Thursday, 15 February 2018

Story

படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"😨😨😰😰😰

*********

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!

தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...

இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...

இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .

பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...

பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...

பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...

இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...

எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .

வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...

எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

வேசிக்கு காசு
வேணும் ...

வருபவள் ஓசிதானே...

மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...

விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .

வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...

தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...

மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...

கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,

நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...

மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .

இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,

வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .

கடைசி மூன்று மாதம்...

அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...

வாசனையாய் வந்து போனாள்..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...

கருகருவென
என் நிறத்தில்...

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?

'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '

என்று சொல்லி திரும்பினேன் .

ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...

அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று

கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,

கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...

ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...

அதே அந்த பெண்
குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...

கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,

வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...

தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,

என்னைப் போலவே
சப்பை மூக்கு,

என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,

கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,

எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...

கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,

முன் சீட்டில் இருந்த குழந்தை...

மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...

விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட
கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,

இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,
அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...

ஒன்று மட்டும் புதிதாய் ...

எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .

வீடு நோக்கி நடந்தேன்,

பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...

கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...

தூக்கம் இல்லை
நெடுநேரம்...

பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...

முகர்ந்து பார்த்தேன் ....

விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு
வரச் சொன்னேன்,

பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !

பல்லில்லா வாயில் பெருவிரல் !

இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...

தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...

சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...

சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,

ஒரு வயதானது ...

உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,

'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...

எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,

முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே...

'அப்பா'தான்!

அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,

அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...

அம்மா சொல்லித் திருந்தவில்லை,

அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...

படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...

திருமணம்
செய்து வைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,

நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,

என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...

......................வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,

அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...

என் முகத்தை பார்க்கிறாள் ...

என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,

'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,😰😰😰😭😭

அவள் எச்சில்
என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

#அடங்குகிறது....................
.......................

"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,

மகளின் ...
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
இதை படிக்கும்போது கண்கள் ஈரமானல் நீங்கள் நல்ல தகப்பனாக பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்🙏...

Saturday, 10 February 2018

பட்டா சிட்டா

பட்டா வாங்க நடைமுறை என்ன? உபயோகமான தகவல்கள்,

Patta

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வாங்கிய இடத்தில் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் பெற்று வீடு கட்டி குடியிருக்கிறேன். தற்போது அந்த இடத்திற்கு பட்டா வாங்கலாம் என்றால், கிராம நத்தம் பகுதியில் உள்ளது அதனால் பட்டா வழங்க இயலாது என தெரிவிக்கின்றனர். அந்த இடத்திற்கு பட்டா வாங்க நடைமுறை என்ன?

”பட்டா பெற நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன் 25 வருட அனுபவ பாத்தியதை, சி.எம்.டி.ஏ. அப்ரூவல் இவற்றைக் குறிப்பிட்டு கிரயப் பத்திர நகல் இணைத்து அந்த ஆவணங்களை நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் சான்றொப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் பட்டா வழங்க கோரும் விண்ணப்பத்தில் ரூபாய் 10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லைத் தாள் ஒட்டி தாசில்தார் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து, அக்கம் பக்கத்தில் விசாரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார்.”

பட்டா சிட்டா அடங்கல்

பட்டா:    ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும்                 சான்றிதழ்.

சிட்டா:   குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான           விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்:  நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற                  விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு,                 அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள               உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

பட்டா -7

போதுமானவரை உங்களை எச்சரிக்கை செய்துவிட்டோம் என்றாலும் கூடுதலாக இன்னும் ஒரு பதிவு 

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

 

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல்.

அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -6

வருவாய் துறை -ஆவணங்கள்

 

பட்டா -6

நெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவரின் அநேக நிலங்கள் நெடுங்காலம் கவனிக்காமல் விட்டதினால் அவரின் நிலங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும் சோக கதையை சொன்னார் . உடனே இந்த பதிவு எழுதும் யோசனை தோன்றியது .

உங்கள் நிலங்களை நீங்கள் பாதுகாக்க கீழ்க்கண்ட யோசனைகளை கடை பிடியுங்கள் :-

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை ( நன்செய் / புன்செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . இல்லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால் , அதன் மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .

வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் . சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் . பட்டா உங்களிடம் இல்லையா …? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் .

பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் . மாற்றம் ஏதும் இருப்பின் , உடனடி கவனம் தேவை .

சில பேர் , பட்டாவை வாங்கி பார்த்தால் , அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் . அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .

வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது . ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும் . அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .

வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் . உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு , உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .

வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால் , நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு மனு கொடுக்கலாம் .

ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப்படவேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .

கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது .

உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால் , அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு நலமாக இருக்கும் . சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் .

வருவாய் துறை -ஆவணங்கள், பட்டா -5

வருவாய் துறை -ஆவணங்கள், 

பட்டா -5

 

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்

இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.

இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்

விளக்கங்கள் விவரம்:

பட்டா:

 ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்:

 ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்:

 கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்:

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து:

பிரிவு.

இலாகா:

துறை.

கிரயம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று:

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்:

 நில அளவை எண்.

இறங்குரிமை:

 வாரிசுரிமை.

தாய்பத்திரம்:

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை:

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு:

 நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்:

அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்:

 பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை:

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்….

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...