Wednesday, 20 June 2018

கணிப்பொறி


கணிப்பொறியின் வரலாறு 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், மனிதன் வியாபாரத்தில் ஈடுபட்ட போது பெருவாரியான வரவு செலவு கணக்குகளை கணக்கீடு செய்வதற்கு சிரமப்பட்டதால் ஒரு இயந்திர கணிப்பொறியின் தேவையை உணர்ந்தான். எனவே, அக்காலக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபேகஸ் (Abacus) என்னும் சாதனம் அன்றைய மனிதனுக்கு  பேருதவியாக இருந்தது. இக்கருவி மணிச்சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு செவ்வக சட்டத்தில் வரிசையாக பொருத்தப்பட்ட கம்பிகளில் மணிகள் கோர்க்கப்பட்ட அமைப்பை கொண்டிருந்தது. இக்கருவிதான் 1600 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது.

முதல் எந்திர கணிப்பான் கி.பி.1623-ல்  வில்ஹெல்ம் சிக்ஹார்டு (Wilhem Schickard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டல், கழித்தல் கணக்குகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய வல்லதாக இருந்தது. மேலும், இது பெருக்கல், வகுத்தல் கணக்குகளை ஓரளவிற்கு கால்குலேட் செய்வதற்கு உதவி புரிந்தது. பின்னர், அதே ஆண்டில் பிளெய்ஸி பாஸ்கல் (Blaise Pascal) என்னும் அறிவியல் அறிஞர் இதே கருவியை புதுவகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தினார்.

இதனையடுத்து, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பீடு கருவிகளின் குறைபாடுகளை நீக்கி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கீடுகளை ஆட்டோமேட்டிக்காக கால்குலேட் செய்ய லெபனீஸ் உருளை (Leibniz wheel) என்னும் கருவி 1946 காட்ஃரீடு வில்ஹெல்ம் லெபனீஸ் (Gottried Whilhelm Leibniz) என்ற சயின்டிஸ்ட் கண்டுபிடித்தார்.

கணக்கீட்டுத்துறையின் திருப்பு முனையாக அமைந்த கால கட்டம் 19-ஆம் நூற்றாண்டாகும். 1791 முதல் 1871 வரை வாழ்ந்த கனித மேதை சார்லஸ் பேப்பேஜ் (Charless Babbage) என்பவர் 1833-ல் (Different Engine, Analytical Engine) என்ற இரு கணக்கீட்டு தத்துவங்களை வடிவமைத்தார். இத்தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கருவியானது நிராவித்திறனால் இயக்கப்பட்டது. 20-ஆம் நூற்றான்டில் (1940-1945) மின்னனுத்திறனின் வருகைக்குப் பிறகு பேப்பேஜின் மேற்கண்ட தத்துவதுவங்களின் அடிப்படையில் மின்னனுக் கணிப்பொறிகள் அமைக்கப்பட்டன. எனவே, பேப்பேஜ் அவர்கள் கம்ப்யூட்டர்களின் தந்தை (Father of Computers) என்றழைக்கப்படுகிறார்.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் - மேலோட்டப் பார்வை

கணினி முதலில் ஒரு பெரிய அரையில் வைக்கும் அலவுக்கு உருவாக்கப்பட்டு பிறகு காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நமது கைக்குள் அடங்கும் அலவுக்கு தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. பழைய காலத்து கணினிகள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும் அதன் செயல் திறன் மற்றும் நினைவாற்றலில் மிக மோசமாகவே இருந்தது. எனவே சாதறன மனிதனால் அதனை இயக்கமுடியாது. அதற்கு வள்ளுனர்கள் தேவைப்பட்டார்கள் ஏன்என்றால் அந்த பழைய கணினிகளிள் மென்பொருளின் ஆதிக்கம் பிரித்தியோகமாக இல்லை. மென்பொருள் வசதி குறைவாகவும் மென்பொருளை ஏற்றுக்கொள்ளாத எந்த கணினியும் சிறந்த கணினியாக இருக்கமுடியாது

தற்காலத்து கணினிகள் சிரியதாகவும், அதிக நினைவாற்றல் கொண்டதாகவும் உள்ளதால், ஏறாளமான மென்பொருள்களை கையாலும் தன்மையுடைதாக உள்ளன. எனவே பயனர்களுக்காக உருவாகப்பட்ட மென்பொருள் கட்டமைப்புகளை கணினியில் நிருவி,  பலத்துறைகளிள் அதன் பயன்களை அனுபவித்து வருகின்றனர். கணினி மென்பொருள்கள் சிரிய தானியங்கி கார்களில் இருந்து, வாகனங்களை கட்டுபடுத்தும் Traffic light controller, மின்சாரத்தை சேமிக்கும் inverters units, தொலைக்காட்சியின் setup box, மற்றும் தகவல் பறிமாற்றத்தை எளிது படுத்தும் கைபேசி என... எல்லா வற்றிலும் மென்பொருளின் ஆதிக்கம்  உள்ளதால் மனிதனின் செயலிலும் மாற்றங்கள் பல கண்டுவிட்டான். மென்பொருளின் உதவியால் வங்கிகணக்குகளையும் மற்றும் பண பறிவர்தனைகளையும் ஒரே ஒரு கணினியின் உதவியால் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்களின் அன்றாட நடவடிக்கைகளை ஒரே ஒரு மனிதரால் கையாலும் நிலைக்கு கணினி மற்றும் அது சார்ந்த தகவல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது. 

தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்ப்பட்ட அபரிவிதமான அறிவியல் வளர்ச்சி... பல பிரிவுகலாக உள்ள இந்த உலகத்தை மற்றும் அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் எல்லோரும் அறிந்துக்கொள்ளும் வகையிலும், எல்லோரும் அதனை மாற்றி அமைக்கும் வகையிலும் இணையத்தின் வாயிலாக எளிதாக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஒரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறியமுடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறையகளிலும் பயன்படுகிறது.

கணினி என்பதன் பொருள்

கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன; அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.

பொதுவாக கணினி  இயந்திரம் - வன்பொருள்  (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). இதுதான் உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான். மேலும் விவரங்களுக்கு கணினி செயல்படும் தத்துவம்கணினி இயக்கமுறைமை என்ற பக்கங்களை பார்க்கவும்.

கணினியின் வரலாறு

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின்  மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார்.



மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இணையம்:  இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல்என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.

கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்திப பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்தபிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் ஆழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக்  காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.


மின்னஞ்சல் மற்றும் வலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில உதவிக்குறிப்புகள்.

•    மின்னஞ்சல் இணைப்புகளைத் திறக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மின்னஞ்சல் இணைப்புகள் (மின்னஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்படும் கோப்புகள்) வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம். உங்களுக்குத் தெரியாத ஒரு நபரிடமிருந்து வந்த இணைப்பை ஒருபோதும் திறக்க வேண்டாம். அனுப்புநரை உங்களுக்குத் தெரியும், ஆனால் அவரிடமிருந்து இணைப்பை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால், அதைத் திறப்பதற்கு முன் அதை அவர்தான் அனுப்பினாரா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஒரு மின்னஞ்சல் செய்தியை எப்போது நம்பலாம்?, மின்னஞ்சல் வைரஸ்களைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.
•    உங்கள் தனிநபர் தகவலை கவனமாகப் பாதுகாக்கவும். ஒரு வலைத்தளம் உங்கள் கடன் அட்டை எண், வங்கி விவரங்கள், அல்லது பிற தனிநபர் தகவல்களைக் கேட்டால், உங்களுக்கு அந்த வலைத்தளத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதன் பரிமாற்ற அமைப்பு பாதுகாப்பானதுதானா என்று சரிபார்க்கவும். ஒரு வலைத்தளத்தை எப்போது நம்பலாம்? என்பதைப் பார்க்கவும்.
•    Internet Explorer -இல் உள்ள ஃபிஷிங் வடிகட்டியைப் பயன்படுத்தவும். ஃபிஷிங் என்பது மோசடி மின்னஞ்சல் செய்திகளை அல்லது வலைத்தளங்களை உருவாக்கி கணினிப் பயனர்களிடமிருந்து தனிநபர் தகவலை அல்லது நிதித் தகவலை தந்திரமாகப் பெறுதல். மோசடி மின்னஞ்சல் செய்தி அல்லது வலைத்தளம் ஒரு வங்கி, கடன் அட்டை நிறுவனம், அல்லது ஒரு பிரபல இணைய விற்பனையகம் என்பது போல நம்பகமான ஒரு மூலத்திலிருந்து வருவது போல் தெரியும். ஃபிஷிங் வடிகட்டி, ஃபிஷிங் வலைத்தளங்களைக் கண்டுபிடித்து உங்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கிறது. ஃபிஷிங் வடிகட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.
•    மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் மிகைஇணைப்புகளை கிளிக்செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மிகைஇணைப்புகள் (நீங்கள் கிளிக் செய்யும்போது வலைத்தளங்களைத் திறக்கும் இணைப்புகள்) பெருமளவில் ஃபிஷிங் மற்றும் வேவுபொருள் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை வைரஸ்களையும் பரப்பக்கூடும். நீங்கள் நம்பும் மின்னஞ்சல் செய்திகளில் இருக்கும் இணைப்புகளை மட்டுமே கிளிக் செய்யவும்.
•    நீங்கள் நம்பும் வலைத்தளங்களிலிருந்து மட்டுமே துணைநிரல்களைநிறுவவும். ActiveX கட்டுப்பாடுகள் உள்பட வலை உலாவித் துணைநிரல்கள் கருவிப் பட்டிகள், பங்கு நிலவரம் காட்டும் நிரல்கள், வீடியோ, அசைவூட்டம் போன்றவற்றை வலைப்பக்கங்கள் காண்பிக்க வழிசெய்கின்றன. இருந்தாலும், துணைநிரல்கள் வேவுபொருட்களையும் பிற தீங்குதரும் மென்பொருட்களையும் கூட நிறுவக்கூடும். ஒரு வலைத்தளம் ஒரு துணைநிரலை நிறுவும்படி கேட்டால், நீங்கள் அதை நிறுவுவதற்கு முன் அதன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். நீங்கள் ActiveX கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டுமா?, Internet Explorer துணைநிரல்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஆகியவற்றைப் பார்க்கவும்.

Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்

Windows -க்கு Microsoft தவறாமல் அவ்வப்போது முக்கியமான புதுப்பித்தல்களை(windows updats) வழங்குகிறது. இவை உங்கள் கணினியைப் புதிய வைரஸ்கள் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். இந்தப் புதுப்பித்தல்கள் உங்களுக்கு மிக விரைவாகக் கிடைக்க, தானியங்கு புதுப்பித்தலை இயக்கவும். பிறகு நீங்கள் உங்கள் கணினியில் முக்கியமான Windows பிழைநீக்கு நிரல்கள் இல்லையோ என்று கவலைப்படத் தேவையில்லை.

புதுப்பித்தல்கள் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்போது பின்னணியில் பதிவிறக்கப்படும். புதுப்பித்தல்கள் காலை 3.00 மணிக்கு நிறுவப்படுகின்றன. நீங்கள் விரும்பினால் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு முன் உங்கள் கணினியை அணைப்பதாக இருந்தால் நீங்கள் அணைப்பதற்கு முன் புதுப்பித்தல்களை நிறுவலாம். இல்லையெனில், Windows நீங்கள் அடுத்த முறை உங்கள் கணினியைத் தொடங்கும்போது அவற்றை நிறுவும்.

தானியங்கு புதுப்பித்தலை இயக்க:

1.     Windows புதுப்பித்தலை கிளிக் செய்து திறக்கவும்.
2.    அமைப்புகளை மாற்று என்பதை கிளிக் செய்யவும்.
3.    புதுப்பித்தல்களைத் தானாக நிறுவு (பரிந்துரைக்கப்பட்டது) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
4.    பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்கள்(recamendad updates) என்பதற்குக் கீழ், புதுப்பித்தல்களைப் பதிவிறக்கும்போது, நிறுவும்போது, அல்லது அவை பற்றி எனக்குத் தெரிவிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட புதுப்பித்தல்களையும் சேர் என்ற தேர்வுப் பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும், பிறகு சரி(ok) என்பதை கிளிக் செய்யவும்.   If you are prompted for an administrator password or confirmation, type the password or provide confirmation.
Windows தானியங்கு புதுப்பித்தலைப் புரிந்துகொள்ள என்பதையும் பார்க்கவும்.

நிலையான பயனர் கணக்கு ஒன்றைப் பயன்படுத்தவும்.

நீங்கள் உங்கள் கணினியில் உள்நுழையும்போது, Windows உங்கள் பயனர் கணக்கு என்ன வகையானது என்பதைப் பொருத்து உங்களுக்குக் குறிப்பிட்ட அளவு உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழங்குகிறது. பயனர் கணக்குகள் (user account)மூன்று வகையானவை: நிலையானவை(standard), நிர்வாகிக் கணக்குகள்(administrator), விருந்தினர்(guest) கணக்குகள்.

நிர்வாகிக் கணக்கில்(administrator account) கணினி முழுவதையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், நிலையான கணக்கு ஒன்றைப் பயன்படுத்தினால் உங்கள் கணினி மேலும் பாதுகாப்பாக இருக்கும். நிலையான கணக்கைப் பயன்படுத்தினால், நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது மற்றவர்கள் (அல்லது ஹாக்கர்கள்) உங்கள் கணினியை அணுகினால் கூட அவர்களால் கணினியின் பாதுகாப்பு அமைப்புகளைக் குலைக்கவோ மற்ற பயனர் கணக்குகளை மாற்றவோ முடியாது.
உங்கள் கணக்கு எந்த வகை என்று கண்டுபிடிக்க
•     பயனர் கணக்குகள் என்பதை கிளிக் செய்து திறக்கவும்.
கணக்கு வகை உங்கள் பெயருக்குக் கீழ் தெரியும்.


படம் பயனர் கணக்கு விவரம் பற்றி கூறுகிறது.

நீங்கள் தற்போது ஒரு நிர்வாகிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை நிலையான கணக்காக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ள ஒரு பயனரின் கணக்கு வகையை மாற்ற என்பதை கிளிக் செய்யவும்.
பயனர் கணக்குகள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

கணினியை பாதுகாக்க பாதுகாப்புச் சுவரைப் பயன்படுத்தவும்.

பாதுகாப்புச் சுவர் என்பது இணையத்திலிருந்து அல்லது ஒரு பிணையத்திலிருந்து வரும் தகவலைச் சோதித்து நிராகரிக்கும் அல்லது உங்கள்  கணினிக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள். இதன் செயல்பாடு உங்கள் பாதுகாப்புச் சுவர் அமைப்புகளைப் பொருத்து அமையும். இந்த முறையில் பாதுகாப்புச் சுவர் உங்கள் கணினியை ஹாக்கர்களும் தீங்குதரும் மென்பொருட்களும் அணுகாமல் தடுக்கிறது.

Windows பாதுகாப்புச் சுவர் Windows -க்குள் அமைக்கப்பட்டிருக்கிறது; இது தானாகவே இயக்கப்படுகிறது.


படத்தில் பாதுகாப்புச் சுவர் இயங்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.

இணையத்திலிருந்து அல்லது பிணையத்திலிருந்து தகவல் பெற வேண்டிய ஒரு நிரலை - உதாரணமாக, ஒரு துரிதச் செய்தி நிரல் அல்லது பல ஆட்டக்காரர்கள் ஆடும் பிணைய விளையாட்டு - திறக்கிறீர்கள் என்றால், அந்த இணைப்பைத் தடுக்க விரும்புகிறீர்களா அனுமதிக்க விரும்புகிறீர்களா என்று பாதுகாப்புச் சுவர் கேட்கும். நீங்கள் இணைப்பை அனுமதித்தால், Windows பாதுகாப்புச் சுவர் அதற்கு ஒரு விதிவிலக்கை உருவாக்கும். இதனால் அந்த நிரல் மீண்டும் தகவல் பெற வேண்டியிருக்கும்போது பாதுகாப்புச் சுவர் உங்களைத் தொந்தரவு செய்யாது.
பாதுகாப்புச் சுவர்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வைரஸ் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வைரஸ்கள் (viruses), நச்சுப்பெருக்கிகள்(worms), டிரோஜன்(trojan) ஹார்ஸ்கள்(horses) ஆகியவை, பாதுகாப்பற்ற கணினிகளை இணையத்தைப் பயன்படுத்தித் தாக்குவதற்கு ஹாக்கர்கள் உருவாக்கும் நிரல்கள். வைரஸ்களும் நச்சுப்பெருக்கிகளும் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு கணினியிலிரு்து கணினிக்குப் பரவக்கூடியவை; டிரோஜன் ஹார்ஸ்கள், ஸ்கிரீன் சேவர் போல் ஒழுங்கானதாகத் தெரியும் ஒரு நிரலுக்குள் மறைந்துகொண்டு கணினிக்குள் நுழைகின்றன. சேதம் ஏற்படுத்தும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் ஆகியவை உங்கள் நிலை வட்டில்(hard disk) உள்ள தகவலை அழிக்கக்கூடும் அல்லது உங்கள் கணினியை முழுவதுமாகச் செயலிழக்க வைத்துவிடக்கூடும். இன்னும் சில தீம்பொருட்கள் நேரடியாகச் சேதம் விளைவிக்காது, ஆனால் உங்கள் கணினியின் செயல்திறனையும் ஸ்திரத்தன்மையையும் கணிசமாகக் குறைத்துவிடும்.
வைரஸ் தடுப்பு நிரல்கள்(antivirus programs) உங்கள் கணினியில் இருக்கும் மின்னஞ்சலிலும் பிற கோப்புகளிலும் வைரஸ்கள், நச்சுப்பெருக்கிகள், டிரோஜன் ஹார்ஸ்கள் உள்ளனவா என்று ஸ்கேன் செய்கின்றன. வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வைரஸ் தடுப்பு நிரல் அது உங்கள் கணினியையும் கோப்புகளையும் சேதப்படுத்துவதற்கு முன் அதை விலக்கி வைக்கிறது (தனிமைப்படுத்தி வைக்கிறது) அல்லது முற்றிலுமாக நீக்குகிறது.
Windows -இல் வைரஸ் தடுப்பு நிரல் இல்லை(windows os will not come with antivirus software package), ஆனால் உங்கள் கணினி உற்பத்தியாளர் அதை நிறுவியிருக்கக்கூடும். உங்கள் கணினியில் வைரஸ் தடுப்பு நிரல் பாதுகாப்பு இருக்கிறதா என்று கண்டறிய பாதுகாப்பு மையத்தைப் பார்க்கவும். அது இல்லை என்றால், Microsoft வைரஸ் தடுப்புக் கூட்டாளர்கள் (www.microsoft.com)  என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று ஒரு வைரஸ் தடுப்பு நிரலைக் கண்டுபிடிக்கவும்.
ஒவ்வொரு நாளும் புதிய வைரஸ்கள் அடையாளம் காணப்படுவதால், தானாகப் புதுப்பித்துக்கொள்ளும் திறனுள்ள வைரஸ் தடுப்பு நிரல்(antivirus software) ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வைரஸ் தடுப்பு மென்பொருள் புதுப்பிக்கப்படும்போது அது தான் சோதிக்க வேண்டிய வைரஸ்களின் பட்டியலில் புதிய வைரஸ்களைச் சேர்க்கிறது. இது உங்கள் கணினி மீது புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படாமல் தடுக்கிறது. வைரஸ் பட்டியல் பழையதாகிவிட்டால் உங்கள் கணினி புதிய அபாயங்களுக்கு இலக்காகக்கூடும். வழக்கமாகப் புதுப்பித்தல்களுக்கு வருடாந்தர சந்தா கட்டணம் ஒன்று செலுத்த வேண்டியிருக்கும். தவறாமல் புதுப்பித்தல்களைப் பெற சந்தாவைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

எச்சரிக்கை:   நீங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றால், உங்கள் கணினியைத் தீங்குதரும் மென்பொருட்கள் சேதப்படுத்தலாம். உங்கள் கணினி மூலம் மற்ற கணினிகளுக்கு வைரஸ்கள் பரவும் ஆபத்தும் இருக்கிறது.
வைரஸ்கள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதையும் பார்க்கவும்.

வேவுபொருள் பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

வேவுபொருள்(spyware) என்பது ஒரு வகைத் தீம்பொருள். இது பொதுவாக உங்களிடம் முறையாக அனுமதி பெறாமலே விளம்பரங்களைக் காண்பிக்கக்கூடும், உங்களைப் பற்றித் தகவல் சேகரிக்கக்கூடும், அல்லது உங்கள் கணினியில் அமைப்புகளை மாற்றக்கூடும். உதாரணமாக, வேவுபொருட்கள்(spyware) உங்கள் வலை உலாவியில் தேவையற்ற கருவிப்பட்டிகள், இணைப்புகள், அல்லது பிடித்தவையை நிறுவலாம், உங்கள் இயல்புநிலை முகப்புப் பக்கத்தை மாற்றலாம், அல்லது அடிக்கடி விழிதிரை விளம்பரங்களைக் காண்பிக்கலாம். சில வேவுபொருட்கள் நீங்கள் கண்டுபிடிக்கும் வகையில் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது; ஆனால் நீங்கள் பார்க்கும் வலைத்தளங்கள் அல்லது நீங்கள் தட்டச்சு செய்யும் உரை போன்ற முக்கியமான தகவல்களை அவை ரகசியமாகச் சேகரிக்கும். பெரும்பாலான வேவுபொருட்கள் நீங்கள் பதிவிறக்கும் இலவச (free downladed software) மூலம் நிறுவப்படுகின்றன, ஆனால் சில சமயங்களில் ஒரு வலைத்தளத்திற்குச் சென்றாலே வேவுபொருட்கள் நிறுவப்பட்டுவிடுகின்றன.

உங்கள் கணினியை வேவுபொருட்கள் தாக்காமல் இருக்க, வேவுபொருள் தடுப்பு நிரல் (anti spyware) ஒன்றைப் பயன்படுத்தவும். Windows -இன் vista பதிப்பில்  Windows Defender என்ற வேவுபொருள் தடுப்பு நிரல் ஒன்று உள்ளது. இது இயல்புநிலையாக  இயக்கப்படுகிறது. உங்கள் கணினியில் வேவுபொருட்கள் நிறுவிக்கொள்ள முயற்சிக்கும்போது Windows Defender உங்களை எச்சரிக்கிறது. அது உங்கள் கணினியில் வேவுபொருட்கள் உள்ளனவா என்று பார்த்து அகற்றவும் செய்யும்.

ஒவ்வொரு நாளும் புதிய வேவுபொருட்கள் தோன்றுவதால், மிகச் சமீபத்திய வேவுபொருள் அபாயங்களைக் கண்டுபிடிக்கவும் பாதுகாத்துக்கொள்ளவும் Windows Defender தவறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் Windows -ஐப் புதுப்பிக்கும்போதெல்லாம் தேவையெனில் Windows Defender -உம் புதுப்பிக்கப்படும். மிக உயர்ந்த அளவு பாதுகாப்பைப் பெற, Windows -ஐத் தானாகப் புதுப்பித்தல்களை நிறுவும்படி அமைக்கவும் (கீழே பார்க்கவும்).

வேவுபொருள்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், Windows Defender -ஐப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் பார்க்கவும்.

கணினியில் உள்ள நிழற்படங்களை கையாலுதல்

கணினியில் நிழற்படங்களை கையாளுதல் மிகஎளிது. நாம் நம் கணினியில் உள்ள நிழற்பட தொகுப்புகளை கண்கானிக்கும் நிரலை தெளிவாக சிக்கள்கல் இல்லாமல் பயன்படுத்தும்போது நமது தரவுகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நாம் நினைக்கும் வண்னம் கணினியில் செயல்படும்.

ஒரு படத்தைச் சுழற்ற -  rotate a picture
நிழற்படத் தொகுப்பில் செங்குத்தான படங்கள் பக்கவாட்டாகத் திரும்பியது போல் தெரியலாம். இந்தப் படங்களை சரியான திசையில் வைக்க இடஞ்சுழியாகச் சுற்று (rotate left) என்ற பொத்தானை  அல்லது வலஞ்சுழியாகச் சுற்று (rotate right) பொத்தானை  கிளிக் செய்யவும்.

மேல் உள்ள படத்தில் நிழற்படம் சுழற்றப்பட்டுள்ளது,சிறுஉருவம் சுழற்றுவதற்கு முன்பும் (இடது) சுழற்றியதற்குப் பின்பும் (வலது)
ஒரு படத்தை முழு அளவில் பார்க்க - view a picture at a full size
நிழற்படத் தொகுப்பு சாளரத்தைப் (picture gallery window) நிரப்பும் அளவிற்கு (full size) ஒரு படத்தைப் பார்க்க, படத்தை இரு-கிளிக் செய்யவும். சாளரத்தின் வலப்பக்கத்தில் உள்ள தகவல் பலகம், படத்தைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும். இது படத்திற்குக் குறிக்குழுக்களைச் சேர்க்கவும் உதவும் (கீழே "படங்களுக்குக் குறிக்குழுக்களைச் சேர்க்க" என்பதைப் பார்க்கவும்).

படத்தை முடிந்த அளவு பெரிதாகப் பார்க்க, நிழற்படத் தொகுப்பின் சாளரத்தைப் பெரிதாக்கவும். தகவல் பலகத்தை மூடுவதற்கு அதன் மேற்பக்க மூலையில் உள்ள மூடு பொத்தானை கிளிக் செய்யவும்.

படத்தில் ஒரு பகுதியை மட்டும் பெரிதாக்கிப் பார்க்க, பெரிதாக்கு பொத்தானை கிளிக் செய்து நகர்வுகோலை மேலே நகர்த்தவும். பெரிதாக்கியதும், கைவடிவக் குறிப்பானை  படத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இழுத்து படத்தை நகர்த்திப் பார்க்கலாம். சாதாரணக் காட்சிக்குத் திரும்ப, சாளரத்திற்குப் பொருத்து (fit to window) என்ற பொத்தானை  கிளிக் செய்யவும்.

முழு அளவுப் படம் (இடது); பெரிதாக்கப்பட்ட படம் (வலது)

சிறுஉருவங்கள் காட்சிக்குத் திரும்ப, படத்தொகுப்புக்குத் திரும்பு (back to gallery) என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் படங்களின் ஸ்லைடு காட்சியைப் பார்க்க -  see a slide show of your picture
உங்கள் டிஜிட்டல் படங்களை, தானாக இயங்கும் ஒரு முழுத் திரை ஸ்லைடு காட்சியாகப் பார்க்கலாம். அசைவூட்டமும் பிற காட்சி விளைவுகளும் (animation and other visual effects) அடங்கிய பல விதமான ஸ்லைடு காட்சி கருப்பொருள்களிலிருந்தும் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் சில கருப்பொருள்கள் (themes) ஒரே சமயத்தில் பல படங்களைத் திரையில் காண்பிக்கும்; உதாரணம் கீழே.

ஒரு ஸ்லைடு காட்சியைத் தொடங்க, நீங்கள் விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு நிழற்படத் தொகுப்பின் அடிப்பக்கம் உள்ள ஸ்லைடு காட்சி பொத்தானை (slide show button) கிளிக் செய்யவும். நீங்கள் எந்தப் படத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், தற்போது தெரியும் எல்லாக் காட்சிகளையும் ஸ்லைடு காட்சி எடுத்துக்கொள்ளும்.

ஒரு ஸ்லைடு காட்சி நடந்துகொண்டிருக்கும்போது நீங்கள் அதை இடைநிறுத்தலாம், அதன் வேகத்தை மாற்றலாம், முன்னே அல்லது பின்னே செல்லலாம், படங்கள் தற்போக்கில் (random rang) காண்பிக்கப்பட வேண்டுமா தொடர்வரிசையில் (sequence range) காண்பிக்கப்பட வேண்டுமா என்றும் தேர்வு செய்யலாம். ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளைப் பார்க்க, சுட்டியைத் திரையின் அடிப்பகுதிக்குக் கொண்டுசெல்லவும். கட்டுப்பாடுகள் தெரியவில்லை என்றால், ஸ்லைடு காட்சி மீது வலது கிளிக் செய்யவும். இது ஒரு மெனுவைக் காட்டும்


ஒரு ஸ்லைடு காட்சியை முடிக்க, ESC விசையை அழுத்தவும் அல்லது ஸ்லைடு காட்சி கட்டுப்பாடுகளில் வெளியேறு என்பதை கிளிக் செய்யவும்.
குறிப்புகள்
•    ஸ்லைடு காட்சிக்கான கருப்பொருள்களைப் (themes) பார்க்க, Windows அனுபவ அடைவின் (windows experience index) வரைவியல் வகையில் (graphics category) குறைந்தது 3.0 வகை (version) ஆவது உங்கள் கணினியில் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, Windows அனுபவ அடைவு என்பது என்ன? என்பதைப் பார்க்கவும்
•    குறிப்பிட்ட சில கருப்பொருள்கள் Windows Vista Home Premium, Windows Vista Ultimate ஆகிய பதிப்புகளில் மட்டுமே உள்ளன.


படங்களை அச்சிடுதல் - Printing picture.

இந்தப் பகுதி, முக்கியமான மூன்று அச்சிடும் முறைகளை விளக்குகிறது. அச்சிடுதல் குறித்துப் பொதுவான தகவல்களை அறிய, அச்சிடுதலுக்கு அறிமுகம் என்பதைப் பார்க்கவும்.

வீட்டிலுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்துதல் - using a home printer

உங்கள் வீட்டில் அச்சுப்பொறி இருந்தால், உங்கள் புகைப்படங்களை நீங்களே அச்சிடலாம். இங்க்ஜெட் அச்சுப்பொறிகள், மை வெப்பமாற்ற அச்சுப்பொறிகள் ஆகிய இரண்டுமே உயர்தர வண்ணப் புகைப்படங்களை அச்சிடக்கூடியவை. இதற்குச் சிறப்புத் தாள் வகை ஒன்று தேவை. பல அச்சுப்பொறிகளில் நினைவக அட்டை படிப்பிகளும் சிறிய LCD திரைகளும் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் கணினியைப் பயன்படுத்தாமலே படங்களை அச்சிடலாம்.


உங்கள் கணினியிலிருந்து படங்களைப் பல விதங்களில் அச்சிடலாம். நீங்கள் ஒரு படத்தை அச்சிடலாம், ஒரே பக்கத்தில் பல படங்களை அச்சிடலாம், அல்லது தொடர்புத் தாள் (எளிதாகப் பார்த்து அறிய உதவும் சிறுஉருவப் பட அடுக்கு) ஒன்றை அச்சிடலாம்.
Windows நிழற்படத் தொகுப்பைப் பயன்படுத்திப் படங்களை அச்சிட, நீங்கள் அச்சிட விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுக்கவும். கருவிப்பட்டியில் அச்சிடு என்பதை கிளிக் செய்யவும், பிறகு அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியில், அச்சிடும் விருப்பங்களைத் தேர்வு செய்து, அச்சிடு என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் தகவலுக்கு, படங்களை அச்சிடுதல்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதைப் பார்க்கவும்.

படங்களை அச்சிடு உரையாடல் பெட்டியின் சாளரம்

அச்சுகளை ஆன்லைனில் வாங்குதல் - ordering print online
வீட்டிலுள்ள அச்சுப்பொறிகள் பயன்படுத்த வசதியானவை, துரிதமாக அச்சிட உதவுபவை. ஆனால் மையும் தாளும் வாங்குவதற்குச் செலவாகும் பணத்தையும் வேலையையும் மிச்சப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், ஒரு ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவையைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்கவும். இந்தச் சேவைகள் நீங்கள் உங்கள் படங்களை ஒரு வலைத்தளத்திற்குப் பதிவேற்றும் (நகலெடுக்கும்) சேவையை வழங்குகின்றன. அங்கிருந்து நீங்கள் பல்வேறு அளவுகளில் அச்சுகளுக்கு ஆர்டர் செய்து அவற்றுக்குக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தலாம். பிறகு அச்சுகள் உங்கள் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ அஞ்சல் செய்யப்படும்.

ஆன்லைன் புகைப்பட அச்சிடல் சேவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரு நன்மை என்னவென்றால், அவை பல வகையான தயாரிப்புகளை வழங்குகின்றன. வழக்கமான அச்சுகள் தவிர, உங்கள் விருப்பப்படி வடிவமைக்கப்பட்ட டி-ஷர்ட்கள், வாழ்த்து அட்டைகள், நாள்காட்டிகள், கோப்பைகள், சுவரொட்டிகள், சுட்டி அட்டைகள், மற்றும் பல தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம். இவை எல்லாவற்றிலும் நீங்கள் தேர்வு செய்த படங்கள் இருக்கும். அதோடு, வழக்கமாக இந்தத் தளங்கள் படப் பகிர்வுச் சேவைகளையும் வழங்குகின்றன (மேலே "படங்களைப் பகிர்தல்" என்பதைப் பார்க்கவும்).

Windows நிழற்படத் தொகுப்பு அல்லது படங்கள் கோப்புறையிலிருந்தும் நேரடியாக அச்சுகளை ஆர்டர் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, உங்கள் படங்களின் அச்சுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய என்பதைப் பார்க்கவும்.

ஒரு சிறு விற்பனையாளரிடமிருந்து அச்சுகளை வாங்குதல்-getting prints form a retailer
உங்களுக்கு விரைவாக அச்சுகள் வேண்டும், ஆனால் உங்களிடம் அச்சுப்பொறி இல்லை என்றால் டிஜிட்டல் புகைப்பட அச்சிடல் சேவைகளை வழங்கும் ஒரு கடைக்கு உங்கள் கேமராவின் நினைவக அட்டையை எடுத்துச் செல்லவும். கேமரா கடைகள், பெரிய சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மட்டுமின்றி சில மளிகைக் கடைகளும் மருந்தகங்களும் கூட இந்தச் சேவைகளை அளிக்கின்றன. சில கடைகளில் உள்ள சுயசேவை புகைப்பட நிலையங்கள், நீங்கள் உங்கள் படங்களைச் சில நிமிடங்களில் திருத்தவும், நுனிவெட்டவும், அச்சிடவும் உதவுகின்றன.

உங்கள் படங்களை மறுபிரதி எடுத்தல் - backing up your pictures.

நீங்கள் டிஜிட்டல் கேமரா பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களிடம் மிகச் சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் படங்கள் சேர்ந்துவிடலாம். இந்தப் படங்களில் விலைமதிப்பற்ற நினைவுகள் இருக்கின்றன; உங்கள் கணினியின் நிலை வட்டு செயலிழந்துபோனால் அவை திரும்பக் கீடைக்காது. ஆகவே, உங்கள் படங்களின் நகல்களை வேறு எங்காவது சேமித்துவைப்பது முக்கியம். நீங்கள் அவற்றைப் பதிவுசெய்யத்தக்க DVDகளில் அல்லது CDகளில், அல்லது ஒரு வெளிப்புற நிலை வட்டில் நகலெடுத்து வைக்கலாம், அல்லது இணையத்தில் உள்ள கோப்பு சேமிப்பக சேவை ஒன்றைப் பயன்படுத்தலாம்.

கணினி செயல்படும் தத்துவம் - computer working principle

கணினி ஒரு மின்னனு உபகரணம். இது மெஷின் லேங்குவேஜ் என்று சொல்லக்கூடிய இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இயந்திர மொழி என்றால் “0” மற்றும் “1” ஐ குறிப்பிடுகின்றது, இதனையே டிஜிட்டல் மொழி என்றும் சொல்லக்கூடும்.
மையச்செயலகம்(central processing unit) எனும் செயலக அமைப்பு, இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது.
மையச்செயலகத்தில் (CPU) ஒரு நுண்செயலி(microprocessor) மற்றும் ஒரு நினைவகம்(memory) மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு (control unit) ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். அந்த நினைவகத்தில் ஒரு நுண்செயலி என்னச்செய்ய வேண்டும் மற்றும் என்னச்செய்யக்கூடாது என்று இயந்திர மொழியில் கட்டளைகள் விடப்பட்டு அதனைச் சேமிக்கப்பட்டிருக்கும்.

நுண்செயலியின் கட்டளை தரவு அலவு

கட்டளைகள் ஆனது ஒரு நுண்செயலியின் செயல் அலவை பொருத்தது.நுண்செயலிகள் பொதுவாக 8 bit (8 துண்டுகள்) அளவுள்ள இயந்திர மொழி கட்டளைகளை கையாலும் தண்மையுடையது. ஒருசில நவீன நுண்செயலிகள் 16 bit மற்றும் 32 bit அளவுள்ள இயந்திர மொழி கட்டளைகளை புரிந்து கொள்ளும் தண்மை கொண்டது. 64 bit தரவு (data) கட்டளைகள் கொண்டு செயல்படும் நுண்செயலிகள் அதிவேகமாக கணக்குகளையும் மற்ற வேளைகளையும் செய்துமுடிக்கும்.

ஒரு 8 bit data எவ்வாறு இருக்கும்.

ஒரு 8 bit data எவ்வாறு இருக்கும் என்றால். 0101  இது ஒரு 8 bit data (தரவு). இந்த 8 bit data எதைக் குறிப்பிடுகின்றது என்றால், நீங்கள் உங்கள் கணினியில் விசைபலகம் மூலம் 5 என்ற விசையை அழுத்தும்போது உங்கள் கணினியில் உள்ள விசைபலக பகிர்மானம்(KEYBOARD INTERFACE) அந்த 5 என்ற என்னை 0101 என்று மாற்றி நுண்செயலிக்கி அளிக்கின்றது. நுண்செயலி அந்த என்னை சேமிக்க வேண்டுமா, அல்லது அதைவைத்து கணக்கு போடவேண்டுமா அல்லது வேறு ஏதாவது கட்டளை பயனரிடமிருந்து வந்துள்ளதா என்று சோதனை செய்யும். எந்த கட்டளையும் இடப்படவிள்ளை எனில் அதை அப்படியே திரைபலக பகிர்மானம்(DISPLAY INTERFACE UNIT) அமைப்பிற்க்கு அனுப்பி இடப்பட்ட கட்டளை மற்றும் அந்த 5 என்ற என்னையும் திரைபலகம் மூலம் காண்பிக்கச் செய்யும். இந்த செயல் எவ்வாறு நடைப்பெற்றதோ அதே போன்றுதான் எல்லாச் செயல்களும் நடக்க கணினி அனுமதிக்கும்.

கட்டளைத் தொகுதிகள்.

முதலில் தரவு பிறகு கட்டளைகள் அதன்பிறகு செயலாக்கம். இதன் அடிப்படையில் தான் கட்டளைத் தொகுதிகள்(INSTRUCTION SETS) உருவாக்கப்படுகின்றன. இந்த கட்டளைத் தொகுதிகள் ஒரு கணினியை வழிநடத்துகின்றது. கணனியின் நினைவகத்தில் ஒரு கோப்பு உறுவாக்கி அந்த கோப்பில் ஒரு செயலுக்கான கட்டளைத்தொகுதிகளை தயார்செய்து பிறகு அதை சேமித்து அதனை தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
கட்டளைகளை நடைமுறையில் நிரல்கள் (programs)  என்றழைக்கப்படுகின்றன. இந்த நவீன உலகில் கணினியின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் அதனை எல்லோறும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்க இந்த நிரல்கள் என்று சொல்லக்கூடிய கட்டளைத்தொகுதிகளை பயன்படுத்தி பல பயன்பாடுகளை செய்யக்கூடிய கட்டளைகளை உருவாக்கி பிறகு அதனை நிலைவட்டில் சேமித்து இயக்கப்படுகின்றது. இதனையே நாம் இயக்கமுறைமை (operating system) என்று கூறுகிறோம்.

இயக்கமுறைமை கட்டளைகள்.

இந்த இயக்கமுறைமையானது கணினி புரிந்துகொள்ளும் விதத்தில் பயனர் இடக்கூடிய கட்டளைகளை இயந்திர மொழியாக மாற்றி கொடுக்கின்றது. உதாரணமாக, select, copy, past, insert, print, search, connect, find, move, undo, save, என்ற கட்டளைகளை ஒரு இயக்க முறைமையை பயன்படுத்தி நாம் செய்யும்போது. அந்த கட்டளைகள் கணினிக்கு நேரடியாக தெறியாது எனெனில் கணினிக்கு மனித மொழி புரியாது. கணினி இயந்திர மொழியை மட்டுமே உணறும். எனவே இயக்கமுறைமையானது பிறகு அந்த கட்டளைகளை தானாகவே compile செய்து அதனை Direct machine language ஆக மாற்றி, இட்ட செயலை நிரைவேற்றும். அதே போன்று செயல் நிரைவடைந்தவுடன் அந்த செய்தியை வெளிப்படுத்த DE-compile செய்து அதனை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இட்டகட்டளைக்கான பதில் உரையாகவோ அல்லது படமாகவோ தெரிவிப்பான் மூலம் திரையில் காட்டும். இந்த ஒட்டுமொத்த செயலும் செய்வதர்க்கு கணினிக்கு ஒரு சில micro-seconds தான் ஆகும். ஏனெனில் கணினியில் உள்ள microprocessor (நுண்செயலி) அதிவேகமாக கட்டளைகளை நிரைவேற்றும் தன்மையுடையது. 8 bit microprocessor மூலம் கட்டளைகளை நிரைவேற்றும் கணினியானது 8 bit Operating System பயன்படுத்தி கட்டளைகளை இடவேண்டும். மாறாக 16 bit Operating System பயன்படுத்தி கட்டளைகள் இட்டால் 8 bit micro processor அதனை புரிந்து கொள்ளாது. இப்பொழுது வெளிவறும் கணினிகள் 32 bit microprocessor அல்லது 64 bit Microprocessor களை கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த அதிவேக கணினிகளுக்கு 32 bit Operating System அல்லது 64 bit Operating System ஐ நிலைவட்டில் நிறுவி, செயல்களை நிரைவேற்ற 32 bit அளவுள்ள கட்டளைகள் இடப்படும்.
கிழே உள்ள படத்தில் 8 bit கட்டளைகளை கொண்டு இயங்கும் ஒரு கணினியின் மாதிரிபடம் காட்டப்பட்டுள்ளது.

8bit தரவை செயல்படுத்தும் கணினி















இந்த படத்தில் உள்ளவாறு ஒரு 8bit கணினிக்கு ஒரு 8bit நுண்செயலி மற்றும் 8 bit உள் பகிர்மான சாதனங்கள்( 8 bit internal interface devices) இருக்க வேண்டும். அதாவதுகணினியில் உள்ள நுண்செயலியுடன் ஒரு விசைபலகத்தை நேரடியாக தொடர்பு எற்படுத்தமுடியாது. விசைபலகத்திற்க்கென்று ஒரு தொடர்பு ஏற்படுத்தும் அமைப்புகணினியில் உள்ளது அதன் பெயர் விசைபலக பகிர்மானம்(key board interface unit) அதன் மூலமாக தான் ஒரு விசைபலகம் கணினியில் உள்ள நுண்செயலியிடம் தொடர்புக்கொண்டு கட்டளைகளை பறிமாறிக்கொள்ளும். இதே போன்றுதான் திரைபலக பகிர்மானம்(display interface unit) மற்றும் அச்சுப்பொறி பகிர்மானம் (printer interface unit) ஓளி மற்றும் ஒலி பகிர்மானமங்கள் (audio and video interface card) இருக்க வேண்டும். இந்த பகிர்மானங்களுடன்(interface units) வெளியில் உள்ள மின்னனு சாதனங்கள்(external output devices and input devices) தொடர்புக்கொண்டு நுண்செயலியின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும். பிறகு நுண்செயலியிடமிருந்து என்ன கட்டளை வருகின்றதோ அதனை ஆமோதித்து அதன்படி செயலை நிரைவேற்றும்.
முதலில் கணினி இயங்க தொடங்கியவுடன் நுண்செயலியில் உள்ள control unit (கட்டுப்பாட்டு அமைப்பு) நினைவகத்தில் கட்டளைகள் விடப்பபட்டுள்ளனவா என சோதனை செய்து பிறகு அந்தகட்டளைகளை எடுத்து வேளைச்செய்ய ஆரம்பிக்கும். இத்தகைய வேலையை நாம் memory machine cycle என்று குறிப்பிடலாம். control unit நினைவகத்தை fetch செய்து அதில் உள்ள கட்டளை தரவுகளை எடுப்பதால் அதற்கான கோட்பாடுகளை நிர்னயிக்கின்றது. அந்த கோட்பாடுகள் அனைத்தும் memory machine cycle ல் இருக்கும்.
வொவ்வொரு செயலுக்கும் ஒரு machine cycle உருவாக்கப்படும்.  வொவ்வொரு machine cycle லிலும் ஒரு செயலுக்கான Request and request acknowledgement மற்றும் data அதற்கான control signal இருக்கும்.
பறகு அந்த செயலுக்கான Response மற்றும் Response acknowledgement அதனுடன் memory location address குறிப்பிடப்பட்டிருக்கும்.
1. control signal என்ற machine cycleல் என்ன செயல் செய்ய data enable ஆகியுல்லதோ அதைமட்டும் செய்யவே microprocessor அனுமதிக்கப்படும். உதாரணமாக “Read” data enable ஆகியிருந்தால் microprocessor படிக்க மாத்திரம் செய்யும். மாறாக எழுத ஆரம்பிக்காது.
2. data signal என்ற machine cycleல் read operation செய்ய என்ன தரவு பயன்படுத்த வேண்டுமோ அதைமாத்திரம் கொண்டு செல்லும்.
3. address machine cycle read operation செய்ய வேண்டிய information or data location address இடம் பெரும்.
4. request and response machine cycle ல் read operation செய்வதர்க்காண request signal ஆனது microprocessor க்கு அனுப்பப்படும். microprocessor தயாராக இருந்தால் control unit க்கு Response signal வரும். இந்த பரிமாற்றத்தை control unit memory mapping செய்யும் அதுவே இந்த machine cycleல் இடம்பெரும்.
எல்லா செயலும் நடந்து முடிந்த பிறகு முடிவை temporary register ல் சேமிக்கும். பிறகு control unit ஆனது output device தயாராகவுள்ளனவா என பறிசோதிக்கும் அப்படி தயாராக இருக்கின்றது என பதில் கிடைத்தவுடன் temporary registerல் உள்ள ஒரு செயலின்(task or operation) முடிவை buffer memory or RAM க்கு அனுப்பிவிடும். buffer memory யில் உள்ள result data ஆனது output device க்கு சிறிது சிறிதாக அனுப்பப்படும். out put device ன் செயல்திறனை பொருத்து buffer memory யில் இருந்துவரும் Data வின் வேகம் மாறுபடும். control unit ஆனது temporary resister உள்ள ஒருச் செயலுக்கான முடிவை buffer memory க்கு அனுப்பிய மறு நிமிடமே microprocessor வேறொரு செயலைச் செய்ய தயாராகிவிடுகின்றது. இந்த விசயத்தை control unit கண்டுபிடித்துவிடும் பிறகு பயனர் இடம்மிருந்து interrupt request வந்துள்ளனவா என சோதிக்கும் அப்படி ஏதாவது இருந்தால் அந்த request ஐ நிரைவேற்ற microprocessor க்கு செய்தி அனுப்பும்.
இவ்வாறு கணினியானது மிக நுட்பமாக தனது பணியை செய்கின்றது.   

கணினி இயக்க முறைமை - Computer Operating system

இயக்க முறைமை (OS) யானது கணினியில் உள்ள வன்பொருள் மற்றும் மென்பொருளை நிர்வகிக்கும் ஒரு பிரதான மென்பொருள். இந்த பிரதான மென்பொருளானது வன்பொருள் மற்றும் பிற பயன்பாட்டு மொன்பொருள்(Application programming interface software) மற்றும் பயனர்களுக்கு(USERS) ஒரு பாலமாக அமைந்து செயல்களை மிக சுமூகமாக முடித்து தருகின்றன.


எந்த ஒரு external device ஐ யும் கணினியுடன் இணைக்கும் போது அந்த குறிப்பிட்ட புறச் சாதனத்திர்கான(external device) மென்பொருள் கணினியில் நிருவப்படவில்லை எனில் அந்த குறிப்பிட்ட சாதனம் கணினியில் இணைக்கப்பட்டும் செயல்படாமல் இருக்கும் ஏனெனில் அந்த புறச்சாதனத்திடமிருந்து இயக்கமுறைமைக்கு தேவையான கட்டளைகள் வரவில்லை எனப்பொருள்.
புறச்சாதனங்களின் மென்பொருள் கணினி்யில் நிருவப்பட்டப்பிறகு இயக்கமுறைமையானது அதனைத் தொடர்புக்குக்கொண்டு ஓரு குறி்ப்பிட்ட சாதனத்திர்கான கட்டளைகள் பறிமாறும் விதத்தை பகிர்ந்துக்கொள்ளும் எனவே செயலாக்கம்(task execution) எளிமையாக முடிகின்றது.

இயக்கமுறைமையின் உதவியுடன் நீங்கள் உங்கள் கணினியில் இணைய இணைப்பை ஏர்படுத்தி இணையத்தில் உள்ள அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம். தொலைக்காட்சி நிகழ்வுகளை நேரடியாக உங்கள் கணினியில் பார்க வேண்டுமெனில்
 கணினிக்கென்று உள்ள external TV tuner card அல்லது INTERNAL TV tuner card என்ற சாதனத்தை(device) உங்கள் கணினியில் பொருத்திக் கொண்டால் இயக்கமுறைமையின் உதவியில்லாமலும் மற்றும் இயக்கமுறைமையின் உதவியுடனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு தொலைக்காட்சியில் பார்ப்பது போன்று உங்கள் கணினியில் நீங்கள் கண்டுகளிக்களாம்.

External Tv tuner card அல்லது external tv combo box என்ற சாதனத்தை நீங்கள் வைத்திருந்தால் இவற்றில் ஒரு சில TV tuner combo box ஐ அமைப்பு தொகுதியுடன் இனைக்காமலே நேரடியாக திரைபலகத்துடன் (display unit or monitor) இனைத்து நிகழ்சிகளை tune செய்து பார்களாம். இவ்வகையான TV combo box கள் திரைபலக கணினிகளுக்கு ஏற்றது மடிகணினிகளுக்கு உகந்தது அல்ல. TV combo box ன் ஒளி மற்றும் ஒலி output முனைகளை முறையே monitor மற்றும் speaker ல் இனைப்பது அவசியம். இந்த வகை TV tuner card க்கு இயக்க முறைமையின் உதவி தேவையில்லை ஏனெனில் நாம் இதனை கணினியுடன் இனைக்கவில்லை. ஆகையால் நாம் நிகழ்சிகளை பார்கவும் மற்றும் கேட்கவும் முடியும் அதனை பதிவு செய்ய முடியாது.

நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டுமெனில் external TV tuner card அல்லது internal tv tuner card இவற்றில் ஏதாவது ஒன்றை அமைப்பு தொகுதியுடன் இனைத்து அவற்றுக்கான மென்பொருளை கணினியில்  நிருவ வேண்டும். அவ்வாறு செய்யதால் இயக்க முறைமையானது TV tuner card ஐ அதன் மென்பொருள் மூலம் தொடர்புக் கொண்டு அதனை கட்டுத்துகின்றது மற்றும் அந்த tv tuner க்கான மென்பொருளை கணினியில் தடையில்லாமல் இயக்க உதவிச் செய்கின்றது. எனவே அந்த நன்மையை பயன்படுத்தி கணினியின் வாயிலாக திரையில் தெரியும் நிகழ்ச்சிகளை பதிவுச் செய்யலாம் பிறகு அதனை video editor மூலம் திருத்தலாம் அதன்பிறகு மாற்றியதை மறுபதிவும் செய்யலாம். இவை அனைத்தும் செய்ய இயக்க முறைமையே கணினிக்கு உதவுகின்றது.

உங்கள் கணினியில் இயக்கமுறைமையில் உள்ள device manager என்ற பகுதிக்கு சென்று என்னென்ன சாதனங்கள் உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றிக்கான மென்பொருள்கள் சரியான முறையில்  இயங்குகின்றனவா என்பதையும் சோதித்துப்பார்களாம். சில சாதனங்கள் மென்பொருள்கள் இல்லாத காரணத்தால் செயலற்று கிடக்கும் அவற்றிர்கான மென்பொருளை device manager உதவியுடன் இணையத்தில் உலாவி சரியான மென்பொருளை கண்டுபிடித்து கணினியில்  நிருவலாம். இவ்வாறு செய்வதனால் வன்பொருள் சாதனங்கள் எளிதில் சேதமடைவது தவிர்க்கப்படுகின்றது.

ஒரு தனிப்பட்ட கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை நிருவி கணினியை பயன்படுத்தலாம். windows operating system, UNIX operating system, Linux redhat operating system, Google chrome operating system, Mac OS என்ற பல இயக்கமுறைமைகளின்(operating system) பயனை ஒரு கணினியின் வாயிலாக நாம் பெறலாம். ஒவ்வொரு தனிப்பட்ட இயக்கமுறைமைக்கும் தனித்தனியாக கணினியை வாக்க வேண்டும் என்ற அவசியம் தேவையில்லை. ஆனால் முக்கியமான விசயம் என்ன வென்றால் ஒரு கணினியில் ஒன்றுக்கு மேறப்பட்ட இயக்கமுறைமைகளை நிருவும்போது அதனை நன்கு பயன்படுத்த தெரிந்தவராகவும், சரியான முறையில் நிருவத் தெரிந்தவராகவும்  இருக்க வேண்டும். அப்படியில்லையெனில் கணினி் பழுதடையாது ஆனால் அதில் சேமித்து வைத்த தகவல்கள் பழுதடைந்துவிடும் அல்லது நீங்கள் சேமித்துவைத்த தகவல்களே இல்லமால் போய்விடும்.

பொதுவாக windows operating system மானது fat32 அல்லது NTFS , file system ல் இயங்கக்கூடியதாக இருக்கும். எனவே windows operating system பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அதர்கான தரவுகளை fat32 மற்றும் ntfs அமைப்பு உள்ள நிலைவட்டு(hard disk partition) பிரிவுகளில்  இயக்கமுறைமையானது பதிவுச்செய்யும். மறுபடியும் வேரொரு இயக்கமுறைமையை பயன்படுத்து கணினியை இயக்கும் போது அந்த இயக்க முறைமையானது fat32 file system  அல்லது ntfs file system மை ஆதரித்தால் windows operating system பதிவுச்செய்த அந்த தகவலை இந்த இயக்கமுறைமையில் பார்கலாம். அப்படியில்லையெனில் அந்தந்த இயக்கமுறைமையின் கேப்புகளை அதன் சம்பந்தப்பட்ட இயக்கமுறைமையை பயன்படுத்திதான்  பார்கமுடியும் மற்றும் திருத்தமுடியும்.

windows operating system ல் கட்டுப்பாட்டு பலகம் என்ற பகுதிக்கு சென்று disk management என்ற பகுதியில் நிலைவட்டை நிர்வகிக்கும் அமைப்பு ஒன்று இருக்கும் அதன் மூலம் உங்கள் கணினியில் என்னென்ன  இயக்கமுறைமைகள் உள்ளன மற்றம் அவற்றின் FILE SYSTEM வகை என்ன என்பதனை விளக்கமாக கன்டறி்யலாம். 

ஒரு கணினியின் பாகங்கள்.

நீங்கள் திரைப்பலகக் கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், "கணினி" என்று எந்த ஒரு தனி பாகமும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு கணினி என்பது பல பாகங்கள் இணைந்து பணிபுரியும் ஓர் அமைப்பு. நீங்கள் பார்க்கவும் தொடவும் கூடிய பாகங்கள் வன்பொருள் என்று அழைக்கப்படுகின்றன. (மென்பொருள் - software என்பது, வன்பொருள் - hardware என்ன செய்ய வேண்டும் என்று அதனிடம் சொல்லும் கட்டளைகள் (instructions) அல்லது நிரல்களைக் (programs) குறிக்கிறது.)

இந்த கட்டுரையில் கீழ்கன்ட கணினியின் முக்கிய வன்பொருள்  பாகங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

•    அமைப்புத் தொகுதி ( system unit)
•    சேமிப்பகம் ( storage unit)
•    சுட்டி (mouse)
•    விசைப்பலகை (keyboard)
•    திரையகம் (monitor)
•    அச்சுப்பொறி (printer)
•    ஒலிபெருக்கிகள் (speakers)
•    மோடம் (modem)

திரைப்பலகக் கணினி அமைப்பு

கீழ்க்கண்ட படத்தில் ஒரு திரைப்பலகக் கணினியில் பொதுவாகக் காணப்படும் வன்பொருட்களைப் பார்க்கலாம். உங்கள் கணினி வேறு மாதிரி இருக்கலாம், ஆனால் இவற்றில் பெரும்பாலான பாகங்கள் அதில் இருக்கும். ஒரு மடிக் கணினியிலும் இதே போன்ற பாகங்கள் இருக்கும், ஆனால் அவை எல்லாம் ஒரு நோட்டுப் புத்தக அளவிற்கு இணைக்கப்பட்டிருக்கும்.


desktop computer system -ன் ஒவ்வொரு பாகத்தை பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

1. அமைப்புத் தொகுதி - System Unit

அமைப்புத் தொகுதிதான் ஒரு கணினியின் அடிப்படை. இந்தச் செவ்வகப் பெட்டி பொதுவாக உங்கள் மேஜை மேல் அல்லது மேஜைக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கும். தகவலைச் செயலாக்கும் பல மின்னணு உறுப்புகள் இந்தப் பெட்டிக்குள் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது மையச் செயலகம் (CPU - central processing unit ), அல்லது நுண்செயலி (microprocessor); இது உங்கள் கணினியின் மூளை போல் செயல்படுகிறது. இன்னொரு உறுப்பு குறிப்பிலா அணுகல் பதிவு (RAM - random access memory); இது கணினி இயக்கத்தில் இருக்கும்போது CPU பயன்படுத்தும் தகவலைத் தற்காலிகமாக வைத்திருக்கும். RAM -இல் உள்ள தகவல் (information), கணினி அணைக்கப்படும்போது (turned off) அழிக்கப்படுகிறது (erased).
உங்கள் கணினியில் கிட்டத்தட்ட எல்லா பாகங்களும் அமைப்புத் தொகுதியுடன் கேபிள்களால் இணைக்கப்பட்டுள்ளன. கேபிள்கள் குறிப்பிட்ட முனையங்களுக்குள் (specific ports)  செருகப்பட்டிருக்கும்; இந்தத் திறப்புகள் (specific ports male and female connectors) பொதுவாக அமைப்புத் தொகுதியின் பின்னால் இருக்கும். அமைப்புத் தொகுதியின் அங்கமாக இல்லாத வன்பொருட்கள் புறச்சாதனங்கள் (peripheral device) அல்லது சாதனங்கள் (external devices) என்று அழைக்கப்படுகின்றன.

2. சேமிப்பகம் (storage unit)

i)நிலை வட்டு இயக்ககம் - (hard disk drive

உங்கள் கணினியில் ஒரு வட்டு அல்லது பல வட்டு இயக்ககங்கள் இருக்கின்றன — இவை தகவலை ஒரு உலோகத் தகட்டில் அல்லது பிளாஸ்டிக் வட்டில் சேமிக்கும் சாதனங்கள். உங்கள் கணினி அணைக்கப்பட்ட பிறகும் இந்த வட்டு, தகவலை வைத்திருக்கும்.

உங்கள் கணினியின் நிலை வட்டு இயக்ககம் (hard disk drive) தகவலை ஒரு நிலை வட்டில் (hard disk) சேமித்துவைக்கிறது; இது காந்தப் பரப்பைக் (magnetic surface) கொண்ட ஓர் உறுதியான தட்டு (rigid platter) அல்லது பல தட்டுகளைக் கொண்ட அடுக்கு (stack of platters). நிலை வட்டில் மிகப் பெரிய அளவிலான தகவலை வைத்திருக்க (store massive amounts of information) முடியும் என்பதால், அது பொதுவாக உங்கள் கணினியின் முதன்மை சேமிப்பகமாக (primary storage device) விளங்குகிறது; உங்கள் நிரல்கள் (programs) மற்றும் கோப்புகளில் (files) கிட்டத்தட்ட எல்லாவற்றையும் வைத்திருக்கும். நிலை வட்டு இயக்ககம் (hard disk drive) சாதாரணமாக அமைப்புத் தொகுதிக்கு (system unit) உள்ளே இருக்கும்.

 ii) CD மற்றும் DVD இயக்ககங்கள் - CD and DVD Drives                  


இன்று கிட்டத்தட்ட எல்லாக் கணினிகளிலும் CD அல்லது DVD இயக்ககம் (CD or DVD drives) உள்ளது. இது வழக்கமாக அமைப்புத் தொகுதியின் முன்பக்கம் இருக்கும். CD இயக்ககங்கள் (CD drives) லேசர் கதிர்களைப் பயன்படுத்தி CD -இலிருந்து தரவைப் படிக்கின்றன (reading data) or எடுக்கின்றன (scanning the data); பல CD இயக்ககங்களால் (CD Drives) CDகளில் தரவை எழுதவும் (write data)  அல்லது பதிவு செய்யவும் முடியும். பதிவு செய்யத்தக்க வட்டு இயக்ககம் (writable CD disk) ஒன்று உங்களிடம் இருந்தால், நீங்கள் வெற்று CDகளில் உங்கள் கோப்புகளை (files)  வைத்துக்கொள்ளலாம். நீங்கள் CD இயக்ககத்தை உங்கள் கணினியில் இசை CDகளை இயக்கவும் (to play music CDs) பயன்படுத்தலாம்.

DVD  இயக்ககங்களால் (DVD PLAYERS) CD இயக்ககங்கள் ( CD PLAYERS) செய்யும் எல்லாவற்றையும் செய்ய முடியும், அதோடு DVDகளையும் படிக்க முடியும். உங்களிடம் DVD இயக்ககம் இரு்தால் உங்கள் கணினியில் திரைப்படங்கள் பார்க்கலாம். பல DVD இயக்ககங்களால் வெற்று (EMPTY)  DVDகளில் தரவைப் பதிவு செய்ய முடியும்( record data onto blank DVDs).

     உதவிக்குறிப்பு  (TIP)

          - பதிவு செய்யத்தக்க (recordable CD)  ஒரு CD அல்லது DVD இயக்ககம் (DVD drive) உங்களிடம் இருந்தால், உங்கள் முக்கியமான கோப்புகளை (important files) அவ்வப்போது CDகளிலோ DVDகளிலோ மறுபிரதி (நகல்) எடுத்துவைத்துக்கொள்ளவும். இதனால் உங்கள் நிலை வட்டு (HARD DISK) செயலிழந்தால் கூட உங்கள் தரவு தொலைந்துபோகாது (won't lose your data).

 ii) நெகிழ் வட்டு இயக்ககம் - Floppy Disk Drive 

நெகிழ் வட்டு இயக்ககம் (Floppy disk drives ), ஃப்ளாப்பிகள் அல்லது டிஸ்கெட்கள் என்று அழைக்கப்படும் நெகிழ் வட்டுகளில் தகவலைச் சேமித்துவைக்கிறது.. CDகள், DVDகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நெகிழ் வட்டுகளில் சிறிதளவு தரவைத்தான் (small amount of data) வைத்துக்கொள்ள முடியும். அவை மிக மெதுவாகவே தரவை எடுக்கின்றன (retrieve information more slowly), சுலபமாகச் சேதமடைந்துவிடுகின்றன (damage). எனவே, நெகிழ் வட்டுகள (floppy disks) இப்போதும் சில கணினிகளில் இருந்தாலும் அவை முன்பு போல் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

நெகிழ் வட்டுகள் ஏன் "நெகிழ்வாக" இருக்கின்றன? அவற்றின் வெளிப்புறம் உறுதியான பிளாஸ்டிக்கால் ஆனது என்றாலும் அது வெறும் உறைதான் (sleeve). உள்ளே இருக்கும் வட்டு ஒரு மெல்லிய, வளைந்துகொடுக்கக்கூடிய வினைல் பொருளால் ஆனது (thin, flexible vinyl material).

3. சுட்டி (mouse)

சுட்டி (mouse) என்பது உங்கள் கணினித் திரையில் (desktop) இருப்பவற்றைச் சுட்டித் தேர்ந்தெடுக்கப் (to select) பயன்படும் ஒரு சிறிய சாதனம். சுட்டிகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன; இருந்தாலும் பொதுவாக ஒரு சுட்டி சுண்டெலி போலத்தான் இருக்கும். அது ஒரு சிறிதாக, நீள்வட்ட வடிவமாக இருக்கும். வால் போல நீண்ட ஒரு கம்பியால் அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். புதிதாக வந்திருக்கும் சில சுட்டிகள் கம்பியில்லாதவை (wireless mouse).

சுட்டியில் வழக்கமாக இரண்டு பொத்தான்கள் இருக்கும்: ஒரு முதன்மைப் பொத்தான் (இது சாதாரணமாக இடது பொத்தான்), ஒரு கூடுதல் பொத்தான். பல சுட்டிகளில் அந்த இரு பொத்தான்களுக்கு இடையில் ஒரு சக்கரமும் (wheel)  இருக்கலாம். இந்தச் சக்கரம் திரைகளில் இருக்கும் தகவலை சீராக உருட்டிப் (scroll smoothly) பார்க்க உதவுகிறது.

சுட்டிக் குறிப்பான்கள்  - mouse pointers.
சுட்டியை உங்கள் கையால் நகர்த்தும்போது, உங்கள் கணினித்திரையில் இருக்கும் குறிப்பானும் (pointer on the screen) அதே திசையில் நகரும். (குறிப்பானின் தோற்றம் அது திரையில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து மாறலாம்.) ஒரு உருப்படியைத் (item) தேர்ந்தெடுக்க விரும்பினால், அந்த உருப்படியைச் சுட்டவும் (point to the item), பிறகு முதன்மைப் பொத்தானை (primary button) கிளிக் (click) செய்யவும் (அழுத்திவிட்டு விடுவிக்கவும்). உங்கள் சுட்டியால் சுட்டி கிளிக் செய்வதுதான் (using the mouse to pointing and clicking) உங்கள் கணினியைப் பயன்படுத்தும் பிரதான முறை. கூடுதல் தகவலுக்கு, சுட்டியைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

4. விசைப்பலகை (keyboard)



விசைப்பலகை, முக்கியமாக உங்கள் கணினியில் உரையைத் (text) தட்டச்சு  (type) செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது. தட்டச்சுப் பொறியில் (typewriter) இருக்கும் விசைப்பலகை (keyboard) போல இதிலும் எழுத்துகளுக்கும் (letters) எண்களுக்கும் (numbers) விசைகள் (keys) இருக்கின்றன, ஆனால் விசைப்பலகையில் சிறப்பு விசைகளும் உள்ளன.
•    மேல் வரிசையில் இருக்கும் செயல்பாட்டு விசைகள் (function keys) அவை எதில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்து வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யும்.
•    பெரும்பாலான விசைப்பலகைகளில் வலப்பக்கம் இருக்கும் எண் விசைத்தளம் (right side numeric keypad) நீங்கள் எண்களை விரைவாக உள்ளிட உதவுகிறது (enter numbers quickly).
•    வழிசெலுத்தல் விசைகள் (navigation keys) - உதாரணமாக அம்பு விசைகள் (arrow keys) - ஒரு ஆவணத்தில் (document) அல்லது வலைப்பக்கத்தில் (webpage) தகவலை நகர்த்திப் பார்க்க உதவுகின்றன.

சுட்டியால் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை, விசைப்பலகையைப் பயன்படுத்தியும் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, விசைப்பலகையைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

5. திரையகம் (monitor)



திரையகம் - உரையையும் (text) படங்களையும் (graphics) பயன்படுத்தித் தகவலைக் காட்சி வடிவத்தில் (visual form) காண்பிக்கிறது. திரையகத்தில் (monitor) தகவலைக் காண்பிக்கும  பகுதிக்குத் திரை  (display screen) என்று பெயர். தொலைக்காட்சித் திரை (television screen) போல் கணினித் திரையிலும் (computer screen) அசையாத (still) அல்லது அசையும் (moving) படங்களைப் பார்க்கலாம்.
திரையகங்களில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன: CRT திரையகங்கள்  (கத்தோட் ரே டியூப் - cathode ray tube display) , LCD திரையகங்கள்  (நீர்மப் படிகக் காட்சி - liquid crystal display) . இரண்டு வகைகளுமே படங்களைத் துல்லியமாகக் காட்டுகின்றன, ஆனால் LCD திரையகங்கள்  மெலிதாகவும் லேசாகவும் இருக்கும். இருந்தாலும் பொதுவாக CRT திரையகங்களின் விலை குறைவு.

6. அச்சுப்பொறி (printer)

அச்சுப்பொறி (printer), கணினியில் உள்ள தரவைத் (digital data) தாளுக்கு மாற்றுகிறது ( physically writes onto the paper). கணினியைப் பயன்படுத்த (operate செய்ய) அச்சுப்பொறி  தேவையில்லை, ஆனால் அது இருந்தால் மின்னஞ்சல் (e-mail), அட்டைகள் (cards) , அழைப்பிதழ்கள்  (invitations) , அறிவிப்புகள் (announcements) போன்றவற்றை அச்சிடலாம் (print செய்யலாம்). பலர் தங்கள் புகைப்படங்களை வீட்டிலேயே அச்சிட்டுக்கொள்ள விரும்புகிறார்கள்.

அச்சுப்பொறிகளில் இங்க்ஜெட் அச்சுப்பொறிகள் (inkjet printers), லேசர் அச்சுப்பொறிகள் (laser printer) ஆகியவையே பிரதான வகைகள். வீட்டிற்கு இங்க்ஜெட் அச்சுப்பொறிகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை கருப்பு-வெள்ளையிலோ (black and white) அல்லது முழு வண்ணத்திலுமோ (original full color format) அச்சிடும்; சிறப்புத் தாள் (special paper) ஒன்றைப் பயன்படுத்தினால் புகைப்படங்களை உயர்ந்த தரத்தில் அச்சிடும் (high-quality). இங்க்ஜெட் அச்சுப்பொறிகள்  சிறிது மெதுவாக செயல்படும் தன்மை கொண்டது லேசர் அச்சுப்பொறிகள்  இன்னும் வேகமாகச் செயல்படுகின்றன . இவை கடும் வேலைப் பளுவைத் தாங்கக்கூடியவை.

7. ஒலிபெருக்கிகள் (speakers)


ஒலிபெருக்கிகள் (Speakers) ஒலியை இயக்கப் (play sounds) பயன்படுகின்றன. அவை அமைப்புக்குள் பொருத்தப்பட்டிருக்கலாம் (built into the system unit) அல்லது கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கலாம் (connected with cables). உங்கள் கணினியில் இசை கேட்கவும் பிற ஒலிகளைக் (இசை இல்லாத ஒலிகலை - voice sounds) கேட்கவும் ஒலிபெருக்கிகள் உதவுகின்றன.

8. மோடம் (modem)


உங்கள் கணினியை இணையத்துடன் இணைக்க உங்களுக்கு மோடம் தேவை. மோடம் என்பது கணினித் தகவலை தொலைபேசி இணைப்பு வழியாக அல்லது அதிவேக கேபிள் வழியாக அனுப்பும், மற்றும் பெறும் ஒரு சாதனம். இது சில சமயங்களில் அமைப்புத் தொகுதிக்குள் (within the system unit) வைக்கப்படுகிறது, ஆனால் அதிவேக மோடங்கள் பொதுவாக தனி உபகரணங்களாகத்தான் (external device) இருக்கும்.

இப்போது வந்துள்ள விண்டோஸ்8 சில டிப்ஸ்

இன்று நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா? திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும். இதன் தலைப்பு "Choose an option" என இருக்கும். இதில் "Continue", "Troubleshoot" மற்றும் "Turn off your PC." என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்; அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், "Advanced options" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.
                                                இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம். ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும். மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

உங்கள் கணினி பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள்

உங்கள் கணினி பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள்

உங்களுடைய கணினி பற்றிய பூரணமான தகவல்களை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் மென்பொருள்களின் துணையின்றி கணினி பற்றிய தகவல்கள் அனைத்தையும் பார்ப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஒவ்வொரு விடயங்களை பார்ப்பதற்கும் ஒவ்வொரு பகுதிக்கு செல்லவேண்டும். அவ்வாறு அல்லாமல் கணினி பற்றிய அத்தனை விடயங்களையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

இதற்கு உதவி செய்கிறது SIV எனப்படும் சிறிய மென்பொருள். இது உங்கள் கணினி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. 4.25 Mb அளவுடைய Zip File இல் இந்த மென்பொருள் வருகிறது. கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. Zip File ஐ Extract பண்ணி மென்பொருளை Open பண்ணலாம்.

இம் மென்பொருளை Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணினி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும். மென்பொருளின் கீழ் பக்கத்தில் பல Tab கள் காணப்படும். முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் அதில் விரிவாக காணலாம்

இம்மென்பொருளை தரவிறக்குவதற்கான இணைப்பு


கணினி திரையினை கேமரா இல்லாமல் வீடியோவாக பதிவு செய்ய





உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இவை Screen Capture என்ற மென்பொருட்களின் உதவியுடன் செய்யப்படுகின்றன. இந்தப் பதிவில் அது எவ்வாறு என்று பார்ப்போம்.

இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று.

1. Freez Screen Video Caputre
2. HyperCam
3. http://camstudio.org/
4. http://www.totalscreenrecorder.com/
5. Camtasia - சிறந்த மென்பொருள்

இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

எப்படி ரெகார்ட் செய்வது? ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.

இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.

நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும்.

இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கும் (உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.).

re செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.

நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும்.

உங்கள் வீடி யோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர் களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள்.

வீடியோ சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB) எனவே ஏதேனும் Video Converter பயன் படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.

கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ Convert செய்வது நல்லது. ( After Conversion 30MB



No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...