ஆண்மைகுறைவு
நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர்,சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர்.
உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் காரணமாக அமைகின்றன.
இதற்கு என்னதான் தீர்வு? இந்த குறைபாடு ஒன்றும் குணபடுத்த முடியாத ஒரு விசயமல்ல, மொத்தத்தில் இது ஒரு நோய் என்று சொல்வதே தவறு, இருந்தாலும் இபோதுள்ள இளைஞர்கள் சுய இன்ப கரபழக்கம் மற்றும் தவறான உறவுகளினால் தங்களது சக்தியை வீணடிக்கின்றனர். இதனால் உடலில் தாது உடைகிறது மற்றும் எழுச்சி தன்மை குறைகிறது, மீண்டும் நீங்கள் நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டால் இது அடிக்கடி தோன்றாது, மேலும் அளவுக்கு மீறின சுய இன்பத்தால் மீண்டும் இந்த குறைபாடு தோன்றி குற்ற உணர்வு தோன்றுகிறது, இதுவே இன்றைய தலைமுறையினரின் நிதர்சன பிரச்சினை
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா !!
ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை.அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்
நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
* பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து,ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
* அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
* நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால்,சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
* ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.
* தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.
* சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
* துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
* முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
* வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.
* நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து,நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா,முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம்,மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய்,புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை,அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை,கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம்,நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்
No comments:
Post a Comment