Wednesday, 11 April 2018

நாதம்

விந்து நாதம்

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத  வார்த்தை என்றும்  நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில்  விந்து என்றால் என்ன? உடலுறவின்போது  வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா?  அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?
இப்படி பலவிதமான  கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள்   இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி  தீர்த்து  கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும்  ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான்  லாட்ஜ்  டாக்டர்களும் ,பரம்பரை சித்த  வைத்திய கேடிகளும் நமது மக்களின்  மண்டையை குழப்பி  பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு  எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின்  சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய  இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு   இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும்  விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன்  தன்னிச்சையாகவோ  அல்லது காம கனவுகளுடனோ  வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான   செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது. 

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
1  சதை வளர்ச்சி 
2  எலும்பு வளர்ச்சி 
3  ரோம வளர்ச்சி 
4  அறிவு வளர்ச்சி 
5  தோல் பொலிவு 
6  உயிரணு உற்பத்தி 
7  உடலுறுப்புகள் பேணுதல் 

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள்  தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும்  கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு  ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால்  சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது  அந்த உடல் நலிந்து தளர்ந்து  சீர்கெட்டுபோகிறது,அத்துடன்  உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

சுக்கிலத்தின் மகிமைகளை  பின்வரும் சித்தர்களின்  பாடல்களின் மூலம் அறியலாம். 

விந்தை விட்டவன் நொந்து கெட்டான்  - திருமுலர் 
சுக்கிலம் விட ,சுவர் கெடும்  -திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல  - ****

சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும்  என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால்  ஊடகங்களும்  போலி மருத்துவர்களும் இதை ஊதி  பெரிதாக்கி விட்டார்கள். எனவே  விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால்  உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும். 

பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .

1  விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.
2  இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும் 

இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.

ஐயோ  ! விந்து இவ்வளவு முக்கியமானதா  இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து  விட்டோமே என்று புலம்பி  தவித்துலாட்ஜ்  டாக்டர்களிடம்  ஓட வேண்டாம். 

முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும்  உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து  உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என  வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3  மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.

உணவு முறை
-------------------------
காலை எழுந்தவுடன்  வெறும் வயிற்றில் ஒரு டம்ளர்  தண்ணீர்  அருந்தவும் பிறகு 10  உலர் திரட்சைகள்,5  முந்திரி, 5  பாதாம் ,5  பிஸ்தா , 1  அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3  மாதங்கள்  உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .

உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை  பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

1  ஓரிதழ் தாமரை 
2  ஜாதிகாய்  சூரணம் 
3  அஸ்வாகாந்த சூரணம்

100  சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை  குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் ,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து  கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் ! என்றால் என்ன ?

 விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் ! என்றால் என்ன ?

விந்து நாதம் என்பது ;-- மனித உடம்பில் உண்ணும் உணவு இரைப்பையில் சேர்ந்து .அரைக்கப்பட்டு திரவமாக மாற்றி, பின் நுரையீரல்,கல்லீரல் கணையம் போன்ற உறுப்புக்களால் அந்த திரவத்தை வேதியல் மாற்றம் செய்து இரத்தமாக்கி ,அவற்றை உடம்பு முழுவதற்கும் அனுப்பப் படுகின்றது .அந்த இரத்ததில் உள்ள முக்கிய வீரியமுள்ள பகுதியை வடிகட்டி(பில்டர் செய்து )  தனியாக எடுத்து குண்டலிப் பைக்கு அனுப்ப படுகின்றது.

அதற்கு மூல ஆதாரம் என்று சொல்லப் படுகின்றது ,அந்தப் பையில் சேரும் திரவத்திற்கு விந்து என்றும் .சுக்கிலம் என்றும் சொல்லப் படுகின்றது .அந்த விந்து பையில் இருந்து ஆறு ஆதாரங்கள் வழியாக உள் நாக்கின் வழியாக அதன் ஆவி இறங்கினால் தான் பேச்சு வரும் ,அந்த பேச்சுக்கு நாதம் என்று பெயர்.அதனால் தான் அதற்கு விந்து நாதம் என்று பெயர். விந்துவின் ஆவி மேலே வரவில்லை என்றால் பேச்சு என்னும் சப்தம் .நாதம் என்னும் ஒலி வராது.பேச்சு வராதவர்களை ஊமையன் என்றும் சொல்லுவது உண்டு .. 

வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம் .!

மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்கு மேல் நான்கு சதுரமான ஒரு பை உண்டு .அதில் 16.வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது .அதைத்தான் மானச தடாகம் என்று சொல்லுகின்றது. 16 வயதுக்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகின்றது.

அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன் வண்ணமாக இருக்கும்.அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும்.அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றில் ஒரு பங்காக வெகு நேர்மையாய் இருக்கும்.அதன் வண்ணம் பொன் மயமாய் இருக்கும்.அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அந்த ஆவி உண்டாகும் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் .அடங்கும் காலம் என்றும்,கேவல காலம் என்றும் சொல்லப்படும்.அந்த ஆவி உண்டாகும் காலத்தில் செயற்கையானால்  ( உடல் உறவு கொண்டால் ) கருத்தரிக்கும் .அதுதான் சிருட்டி என்று சொல்லப்படுகின்றது .இன்னும் விரிக்கில் பெருகும் ...

இந்திரியம் என்னும் விந்து இருக்கும் குண்டலிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு .அதில் மூன்றாகப் பிரியும் கிளை உண்டு அதன் மூலம் முதல் பிரமந்திரம் வரையில்... இடம்,வலம்,நடு வென்று ...கத்திரி மாறலாய்ப் பிராண அபானனுக்கு இடம் கொடுத்து ஊடுருவி நிற்கும் .இந்த நரம்புகளுக்குச சோம சூரியா அக்கினி  என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று  ...வள்ளலார் சொல்லுகின்றார் .

இந்த விந்து சக்தியின் வழியாகத்தான் நாதம் என்னும் ஒலி வருகின்றது...நாம் உண்ணும் உணவினால் உண்டாகும் இந்திரியம் என்னும் திரவத்திற்கு.சுக்கிலம் என்றும்,விந்து என்றும் சொல்லப் படுகின்றது.

அந்த குண்டலி வட்ட பையில் இடம்,வலம்,நடு என்ற கிளைகளாக உள்ள நடுவில் உள்ள நரம்பின் வழியாகத்தான் பூத உஷ்ண ஆவி உள் நாக்கின் வழியாகச் சென்று நாக்கின் வழியாக சப்தத்தை எழுப்புகின்றது .அந்த ஆவி எப்போதும் ஈரம் உள்ளதாகவே இருக்கும் ...உமிழ் நீர் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.நாக்கு வரண்டு போனால் பேச்சு வராது .ஆவி வருவது குறைந்தால் நாக்கு வரண்டு போகும்.சப்தம் என்னும் நாதம் ஒலிக்காது...

இடம் வலம் உள்ள நரம்பின் வழியாக கீழே செல்வது கீழ் நிலை சுக்கிலம்,என்றும்,மேலே செல்வதை மேல் நிலை சுக்கிலம் என்றும் சொல்லப்படுகின்றது. மேலே செல்லும் சுக்கிலம் என்னும் ஆவி  நின்று விட்டால்,சப்தம் என்னும் நாதம் என்னும் ஒலி நின்று விட்டால்  மரணம் வந்து விடும்.

இதற்கு அசுத்த பூத காரிய விந்து என்றும்,அசுத்த பூத காரிய நாதம் என்றும் பெயர் .

மேலும் வள்ளலார் சொல்லியது !

பிரம ஸ்தானம் தொடங்கிச் சுத்த சிவ ஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம் .,இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் ,அதற்கு மேல் அக்கினி  வண்ணமாயும் இருக்கும் .இது அடியிற் பருத்து வரவர நேர்மையாய் ,இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கு அணுவாய் ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் ,ஆன்மக் காட்சியில் அருகித் தோன்றுவதாய் ,இரண்டற நிற்கும்.இதற்கு சிவா காரண பூரண ஸ்தம்பம் என்று பெயர் .

முன் சொன்ன இருதயா அக்கினிப் பை அக்கிரமாய் விரிந்து ,விசேஷ அக்கினி ஜிவாலை விசிரிம்பித்துக் கீழ் இருக்கும் ஷீராப்திப் பையில் இருக்கும் ஜலத்தைச் சுருட்டிக் கொள்ள ,ஜீவனுக்கு மரண காலம் நேரிடும் .மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் ...அருந்தல் ...பொருந்தல் இவை சமமானால் மரணம் வராது....

இவை சாதாரண அறிவைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது...ஆன்ம அறிவைக் கொண்டுதான் தெரிந்து தெளிவு பெற முடியும்.

பர விந்து பர நாதம் என்பது !

விந்து நாதத்தைக் கொண்டு பர நாதத்தை பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...