Sunday, 6 June 2021

ragu kethu

ராகு-கேது தோஷம் என்ன செய்யும்..

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னம் என்று சொல்வதுதான் #முதலாவது இடம். இதிலிருந்துதான் ஜாதக அமைப்புக்களை கணக்கிட வேண்டும். இதில் சர்ப்பதோஷம், #நாகதோஷம் என்று சொல்லக்கூடிய ராகு&கேது தோஷம்தான் திருமணத் #தடைகள், குழந்தை பாக்யத் தடைகள், கருச்சிதைவு, பிரிவினைகள், #கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

ராகுவும், கேதுவும் ஒருவருக் கொருவர் #ஏழுக்கு ஏழாக சஞ்சாரம் செய்பவர்கள். ஒருவர் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் இடத்தில் இன்னொருவர் இருப்பார். உதாரணமாக #லக்னத்தில் ராகு இருந்தால் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் #கேது இருப்பார். இரண்டாம் இடத்தில் ராகு இருந்தால் அஷ்டம #மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது இருப்பார்.

மேலே சொன்ன இந்த ஸ்தானங்கள் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை. #இரண்டாம் இடம் தனம், குடும்பம், வாக்கு போன்றவற்றை பிரதிபலிக்கும். ஏழாம் இடம் தாம்பத்ய உறவு, விட்டுக் கொடுத்தல், தம்பதிகள் சுகம் ஆகியவற்றை அறிவிக்கும்.

 எட்டாம் இடம் ஆயுள் மற்றும் மாங்கல்ய பலம் பற்றி உணர்த்து கின்ற இட மாகும். ஆகவே இந்த 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பது #நாக தோஷம் அல்லது ராகு&கேது தோஷம் என்று சொல்லப் படுகிறது. இதுபோன்ற ஸ்தானங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அதே #தோஷம் கொண்ட ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் அந்த தோஷம் #சமன் அடைகிறது.

 அதாவது ஏழாவது இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அதே #ஏழாம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருக்கும் ஜாதகத்தை சேர்க்க வேண்டும். எட்டாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால் அதேபோல் எட்டாம் இடத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை மட்டுமே #சேர்க்க வேண்டும். வெவ்வேறு தோஷம் உள்ள ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. #சம தோஷம் உள்ள ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது #புத்திர தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகத்துடன் புத்திர தோஷம் #இல்லாத ஜாதகத்தை சேர்க்க வேண்டும். அதாவது ஐந்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இல்லாத ஜாதகமாக பார்த்து சேர்க்க வேண்டும். இதன்மூலம் ஒரு ஜாதகத்தில் புத்திரபலம் #கூடுவதால் தோஷம் நிவர்த்தி அடைகிறது.

No comments:

Post a Comment

நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள்

🌿 நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள் — உங்கள் உடல் ஏன் சோர்வடைகிறது என்பதற்கான உண்மை — இன்றைக்கு பலர் இப்படிச் சொல்கிறார்கள்👇 > “...