Thursday, 1 July 2021

ஜோதிடம்

ஜோதிடம் என்றால் என்ன?

கேள்வி;

 ஐயா ஜோதிடர் மூலம் மனிதன் அறிந்து கொள்ள  வேண்டிய விஷயங்கள் எவை?

பதில்;

 ஒரு மனிதன் பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைப் பயனை தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள உதவுவதே ஜோதிடம் ஆகும்.

 அதாவது ஜென்ம லக்கினம் முதல் 12 பாவங்களின் வழியை.

1)  ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் எனப்படும் 1ம் வீடு பாதிக்கப்பட்டால்
 அதன் அர்த்தம் அந்த ஜாதகன் பூர்வ ஜென்மத்தில் தான் தனி ஆளாக இருந்து  மற்றவருக்கு செய்த இன்னல்களை குறிப்பதாகும் அதனால் இப்பிறவியில் ஜாதகன் ஒருவருக்கு ஜென்ம லக்னம் பாதிக்கப்படும்போது தனக்குத்தானே இன்னல்களை தேடிக்கொள்வது குறிக்கும்.

2)  குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் வீடு பாதிக்கப்பட்ட ஒரு ஜாதகன் பூர்வ ஜென்மத்தில் அடுத்தவரின் குடும்பத்தை கெடுப்பதினால் இப்பிறவியில் அவனுக்கு குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டதை குறிக்கும்.

3) பூர்வ ஜென்மத்தில் ஒரு ஜாதகன் இளைய சகோதரன் ,சகோதரிக்கும் அதிக இன்னல்களை செய்தால் இப்பிறவியில் அவனுடைய சுயஜாதகத்தில் இளைய சகோதர ஸ்தானம் எனப்படும் 3ம் வீடு கடுமையான  பாதிக்கப்பட்டதை குறிக்கும்.

4) சுக ஸ்தானம் எனப்படும் 4ம் வீடு ஒரு ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த ஜாதகரின் பூர்வ ஜென்மத்தில் தனது தாய்க்கும் ,தாயாரின்சொத்து சுகதிருக்கும்  அதிகமான இன்னல்களை செய்திருப்பார் என்பதை குறிக்கும்.பெண்கள்  என்றால் தந்தையை குறிக்கும் .

5)  பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் வீடு ஒரு ஜாதகருக்கு பாதிக்கப்பட்டிருந்தால், அவர் பூர்வ ஜென்மத்தில் தனது குலதெய்வ வழிபாட்டை சரியாக செய்யாமல் இருந்ததையும், தனது  குழந்தைகளை சரியாக கவனிக்காமல் விட்டதையும் தெள்ளத் தெளிவாக குறிக்கும்.

6)  சத்துரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் வீடு ஒருவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்த தனது உடலால்  மற்றவர்களுக்கு அதிக இன்னல்களை செய்திருந்தால், இப்பிறவியில் சத்துரு ஸ்தானம் ம்எனப்படும் ஆறாம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை குறிக்கும்,

7)  தனது வாழ்க்கை துணை ,நண்பர்கள் ,கூட்டாளிகள் ,பொதுமக்கள் ஆகியவர்களுக்கு அதிகமான இன்னல்களை பூர்வ ஜென்மத்தில் ஜாதகர் செய்திருந்தால் இப்பிறவியில் களத்திரஸ்தானம் எனப்படும் 7ம் இடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை குறிக்கும்.

8)  தனது வாழ்க்கைத் துணைக்கும் ,தனது வாழ்க்கை துணை வழியில் உள்ளவர்களுக்கும் அதிகமான ஏமாற்றங்களை செய்திருந்தாலும் , மேலும் மற்றவர்களுக்கு உயிர் பிரியும் அளவிற்கு அதிக இன்னல்களை செய்திருந்தால் இப்பிறவியில் ஆயுள்  ஸ்தானம் எனப்படும் 8ம் வீடு பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும்.

9 )  மற்றவர்களுக்கும் ,தம் குடும்பத்தில் பெரியவர்களுக்கும்,  கோவில் சொத்துக்களை அபகரிப்பது,  ஆன்மீக குருமார்களின் புகழுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்திருந்தால் இப்பிறவியில் பாக்கியஸ்தானம் எனப்படும் 9ம் வீடு பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும்.

10)  அடுத்தவரி,ன் தொழிலுக்கும் ஆண்கள் என்றால் தனது தந்தைக்கும் பெண்கள் என்றால் தனது தாயாருக்கும், அதிகமான இன்னல்களை செய்திருந்தால் இப்பிறவியில் ஜீவன ஸ்தானம் எனப்படும் 10ம் வீடு பாதிக்கப்பட்டுள்ளதை  தெளிவாக குறிக்கும்.
 
11) 
 அடுத்தவருக்கு வரும் லாபங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாலும், பணத்தை தவறான வழியில் பயன்படுத்தி அடுத்தவர்களுக்கு அதிக இன்னல்களை செய்திருந்தால் இப்பிறவியில் லாப ஸ்தானம் எனப்படும் 11ஆம் வீடு பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும். 

12) தனது வாழ்க்கைத் துணையின் கற்பு நிலை மீது சந்தேகம்  கொள்வதினாலும்,  தன் வாழ்க்கை துணை வழியில் சொத்துகளை வீண்விரயம் செய்யவதினாலும் ,தனது வாழ்க்கை துணை மனநிலை பாதிக்கப்படுபடி செயல் புறிந்ததாலும் இப்பிறவியில் விரைய ஸ்தானம் எனப்படும் 12 பாதிக்கப்பட்டுள்ளதை குறிக்கும்.

 அன்பர்களே பூர்வ ஜென்மத்தில் ஒரு மனிதன் செய்த பாவ புண்ணியங்களை இப்பிறவியில் எடுத்து உறைப்பதே ஜோதிடம் ஆகும்.

 வாழ்க வளமுடன்

9360972178

No comments:

Post a Comment

நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள்

🌿 நரம்பு மண்டலம் + ஹார்மோன்கள் — உங்கள் உடல் ஏன் சோர்வடைகிறது என்பதற்கான உண்மை — இன்றைக்கு பலர் இப்படிச் சொல்கிறார்கள்👇 > “...