சதுரப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீம்பிரண்டை என பல
வகை பிரண்டை வகைகளில் முப்பிரண்டை அரிய மூலிகை ஆகும்.
பெண்களின் மாதவிடாய் கோளறு, தேகம் வலுப்பெற, ஆஸ்துமா நீங்க, இதய கோளாறுகள் நீங்கிடவும் முப்பிரண்டை பயன்படுகிறது.
பெண்களுக்கு தாமதித்து வரும் மாதவிடாய், உதிரச் சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும்.
நீரிழிவு நோயினை தடுக்க, நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்க மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பற்பாடகம் என்னும் மூலிகைக்குக் கபவாதசுரம், பித்ததாக நோய், உளமாந்தம், பித்த தோஷம் ஆகியவன போகும்.
விழிகளுக்குக் குளிர்ச்சியுண்டாக்கும். உடலின் காங்கை, எரிச்சல், தாகம் இவைகளைச் சாந்தப்படுத்தும்.
பன்றி காய்ச்சல் மற்றும் இதர அனைத்து வித காய்ச்சல் குணமாக மருந்து.
குழந்தைகளுக்கு காணும் சீதபேதி, மற்றும் சுரம் ஆகியவை கட்டுக்குள் வரும்.
மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிவப்பு நிறமுள்ள ஒரே இதழுடைய மலர்களையும் உடைய குறுஞ்செடி. செடியின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையது.
இது தாது வெப்பு அகற்றியாகவும்,சிறு நீர்ப் பெருக்கியாகவும், காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பல் அருந்திவர ஒரு மண்டலத்தில் தாது இழப்பு,அதிமூத்திரம்,வெள்ளை,வெட்டைச்சூடு , நீர் எரிச்சல்,சிற்றின்ப பலவீனம் ஆகியவை தீரும்.
கருந்துளசி – தெய்வீக மூலிகை, இடி தாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்தனர்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை.
பெண்களுக்கு: வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற :
கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாரு எடுத்து ஒரு குவளை சாருடன் நான்கு தேக்கரண்டியளவு எள்ளெண்ணை விட்டு கல்கி உள்ளே கொடுத்து விட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.
துளசினால் குணமாகும் பிறமுக்கிய வியாதிகள்:
1. காக்கா வலிப்பு
2. அனைத்து விதமான காச்சல்கள் ( மலேரியா , ஃப்ளு )
3. தோல் சம்மந்தமான நோய்கள்
4. ஆண்மைக்கு
குறிப்பு: நேரம், நாடி ஆராய்ந்து தமிழ் வைத்தியர் மட்டுமே கொடுக்க வேண்டும்.
செங்கற்றாழை (செங்கற்றாளை) சித்தர்களின் மிக முக்கியமான காய கற்ப மூலிகை, ரசவாத மூலிகை.
கொள்ளவே சிவப்பான கற்றாழை தானுங்
கொண்டுவர மண்டலந்தா னந்தி சந்தி
விள்ளவே தேகமது கஸ்தூரி வீசும்
வேர்வைதான் தேகத்திற் கசியா தப்பா
துள்ளவே நரைதிரை களல்ல மாறுஞ்
சோம்பலேன்ற நேதிரையுங் கொட்டாவி யில்லை
கள்ளவே காமமது வுடம்பி லூறுங்
கண்களோ செவ்வலரிப் பூப்போ லாமே
என போகர் செங்கற்றாழை பற்றி குறிப்பிட்டுள்ளார்
செங்கற்றாழை கொண்டு செய்யப்பட்ட கற்ப்பத்தை 48 நாட்கள் உண்டு வர வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் நீங்கும். மீண்டும் 90 நாட்கள் உண்டால் உடலிலுள்ள கெட்ட நீர் உப்பெல்லாம் வெளியேறும்.
144 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு இல்லையே – என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.
கருநொச்சி மூலிகை – இது ஒரு அரிய மூலிகை.
சித்தர்களால் சேங்கொட்டை மூலம் வென்நொச்சி கருநொச்சி ஆனது.
இது ஒரு காயகற்ப மூலிகை. அறுபதை இருவதாக்கும் மூலிகை.
கருநொச்சி மூலிகைச்சாருடன் ராசா பற்ப செந்தூரம் சேர்த்து சாப்பிட நரை, திரை, சாக்காடு வெல்லலாம்.
இது ஒரு ரசவாத மூலிகை.
வைத்தியத்திற்கு : கை, கால்களில் ஏற்படும் ஓயாத குடைச்சல் குணமாகும்.
நீர்ப்பினிச்சம், மண்டைகுத்தல் குணமாகும்.
வாத சம்மந்தமான இடுப்பு வலி, முழங்கால் வலி மற்றும் முழங்கால் வீக்கம் குணமாகும்.
பாரிச வாயுவினால் கை, கால் செயலிலந்தால் இந்த நொச்சி இலை அமீர்த சஞ்சீவி போல உதவும் என்று தமிழ் சித்தர்கள் குறித்துள்ளனர்.
கரிசாலை மூலிகையை தெய்வீக மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
கரிசலாங்ககன்னி: (செந்துரத்தாதி)
திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் - குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை யாந்தகரைத்
தன்னாகத் தின்னாகந் தான்.
— தேரையார்
ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும் மூலிகை.
கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை – இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.
தினந்தோறும் பொடியினை சூடான நீரில் கலந்து சாப்பிட நோய் தீரும்.
இது ஒரு காயகற்ப மூலிகை.
இது சிறிய முட்டை வடிவ இலைகளையும்,சிவப்பு நிறப் பூக்களையும்,கொத்தான காய்களையும்,சிவப்பு நிற தண்டினையும் உடைய சிறிய செடி. செடி முழுவதும் மருத்துவ குணமுடையது.
தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் ஆகிய குணங்களையுடையது.
செடியை வேருடன் உலர்த்திப் பொடித்து சமன் கற்கண்டுத் தூள் கலந்து 1 தேக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.
செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்து தடவிவர சொறி, சிரங்கு, கபாலக்கரப்பான் ஆகிவை தீரும்.
இலைகளை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைந்து கொள்ளும்.
வேரால் பல் துலக்கவோ அல்லது வேரை மென்று துப்பவோ செய்தால் வாய்ப்புண், பல்வலி தீரும்.
சஞ்சீவி சூரணம் - சீந்தில்கொடி – சாகாமூலிகை, காய கர்ப்ப மூலிகை. இது ஒரு ஒட்டுண்ணி – ராமாயணக் கதையில் வரும் வாலிக்கு தன் எதிரில் பட்டவர் பலம் பாதி வருவதைப் போல், சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்கிறது.
இது உயிர் கொல்லி நோய்களான சர்க்கரை, புற்று நோய், எலும்புரிக்கி (எய்ட்ஸ்) நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது
உடல் வலுப்பெற அமிர்தஞ்சீவி :
போமென்ற பொற்சீந்தி யானால் நன்று
புகழான சிவப்புநன்று கருப்புநன்று
நாமொன்று கிடையாவிடால் நல்ல சீந்தில்
நறுக்கியே துண்டுதுண்டாய் கிழித்துப் போட்டு
ஏமேன்ற நி நிழலுலர்த்தி யிடித்துத் தூளாய்
யேற்றமாய் வடிகட்டிச் சூரணமே செய்து
தாமென்ற நாலிலொன்ரு சர்கரையே கூட்ட
சமத்தாக மண்டலந்தான் வெருக்கடிதூள் கொள்ளே
....
கொள்ளவே காமப்பா லுடம்பி லூறுங்
கணக்கான அமிர்தஞ் சீவி தானே.
சஞ்சீவி சூரணம் செய்முறை :
கொள்ளவே சஞ்சீவி சூரணத்தைச் சொல்வேன்
குணமான சீந்திலடித் தண்டுவாங்கி
விள்ளவே மேற்றோலை வாங்கிப்போட்டு
வெருளாதே நறுக்கியதை யுலரப்போட்டு
கள்ளவே யிடித்து நன்றாய்ச் சூரணித்துக்
கருவாக வடிகொண்டு படித்தூள்வாங்கி
நல்லாவே முந்நூற்றில் சுத்திசெய்து
நலமான பொடிபடிக்கு ஆவின்பாற்படியே
படியாக வரைப்படிதான் சீனிபோட்டு
பாங்காக ரவியுலர்த்திக் காய்ந்தபின்பு
அடியாக உரலிலிட் டிடித்துக்கொண்டு
அப்பனே சாதிக்கரங் சாதிபத்திரி
கடியாக வால்மிளகு ஏலங்கிராம்பு
கசகசா தாளிசமு மாசக்காயும்
வடிவாக வவைக்குவெரரு பலந்தான் கூட்டே
கூட்டியே யிரண்டுமொன்றாய் சேர்த்துக்கொண்டு
குறையாம லாறுபலஞ் சீனிசேர்த்து
நாட்டியே வொருகடிதா ணெய் யிற்கொள்ள
நலமாகத் தீருநோய் நவிலக்கேளு
தாட்டிகமா மேகநீ ரிருபதும்போம்
தளமான பிரமியங்கள் மேகமெல்லாம்
வாட்டியே வற்றியதோர் தேகமெல்லாம்
வளமாகு மச்திசுரம் வெட்டைபோமே
போமப்பா மூலத்தின் சூடுபோகும்
பொல்லாத தத்தவகை எல்லாம்போகும்
நாமப்பா கண்னெரிவு கைகால்காந்தல்
நாடாது தேகமெல்லாங் குளிர்ச்சியாகும்
தாமப்பா வூரலெல்லாந் தவறுண்டேபோம்
தளமான கபாயித்தின் ரணங்கள் தீரும்
வெகுசுருக்காய் பனவெடையப் பிரேகங் கொள்ளே
கருங்குன்றிமணி ஒரு காயகற்ப மூலிகை. நோய்கள் தவிர்த்து நீண்டு நெடு காலம் இளமையோடு வாழவும், தோல்நோய்கள், நரம்பு கோளறுகளை குணமாக்கும் அருமருந்தாகவும், தலை முடி கறுத்து நீண்டு வளரவும் செய்யும்.
இது வெள்ளை குன்றிமணி ஆனைக் குன்றிமணி அல்ல.
"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".
- அகத்தியர் குணபாடம் -
தலை முடி வளர அகத்தியர் கூறுவது:
கையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து பொடி செய்து அதில் எள்ளால் ஆன நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்.
வலுமை யென்ன ஏழானைப் பெலமுன்டாகும்
வந்தொரு தூதுவளைச் சூரனஞ் செய்து
மலையாதே யிருவகை சூரணமுங் கூட்டி
மனதுபோல் பெருகடி நீ கொள்வாயப்பா
உலையாமல் மூன்றுமண்டலந்தான் கொள்ளு
உக முடிந்து மறுபிறவி யில்லையப்பா
அலையாமற் பிறக்கிறதுஞ் சாவதுந்தான்
அவனிதனில் வழக்கமொன்று சொல்லலாமே!
உடல் வளம் மற்றும் ஏழு யானை வலிமை பெற ஊதா நிற பூக்கள் பூக்கும் தூதுவேளையுடன், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் தூதுவளை மற்றும் சங்கத்தூதுவளை செடியின் சாமூலத்தை சம அளவு உண்ண வேண்டும்.
வெள்ளை தூதுவளை
ஊதா தூதுவளை
No comments:
Post a Comment