Thursday, 3 May 2018

கசகசா

கசகசாவின் பயன்கள்:


கசகசாவை, மாதுளம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

கசகசா சாலாமிசிரி பூனைக்காலி விதை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து கொள்ளவும்  இதில் ஐந்து கிராம் பொடியை , தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

கசகசா முந்திரி பருப்பு , பாதாம் பருப்பு தலா 100 கிராம் எடுத்து அரைத்துக்கொள்ளவும் . இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

கசகசா , மாம்பருப்பு – இரண்டையும் விழுதாக அரைத்து பத்து கிராம் அளவு காலை, மாலை இருவேளையும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி சீதபேதி போன்றவை குணமாகும்.

கசகசா முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும் முகம் அழகு பெறும்.

கசகசா ஜவ்வரிசி பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்புவலி குணமாகும்.

கசகசா முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல் , படை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

கொத்தமல்லியுடன் 20 கிராம் கசகசா 3 கிராம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...