே!! 

ஏன்?? என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணித்திருக்கிறோம் என்பதுதான் பொருள்

அது போல பூமியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த சிவனால் வரையப்பட்ட மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில் சுழல துவங்கி விட்டது.

புவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது 30KM/Second

புவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை!!

சுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்!!

இந்த சக்கரமே சிவபெருமான் 
மூலம் பெருமாளிடம் வந்தது.

இந்த சக்கரமே திருமால் வேண்டி
விரும்பியது,

இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை
தாங்கி வீசியெறிய வலிமையும்
கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து
"சக்கரதான மூர்த்தியாக நின்றான்

சுதர்சன சக்கரம் குறித்து இன்னும் அறிந்துகொள்வோமா!

*சுதர்சன சக்கரத்தின் மகிமை*
*சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்!*

கிருஷ்ணரின் கையில் உள்ளது சுதர்சன சக்கரம் என்பது நமக்கெல்லம் தெரியும்.

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

'சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். 

சுதர்சன சக்கரம்
மற்ற ஆயுதங்களைப் போல் 
இல்லை. 

எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. 

அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.

சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும் 

மகாவிஷ்ணுவோ,இதை தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். 

எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.

அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.

எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். 

மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. 

எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... 

அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

இன்னொரு விஷயம்... சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? 

சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. 

அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். 

மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. 

நம் எதிர்ப்புகளையும் 
எதிரிகளையும் அழித்து 
நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்
என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். 

இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :

ஓம் நமோ சுதர்சன சக்ராய
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா

மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை முதன் முதலில் சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.

அதன் பிறகு தேவையானபோது 3 தடவை ஜபித்தால் எத்தகைய ஆபத்தில் இருந்தும் தப்பிக்கலாம். 

அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் போல் காக்கும்.

Wednesday, 25 May 2022

அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்

அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்

1.வசியம்:-

*1.* சீதா செங்கழுநீர் - ராஜவசியம்
*2.* நீல ஊமத்தை - ஸ்திரீ வசியம்
*3.* வெள்ளை எருக்கன் வேர் - லோக வசியம்
*4.* விஷ்ணுகிரந்தி - சொர்ன வசியம்
*5.* கருத்தபாசம்பை - சர்வ வசியம்
*6.* வெள்ளை குன்றிவேர் - மிருக வசியம்
*7.* பொற்றலை கையான்தகரை - தேவதை வசியம்
*8.* செந்நாயுருவி - மனித வசியம்

2. மோகனம்:-

*1.* பொன் ஊமத்தை - ஸ்திரி மோகனம்
*2.* கோரைக்கிழங்கு - மிருக மோகனம்
*3.* வெள்ளை ஊமத்தை - பதவி மோகனம்
*4.* ஆலம் விழுது - ராஜ மோகனம்
*5.* கஞ்சா - சொர்ண மோகனம்
*6.* நன்னாரி - ஜனமோகனம்
*7.* மருள் ஊமத்தை - தெய்வ மோகனம்
*8.* கிராம்பு - சர்வ மோகனம்

3. ஸ்தம்பனம்:-

*1.* கட்டுக்கொடி - ஜல ஸ்தம்பனம்
*2.* பாலக்குரண்டி - அக்னி ஸ்தம்பனம்
*3.* பிரண்டை - கிராணி  ஸ்தம்பனம்
*4.* நத்தை சூரி - காய  ஸ்தம்பனம்
*5.* சக்தி சாரணை  - ஆயுத ஸ்தம்பனம்
*6.* பூமிசர்க்கரைகிழங்கு -சுக்கில ஸ்தம்பனம் 
*7.* குதிரை வாலி - கெர்ப ஸ்தம்பனம்
*8.* நீர்முள்ளி - வியாதி ஸ்தம்பனம்

 4‌. உச்சாடனம் :-

*1.* நரி விரட்டி - மிருக உச்சாடனம்
*2.* மான்செவிக் கண்ணி - நாலி உச்சாடனம்
*3.* சுண்ட வேர் - பூத உச்சாடனம்
*4.* கண்டன் கத்திரி - ராஜ உச்சாடனம்
*5.* தேள் கொடுக்கு செடி - விஷ உச்சாடனம்
*6.* நாறுகரந்தை - வியாதி உச்சாடனம்
*7.* கொட்டான் கரந்தை - மோகன உச்சாடனம்
*8.* பெரும் கிலு கிலுப்பை - தெய்வ உச்சாடனம்.
  
5.வித்வேசனம் :-

*1.* கருத்தி காக்கிலை - தெய்வ  எச்சனை
*2.* வெள்ளை காக்கிலை - சர்வ தெய்வ எச்சனை
*3.* திருகு கள்ளி -பூத எச்சனை
*4.* செங்கன்தாரி - சர்வ எச்சனை
*5.* காட்டாமணக்கு - சர்வ பூத எச்சனை
*6.* கீழ் நெல்லி - பூமி எச்சனை
*7.* ஆடு தீண்டபாளை - சர்வ வித்துவேசனம்
*8.* பீனைக்காலி- வியாதி எச்சனை

6. ஆக்ருஷணம் :-

*1.* சிறு முன்னை - தெய்வ ஆக்ருஷணம்
*2.* குப்பைமேனி - துட்டருக ஆக்ருஷணம்
*3.* சிறிய நங்கை - பிசாசு ஆக்ருஷணம்
*4.* அழுகண்ணி - சர்வ ஆக்ருஷணம்
*5.* துடரி - மிருக ஆக்ருஷணம்
*6.* தலை சுருளி - ராஜ ஆக்ருஷணம்
*7.* உள்ளொடி விடிவெர்வு - பெண் ஆக்ருஷணம்
*8.* கார்திகை கிழக்கு - விஷ ஆக்ருஷணம்

7.பேதனம் :-

*1.* கோழி அவரை - தெய்வ பேதனம்
*2.* காட்டு செம்பவளை -  லோக பேதனம்
*3.* வட்டத் துத்தி - அக்னி பேதனம்
*4.* சங்கம் வேர் - பூத பேதனம்
*5.* மாவிலங்கு - தெய்வ பேதனம்
*6.* நீர்மேல் நெருப்பு - பிசாசு பேதனம்
*7.* சீந்தி - சத்ரு பேதனம்
*8.* பாதிரி -ரோக பேதனம்

8. மாரணம் :-

*1.* கார்த்திகை கிழங்கு - பிசாசு மரணம்
*2.* நெறிவிகம் - சர்வ மாரணம்
*3.* ஒடிவை - மிருக மாரணம்
*4.* கொடிவேலி - வியாதி மரணம்
*5.* நச்சுப்புல் - விச மாரணம்
*6.* மறு தோன்றிய  - பூத பிசாசு மாரணம்
*7.* பச்சை நாவி - மனித மாரணம்
8. எட்டி - விஷ மாரணம்.


நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள்

🌿 நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள் — உங்கள் உடல் ஏன் சோர்வடைகிறது என்பதற்கான உண்மை — இன்றைக்கு பலர் இப்படிச் சொல்கிறார்கள்👇 > “...