Friday, 13 December 2024

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்! 

🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது. 

கேரளாவில் உள்ள சிறந்த  கடற்கரைகளுக்கான உங்களின்  வழிகாட்டி இதோ, ஒவ்வொன்றையும் தனித்துவமாக்குவது மற்றும் நீங்கள் எப்படி அங்கு செல்லலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது! 

1) கோவளம் கடற்கரை -

 பிறை வடிவ கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கக் காட்சிகளுக்குப் பிரபலமானது. 🚗 எப்படி செல்வது: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 16 கி.மீ. 

2) வர்கலா கடற்கரை -

 வியத்தகு பாறைகள் மற்றும் இயற்கை கனிம நீரூற்றுகளுக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி அடைவது: திருவனந்தபுரத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. 

3) மராரி கடற்கரை - 

அமைதி தேடுபவர்கள் மற்றும் ஆயுர்வேத பின்வாங்கல்களுக்கு ஏற்றது. 🚗 எப்படி செல்வது: ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. 

4) ஆலப்புழா கடற்கரை - 

அதன் வரலாற்றுத் தூண் மற்றும் அருகிலுள்ள உப்பங்கழிகளுக்கான சின்னம். 🚗 எப்படி அடைவது: ஆலப்புழை நகரில் அமைந்துள்ளது, ரயில் அல்லது சாலை வழியாக அணுகலாம்.

 5) செராய் கடற்கரை - 

கடல் மற்றும் உப்பங்கழிகளின் கலவைக்கு பிரபலமானது, நீச்சலுக்கு ஏற்றது. 🚗 எப்படி செல்வது: கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 25 கி.மீ.

 6) பேக்கல் கடற்கரை - 

கடலைக் கண்டும் காணும் கம்பீரமான பேக்கல் கோட்டைக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி செல்வது: காசர்கோடு ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ.

 7) பையாம்பலம் கடற்கரை -

 பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனம் கொண்ட குடும்பத்திற்கு ஏற்ற இடம். 🚗 எப்படி செல்வது: கண்ணூர் நகர மையத்திலிருந்து 2 கி.மீ. 

8) கப்பாட் கடற்கரை -

 1498 இல் வாஸ்கோடகாமா தரையிறங்கும் இடமாக வரலாற்றுச் சிறப்புமிக்கது. 🚗 எப்படி அடைவது: கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ. 

9) கப்பில் கடற்கரை - 

தங்க மணல் மற்றும் உப்பங்கழிக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி செல்வது: காசர்கோடு நகரத்திலிருந்து 12 கி.மீ. 

10) வக்காடு கடற்கரை -

 நதி-கடல் சங்கமம் மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பிரபலமானது. 🚗 எப்படி செல்வது: மலப்புரத்திலிருந்து 40 கி.மீ.

 11) பதிஞ்சரேக்கரா கடற்கரை -

 புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களுக்கு பெயர் பெற்றது. 🚗 எப்படி செல்வது: மலப்புரத்திலிருந்து 40 கி.மீ. 

12) கொல்லம் கடற்கரை -

 அழகிய காட்சிகளை வழங்கும் ஒரு வரலாற்று துறைமுக கடற்கரை. 🚗 எப்படி செல்வது: கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. 

13) முழப்பிலங்காடு டிரைவ்-இன் பீச் -

 தென்னிந்தியாவின் ஒரே டிரைவ்-இன் பீச்! 🚗 எப்படி செல்வது: கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. 

14) ஃபோர்ட் கொச்சி கடற்கரை -

 அதன் சீன மீன்பிடி வலைகள் மற்றும் காலனித்துவ வசீகரத்திற்கு பிரபலமானது. 🚗 எப்படி செல்வது: எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. 

15) சங்குமுகம் கடற்கரை -

 உள்ளூர் மற்றும் சூரியன் மறையும் பிரியர்களுக்கு ஏற்றது. 🚗 எப்படி செல்வது: திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 8 கி.மீ. 

16) கடற்கரை - 

படகுகள் மற்றும் பரந்த உப்பங்கழிகளுக்குப் புகழ்பெற்றது. 🚗 எப்படி அடைவது: அலப்பியில் எளிதாக அணுகலாம். 

17) பேப்பூர் கடற்கரை -

 அதன் கப்பல் கட்டும் தளம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. 🚗 எப்படி செல்வது: கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. 

18) சினேகதீரம் கடற்கரை -

 நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களைக் கொண்ட குடும்ப நட்பு கடற்கரை. 🚗 எப்படி செல்வது: திருச்சூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. 

19) கடற்கரை -

 உள்ளூர் கலாச்சாரம் மற்றும் சுவையான கடல் உணவுகளுடன் பரபரப்பானது. 🚗 எப்படி அடைவது: கோழிக்கோடு நகரில், எளிதில் அணுகலாம்.

Sunday, 21 July 2024

மனிதர்கள்

தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்:

1. உப்புமூட்டை மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல், நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர். 

2. கொசு மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள். 

3. ஆதிக்க மனிதர்கள்: இந்த நபர்கள் பெருமையை தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்  உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும்  விரும்புபவர்கள்.

4. முதலை மனிதர்கள்: இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள். அவர்கள் உங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கி பழகுவார்கள், மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது அந்த தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள். அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

5. பச்சோந்தி மனிதர்கள்: இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

6. கனவுக் கொலையாளிகள்: இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளை பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.

7. குப்பை மனிதர்கள்: இந்த நபர்கள் எதிர்மறை மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்மறையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் நேர்மறையான மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான சரியான திசையில் நகரும்.

வாழ்த்துக்கள் நண்பர்களே...

Monday, 27 June 2022

tips

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

சமையலில் செய்யக்கூடாதவை

சமையலில் செய்யக்கூடாதவை. 

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. 

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். 

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்... 

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

நம் உடலைப் பற்றி அறிவோம்..

நம் உடலைப் பற்றி அறிவோம்...

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். 
மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள் :-

1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.

3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

5. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.

6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.

தசை :-

1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கால்கள் :-

1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.

2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள் :-

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தியுண்டு.

மூளை :-

1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

இறப்பு :-

மனிதன் உயிரிழந்தப் பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்
மூளை- 10 நிமிடங்கள்
கால்கள்- 4 மணிநேரம்
தசைகள்- 5 நாட்கள்
இதயம்- சில நிமிடங்கள் √

Friday, 3 June 2022

சுதர்சன சக்கரத்தின் சுழலும்

*சுதர்சன சக்கரத்தின் சுழலும்* *வேகம் எவ்வளவு தெரியுமா*?

இணையத்தில் deiveegaa என்ற முகநூல் பகதி தளத்தில் இந்த பதிவினை படித்தேன். 

இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. 

இதை படித்த போது 'அட' என என்னை ஆச்சரியப்படுத்தியதால்  உங்களுக்கு பகிர்கிறேன்.

பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு?

இப்படி ஒரு கேள்வியை நான் உங்களை கேட்டால் என்னை எப்படி பார்ப்பீர்கள்? 

உங்களுக்கு இது கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட தோனலாம்.. 

ஆனால் இதில்  விஷயம் இருக்கிறது..

பக்தியில் சிறந்த பெரியவர்களிடம் இந்த கேள்வியை கேட்டால் கூட கொஞ்சம் யோசனை செய்வார்கள். 

ஆனால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

சரி,பெருமாளின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் சுழலும் வேகம் எவ்வளவு?என்ற கேள்விக்கான அறிவியல் பூர்வமான பதிலை தெரிந்து கொள்வோமா!

திருமால் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தின் சுழல் வேகம் 30கிமீ/வினாடி என்று துல்லியமாக கூற முடியும். 

எப்படிடிடிடிடி??????.

திருமால் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரம், சிவபெருமான் அளித்தது என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு பக்தி செய்தி. 

திழருவீழிமிழலை,திருமாற்பேறும் ஆகிய இந்த இரண்டு ஊர்களும் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்

சிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்ச்சித்த, நாராயண மூர்த்தி, ஒருநாள் மலரொன்று குறையவே ,தன் கண்ணொன்றை எடுத்து இறைவன் திருவடியில் சமர்பிக்க, மகிழ்ந்த இறைவன் தான் கையில் வைத்திருந்த ,
சக்கரப்படை என்ற சுதர்ன சக்கரத்தை நாராயணனுக்கு வழங்கினான் என்பது வரலாறு.

திருமாலுக்கு சிவபரம்பொருள் வழங்கிய சக்கரம் சிவனிடம் எப்படி வந்தது? என்று ஆராயப் போனால் அதற்கு நாம் சலந்தராசுர வதம் என்ற, ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்

இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அசுரன் சலந்தரன்.

இறைவனை தவிர யாராலும் அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு திருக்கயிலாயம் நோக்கி வந்து, இறைவனுடன் போரிட வந்தான்

இறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, யாரப்பா நீ??என்றார்

நான் சலந்தரன்!! கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.

கயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது!!

கிழவரே!! என்னை பற்றி உமக்கு தெரியாது!!

சரி தெரிந்து கொள்கிறேன்!! 

உன் வலிமையை சோதித்து பார்ப்போம்!! 

நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன் 

அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன்* என்ற சிவ பெருமான் தன் கால் விரலால் தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்.

கேவலம் மண்ணை பெயர்த்து தலையில் வைப்பது ஒரு சாதனையா?? என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து அந்த சக்கரத்தை தூக்க முயற்சித்தான்..

சக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சுழல துவங்கியது!!

அதெப்படி சக்கரம் எப்படி உடனே சுழல துவங்கியது? என்கிற ஒரு  கேள்வி உங்களுக்குள் வரலாம்!

சக்கரம் எப்படி உடனே சுழல துவங்கியது?? என்று அறிய ஆவலென்றால் உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை தட்டி எழுப்புங்கள்..

இயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் எந்த ஒரு பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி

அதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே!! 

ஏன்?? என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணித்திருக்கிறோம் என்பதுதான் பொருள்

அது போல பூமியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த சிவனால் வரையப்பட்ட மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில் சுழல துவங்கி விட்டது.

புவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது 30KM/Second

புவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை!!

சுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்!!

இந்த சக்கரமே சிவபெருமான் 
மூலம் பெருமாளிடம் வந்தது.

இந்த சக்கரமே திருமால் வேண்டி
விரும்பியது,

இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை
தாங்கி வீசியெறிய வலிமையும்
கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து
"சக்கரதான மூர்த்தியாக நின்றான்

சுதர்சன சக்கரம் குறித்து இன்னும் அறிந்துகொள்வோமா!

*சுதர்சன சக்கரத்தின் மகிமை*
*சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்!*

கிருஷ்ணரின் கையில் உள்ளது சுதர்சன சக்கரம் என்பது நமக்கெல்லம் தெரியும்.

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

'சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். 

சுதர்சன சக்கரம்
மற்ற ஆயுதங்களைப் போல் 
இல்லை. 

எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. 

அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.

சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும் 

மகாவிஷ்ணுவோ,இதை தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். 

எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.

அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.

எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். 

மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. 

எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... 

அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

இன்னொரு விஷயம்... சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? 

சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. 

அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். 

மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. 

நம் எதிர்ப்புகளையும் 
எதிரிகளையும் அழித்து 
நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார்
என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். 

இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :

ஓம் நமோ சுதர்சன சக்ராய
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா

மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்த மந்திரத்தை முதன் முதலில் சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ விளக்கேற்றிவைத்து 1008 முறை ஜபித்தால் சித்தியாகும்.

அதன் பிறகு தேவையானபோது 3 தடவை ஜபித்தால் எத்தகைய ஆபத்தில் இருந்தும் தப்பிக்கலாம். 

அதோடு எந்த வித தீய சக்தியும் நெருங்க விடாமல் இது கவசம் போல் காக்கும்.

Wednesday, 25 May 2022

அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்

அஷ்ட கர்மங்களுக்கான மூலிகைகள்

1.வசியம்:-

*1.* சீதா செங்கழுநீர் - ராஜவசியம்
*2.* நீல ஊமத்தை - ஸ்திரீ வசியம்
*3.* வெள்ளை எருக்கன் வேர் - லோக வசியம்
*4.* விஷ்ணுகிரந்தி - சொர்ன வசியம்
*5.* கருத்தபாசம்பை - சர்வ வசியம்
*6.* வெள்ளை குன்றிவேர் - மிருக வசியம்
*7.* பொற்றலை கையான்தகரை - தேவதை வசியம்
*8.* செந்நாயுருவி - மனித வசியம்

2. மோகனம்:-

*1.* பொன் ஊமத்தை - ஸ்திரி மோகனம்
*2.* கோரைக்கிழங்கு - மிருக மோகனம்
*3.* வெள்ளை ஊமத்தை - பதவி மோகனம்
*4.* ஆலம் விழுது - ராஜ மோகனம்
*5.* கஞ்சா - சொர்ண மோகனம்
*6.* நன்னாரி - ஜனமோகனம்
*7.* மருள் ஊமத்தை - தெய்வ மோகனம்
*8.* கிராம்பு - சர்வ மோகனம்

3. ஸ்தம்பனம்:-

*1.* கட்டுக்கொடி - ஜல ஸ்தம்பனம்
*2.* பாலக்குரண்டி - அக்னி ஸ்தம்பனம்
*3.* பிரண்டை - கிராணி  ஸ்தம்பனம்
*4.* நத்தை சூரி - காய  ஸ்தம்பனம்
*5.* சக்தி சாரணை  - ஆயுத ஸ்தம்பனம்
*6.* பூமிசர்க்கரைகிழங்கு -சுக்கில ஸ்தம்பனம் 
*7.* குதிரை வாலி - கெர்ப ஸ்தம்பனம்
*8.* நீர்முள்ளி - வியாதி ஸ்தம்பனம்

 4‌. உச்சாடனம் :-

*1.* நரி விரட்டி - மிருக உச்சாடனம்
*2.* மான்செவிக் கண்ணி - நாலி உச்சாடனம்
*3.* சுண்ட வேர் - பூத உச்சாடனம்
*4.* கண்டன் கத்திரி - ராஜ உச்சாடனம்
*5.* தேள் கொடுக்கு செடி - விஷ உச்சாடனம்
*6.* நாறுகரந்தை - வியாதி உச்சாடனம்
*7.* கொட்டான் கரந்தை - மோகன உச்சாடனம்
*8.* பெரும் கிலு கிலுப்பை - தெய்வ உச்சாடனம்.
  
5.வித்வேசனம் :-

*1.* கருத்தி காக்கிலை - தெய்வ  எச்சனை
*2.* வெள்ளை காக்கிலை - சர்வ தெய்வ எச்சனை
*3.* திருகு கள்ளி -பூத எச்சனை
*4.* செங்கன்தாரி - சர்வ எச்சனை
*5.* காட்டாமணக்கு - சர்வ பூத எச்சனை
*6.* கீழ் நெல்லி - பூமி எச்சனை
*7.* ஆடு தீண்டபாளை - சர்வ வித்துவேசனம்
*8.* பீனைக்காலி- வியாதி எச்சனை

6. ஆக்ருஷணம் :-

*1.* சிறு முன்னை - தெய்வ ஆக்ருஷணம்
*2.* குப்பைமேனி - துட்டருக ஆக்ருஷணம்
*3.* சிறிய நங்கை - பிசாசு ஆக்ருஷணம்
*4.* அழுகண்ணி - சர்வ ஆக்ருஷணம்
*5.* துடரி - மிருக ஆக்ருஷணம்
*6.* தலை சுருளி - ராஜ ஆக்ருஷணம்
*7.* உள்ளொடி விடிவெர்வு - பெண் ஆக்ருஷணம்
*8.* கார்திகை கிழக்கு - விஷ ஆக்ருஷணம்

7.பேதனம் :-

*1.* கோழி அவரை - தெய்வ பேதனம்
*2.* காட்டு செம்பவளை -  லோக பேதனம்
*3.* வட்டத் துத்தி - அக்னி பேதனம்
*4.* சங்கம் வேர் - பூத பேதனம்
*5.* மாவிலங்கு - தெய்வ பேதனம்
*6.* நீர்மேல் நெருப்பு - பிசாசு பேதனம்
*7.* சீந்தி - சத்ரு பேதனம்
*8.* பாதிரி -ரோக பேதனம்

8. மாரணம் :-

*1.* கார்த்திகை கிழங்கு - பிசாசு மரணம்
*2.* நெறிவிகம் - சர்வ மாரணம்
*3.* ஒடிவை - மிருக மாரணம்
*4.* கொடிவேலி - வியாதி மரணம்
*5.* நச்சுப்புல் - விச மாரணம்
*6.* மறு தோன்றிய  - பூத பிசாசு மாரணம்
*7.* பச்சை நாவி - மனித மாரணம்
8. எட்டி - விஷ மாரணம்.


Thursday, 17 March 2022

ஜோதிடம்

Tuesday, 15 March 2022

காரகோபாவநாஸ்தி

காரகோபாவநாஸ்தி

ஒரு காரகத்தை குறிக்கிற கிரகம் அதே பாவத்தில் அமர்ந்திருப்பது காரகோபாவநாஸ்தி எனப்படும் 

கிரகங்களும் அதன் காரகங்களும்

சூரியன்   தந்தைக்காரகன்

சந்திரன்  தாய்க்கரகன்

செவ்வாய் சகோதரகாரகன் 

சுக்கிரன் வாகனம் மற்றும் களத்திரக்காரகன்

குரு தனம் மற்றும் குழந்தைகாரகன் 

புதன் தாய் மாமனுக்கு காரகன்

இடங்களும் அதன் காரகங்களும்

2 ம் இடம் தனம்

3 ம் இடம் சகோதரம்

4 ம் இடம் வண்டி மற்றும் தாய் 

5 ம் இடம் குழந்தைகள்

6 ம் இடம் தாய் மாமன் 

7 ம் இடம் களத்திரம் 

8 ம் இடம் ஆயுள்

9 ம் இடம் தந்தை 

10 ம் இடம் தொழில் 

அதன் அடிப்படையில் 

இரண்டாமிடம் தனஸ்தானம் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம் இவற்றில் குரு இருப்பதோ

நான்காமிடம் தாய் ஸ்தானம் இதில் சந்திரன் இருப்பதோ 

நான்காமிடம் வாகனத்தை குறிப்பதால் மற்றும் ஏழாமிடம் வாழ்க்கை துணையை குறிப்பதால் இங்கு சுக்கிரன் இருப்பதோ 

எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் மற்றும் பத்தாமிடம் தொழில் ஸ்தானம் என்பதால் இவற்றில் சனி இருப்பதோ 

மூன்று சகோதர ஸ்தானம் என்பதால் செவ்வாய் இருப்பதோ 

ஒன்பதாமிடம் தகப்பன் ஸ்தானம் என்பதால் சூரியன் இருப்பதோ 

ஆறிமிடம் தாய் மாமன் ஸ்தானம் என்பதால் புதன் இருப்பதோ

காரகோ பாவ நாஸ்தி ஆகும் 

இந்த அமைப்பில் ஒரு கிரகம் இருக்குமானால் அதற்கு உண்டான காரகம் பாதிப்படையும் என்பது ஜோதிட விதி

இந்த காரகோபாவநாஸ்தி என்ன செய்யும் என்றால் 4 ல் இருந்தால் தாயை விட்டு பிரித்து வைக்கும் 9 ல் தந்தையை பிரித்து வைக்கும் 7 ல் வாழ்க்கை துணையை பிரித்து வைக்கும் 5 லிருந்தால் குழந்தைகளுக்கு ஆகாது 2 லிருந்தால் தனம் கெடும் 10 லிருந்தால் தொழில் கெடும் 8 லிருந்தால் ஆயுள் பங்கம் 3 லிருந்தால் சகோதரர்களுக்கு ஆகாது அல்லது இளைய சகோதரமே இல்லை என்று பொதுவான ஜோதிட கருத்து இருப்பது நாம் அறிந்ததே 

இப்படி பட்ட அமைப்பில் ஒரு ஜாதகம் இருந்தால் மேலே சொன்ன பாதிப்புகள் இருக்குமா என்று கேட்டால் பொதுவாக அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது ஒரு வேளை இந்த அமைப்பு வேலை செய்யாமலும் போகலாம்

மேலே சொன்ன அமைப்பு இருந்தும் எந்த பாதிப்பும் இல்லாமல் போக காரணம் என்ன என்று பார்ப்போம் 

குறிப்பிட்ட பாவத்தில் உள்ள கிரகம் ஆட்சியோ உச்சமோ அடைந்தாலோ குருவின் பார்வையில் இருந்தாலோ வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் என்ற அமைப்பில் இருந்தாலோ அல்லது லக்கினாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ இல்லை லக்னாதிபதியின் பார்வையில் இருந்தாலோ இந்த காரகோபாவநாஸ்தி வேலை செய்வது இல்லை 

உதாரணமாக சனி 8 ல் இருந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவோம் இதனை நாம் எதை வைத்து சொல்கிறோம் என்றால் சனி இருக்கும் இடம் கெடாது என்ற விதியை வைத்து அல்லவா உண்மை அதுவல்ல 

பகை நீச்சம் என்கிற அமைப்பில் சனி இருந்து 8 க்கு அதிபதியும் லக்னாதிபதியும் பலம் இல்லாமல் இருந்தால் சனி திசையில் ஆயுள் கண்டம் ஏற்படும் அப்படி இல்லாமல் லக்கினாதிபதி மட்டும் வலிமையாக இருந்தால் ஆயுள் மட்டும் தான் இருக்கும் தொழில் தனம் போன்றவை எதுவும் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும் இதற்கு சனி திசை நடைமுறையில் வர வேண்டும் மற்றபடி பயம் தேவையில்லை

ஒருவேளை இவற்றில் எந்த விதியுமே பொருந்தி வரவில்லை என்றால் மட்டுமே காரகோபாவநாஸ்தி வேலை செய்யும் எனவே இந்த அமைப்பை பார்த்து மட்டுமே பயந்துவிட கூடாது முழுமையாக ஆராய வேண்டும்

ஒருவேளை அப்படியே காரகோபாவநாஸ்தி இருப்பதாகவே கொள்வோம் அப்படி இருந்தாலும் பயம் கொள்ள வேண்டுமா என்ன சிவபெருமான் குடும்பத்தோடு இருக்கும் படத்தை வைத்து பூஜை செய்ய யாவையும் சிவன் சரி செய்துவிட்டு போகிறார் 

தோஷத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் அது யோகமாக மாறும் அல்லது இறைவன் மாற்றுவான்


செவ்வாய் பகவான்

ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக முக்கியமான கிரகமாகிய 
"செவ்வாய் பகவானை" பற்றிய சில முக்கியமான தகவல்களை பற்றியும் மேலும் செவ்வாய் பகவான் நம்முடைய ஜாதகத்தில் எந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு ஏற்படும் என்பதை பற்றியும் செவ்வாய் பகவானும் நம்முடைய முன் ஜென்மத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.

🌹பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடம் செவ்வாய் பகவானைப் பற்றிய முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன.செவ்வாய் பகவான் ஒருவருக்கு நன்மை செய்ய மாட்டார் தீமையை மட்டுமே செய்வார் செவ்வாய் பகவான் ஒரு அசுபர்
என்று சொல்லி இருப்பார்கள் அது எல்லாம் முற்றிலும் தவறு.

🌹செவ்வாய் பகவான் நம்முடைய பிறப்பின் லட்சியத்தை சொல்லக்கூடிய கிரகமாகும்.நாம் எதற்கு பிறந்திருக்கிறோம் நம்முடைய ஆத்மா இந்த பூமியில் எதற்கு வந்திருக்கிறது எதனை அடைய நாம் இந்த ஜென்மத்தில் பிறப்பு எடுத்து இருக்கிறோம்.
எதனை நோக்கி நம்முடைய வாழ்க்கை இருக்கும் எந்த எந்த விஷயங்களை நாம் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை எல்லாம் சொல்லக் கூடிய கிரகம் தான் செவ்வாய் ஆவார்.

🌹அதாவது நம்முடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து செவ்வாய் பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ  அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடைவதற்கு தான் இந்த ஜென்மம் நாம் எடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.

🌹செவ்வாய் நம்முடைய லக்னத்திலிருந்து எத்தனாவது பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை அடைவதற்கு தான் நம்முடைய ஆத்மா இந்த உலகத்தில் ஜனனம் எடுத்து இருக்கிறது என்று அர்த்தம்.பிறப்பின் நோக்கத்தை சொல்லக்கூடியவர் செவ்வாய் பகவான்.

🌹எதற்காக நாம் இந்த உலகத்தில் பிறந்து இருக்கிறோம் எதனை நோக்கி நம்முடைய வாழ்க்கை பயணம் இருக்கும் எது நம்முடைய வாழ்க்கையின் இலக்கு எந்த விஷயங்களை நாம் அடைய விரும்புவோம்.எந்த விஷயங்கள் சார்ந்து நமக்கு வேகம் அதிகமாக இருக்கும் இதை எல்லாம் சொல்லக் கூடியவர் செவ்வாய்தான்.

🌹செவ்வாய் பகவான் இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருக்குமே பிறப்பே கிடையாது.
நாம் அனைவரும் இந்த உலகத்தில் ஜனனம் எடுத்திருப்பதே செவ்வாய் சார்ந்த விஷயங்களை அடைவதற்கு தான்.அதற்கு தான் நான் முதல் முக்கியத்துவத்தை நம்முடைய வாழ்க்கையில் கொடுப்போம்.

🌹மேலும் செவ்வாய் பகவான் நம்முடைய ஜாதகத்தில் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்காக நாம் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
எப்போதும் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும்,எந்த நிலையிலும்,
செவ்வாய் பகவான் இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட ஜாதகர் எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.

🌹மேலும் செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடைவதற்கு நம்மை அவசரப் வைக்கும்.இப்போதே வேண்டும் இப்போதே செய்ய வேண்டும் என்ற ஒரு மனோபாவத்தை செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களில் நம்முடைய செயல்பாடுகளை கொடுத்துவிடும்.

🌹இப்பொழுது 12 பாவங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அதன் மூலம் எந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு ஏற்படும் என்பதையும் ஒவ்வொரு  பாவமாக நாம் பொருத்திப் பார்க்கலாம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹1.(லக்னத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் லக்னத்தில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னுடைய வாழ்நாளில் அல்லது இந்த ஜென்மத்தில் எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் வைத்து இந்த பிறப்பு எடுத்து இருப்பார்.

💐மேலும் இவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் என்றால் பிடிக்கும் குழந்தைகள் என்றால் பிடிக்கும்.

💐money savings சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு பிரச்சனைகள் கண்டிப்பாக ஏற்படும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. இவர்கள் சேமித்து வைக்க நினைத்தாலும் அந்த பணத்தை இவர்களால் சேமித்து வைக்க முடியாது.

💐மேலும் லக்னத்தில் செவ்வாய் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் என்றைக்குமே கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது இவர்கள் கடன் வாங்கினார்கள் என்றால் அந்த கடனை திருப்பி செலுத்த படாத பாடு படுவார்.கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொடுத்த பணமும் திரும்ப வராது.

💐என்றைக்குமே கடன் வாங்கக்கூடாது, கடன் கொடுக்கக்கூடாது ,சீட்டு நடத்தக்கூடாது, loan எடுக்க கூடாது,
Credit card வாங்கக் கூடாது மீறி இது எல்லாம் செய்தார்கள் என்றால் பிரச்சனைகள் தான் போய் சிக்குவார்கள்.

🌹(2ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் இரண்டாம் பாவத்தில் இருந்தால் பேசும் வார்த் தையை இவர்களுக்கு மிகவும் கண்ணியமாக இருக்கும் கண்ணியமான குரல் கொண்டவர்கள்  இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்கள்.

💐பேச்சு சார்ந்த விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவும் பேசுவதையே மிகவும் கண்ணியமாகவும்  அடுத்தவர்களுக்கு அறிவுரை அல்லது ஆலோசனை கொடுப்பவராகவும் இவர்கள் இருப்பார்கள்.

💐மேலும் இவர்கள் தன்னுடைய குடும்பத்திற்காக எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இந்த பிறப்பு எடுத்து இருப்பார்கள்.இவர்கள் மனதில் எப்போதும் தன்னுடைய குடும்பம் சார்ந்த தான் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

💐இவர்கள் தன்னுடைய வருமானத்தை எப்படியெல்லாம் பெருக்க வேண்டும் என்ற நோக்கமும் மற்றும் பணத்தை எப்படி எல்லாம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இவர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்.அது தான் இவர்களுடைய லட்சியமாகும்.

🌹(3ம் பாவத்தில் "செவ்வாய்")

💐மூன்றாம் பாவத்தில் யாருடைய ஜாதகத்தில் இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய இளைய சகோதரரும் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் செய்ய வேண்டியதை திரும்ப செய்வதற்குத் தான் இந்த பிறப்பை எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

💐இருப்பதிலேயே மற்றவர்களைவிட நமக்குத்தான் அதிகமான நண்பர்கள் பட்டாளம் இருக்க வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.என்றைக்குமே தன்னுடைய இளைய சகோதரரையும் மற்றும் நெருங்கிய நண்பர்களையும் யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐மேலும் இந்த மூன்றாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்கள் நண்பர்களிடமிருந்தும் மற்றும் இளைய சகோதரரிடம் இருந்தும் ஏதாவது ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அவர்களிடம் இருந்து அதனை இவர் உடனடியாகப் பெற வேண்டும்.என்ற எண்ணம் மற்றும் பிடிவாதம் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐இருப்பதிலேயே மற்றவர்களை விட அதிகமாக சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.அதிக நேரம் mobile use செய்ய வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐மேலும் இவர்களுக்கு இளைய சகோதரர் மூலமாகவும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும் .
இவர்கள் ஏற்கனவே இதனை சார்ந்து சற்று கவனமாக இருக்க வேண்டும்.

🌹(4ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் நான்காம் பாவத்தில் இருந்தால் அவர்கள் வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு வித்தைகள் இதனை சார்ந்த விஷயங்களை தான் லட்சியமாகக் கொண்டு பிறந்திருப்பார்கள்.என்றைக்குமே இதனை சார்ந்த விஷயங்களை யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐ஒரு சில பேர் 10 degree படித்திருப்பார்கள் அவர்களுடைய ஜாதகத்தில் எல்லாம் நான்காம் பாவத்தில் செவ்வாய் இருக்கும்.
படிப்பை லட்சியமாகக் கொண்டு தான் அவர்களின் ஆத்மா இந்த பூமியில் பிறந்து இருக்கிறது என்று அர்த்தம்.

💐இல்லையென்றால் பெரிய வீடு கட்ட வேண்டும் வண்டிகள் வாங்க வேண்டும் சொத்து வாங்க வேண்டும்.
பலதரப்பட்ட வித்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவர்கள் பிறந்திருப்பார்கள்.வாழ்நாளில் இவற்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

💐மேலும் இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு சார்ந்த விஷயங்களின் மூலம் கடன் பிரச்சினை அல்லது பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும்.இவர்கள் என்றைக்குமே வீடு வண்டி வாகனம் படிப்பு சொத்து சார்ந்த விசயங்களுக்காக loan எடுக்கக் கூடாது.அப்படி மீறி எடுத்தார்கள் என்றால் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கி விடுவார்கள்.

💐மேலும் இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு இது சார்ந்த விஷயங்கள் தனக்கு வேண்டும் என்றால் உடனடியாக வேண்டும் இப்போதே வேண்டும் இப்போதே இது சார்ந்த விஷயங்களை அடைய வேண்டும் என்று அவசர புத்தி கண்டிப்பாக இவர்களுக்கு இருக்கும்.

💐இவர்கள் தன்னுடைய தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு செய்ய வேண்டியதை திருப்பி செய்வதற்குத்தான் இவர்கள் பிறந்திருப்பார்கள்.என்றைக்குமே தன்னுடைய தாயை யாருக்காகவும் இவர்கள் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

🌹(5ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் காதல் சார்ந்த விஷயங்கள் காமம் சார்ந்த விஷயங்கள், ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள்,கலை மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்கள்,
விளையாட்டு மற்றும் குழந்தைகள் சார்ந்த விஷயங்கள் இவற்றை எதையாவது ஒன்றை லட்சியமாக கொண்டு தான் இந்த ஜாதகர் இந்த ஜென்மம் எடுத்து இருக்கிறார் என்று அர்த்தம்.

💐யாருக்காகவும் எப்போதும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் இது சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கவே மாட்டார் இதனை அடைய வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐இவர்கள் ஆன்மீக ஈடுபாடு சார்ந்த விஷயங்களில் இருந்தார்கள் என்றால் முதல் முக்கியத்துவத்தையும் பிறப்பின் நோக்கத்தையும் வாழ்நாளில் உருப்படியாக ஆன்மீகத்தில் எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கமும் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐விளையாட்டு காதல் மற்றும் பூர்வீக சொத்து கலை மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் மற்றும் ஆன்மீகம் அல்லது ஜோதிடம் இது சார்ந்த விஷயங்களில் உருப்படியாக எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐மேலும் இவர்களுக்கு குழந்தைகள் மூலம் தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் மற்றும் பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும்.குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

💐மேலும் இந்த ஐந்தாம் பாவத்தில்  செவ்வாய் இருப்பவர்கள் இவர்கள் பிள்ளைககளுடைய வாழ்க்கையில் என்றைக்குமே தலையிடக் கூடாது.
மீறி தலையிட்டார்கள் என்றால் இவர்கள் எடுக்கும் முடிவு என்றைக்குமே இவர்கள் பிள்ளைகளுக்கு சாதகமாக முடியாது பாதகமாக தான் போய் முடியும்.

🌹(6ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஆறாம் பாவத்தில் இருந்தால் கடன்,வம்பு, வழக்கு, கோர்ட், கேசு, அடிதடி, சண்டைகள் பிரச்சினைகள், எதிரிகள் ,போட்டி, பொறாமைகள், உத்தியோகம் இது சார்ந்த விஷயங்களை அடைவதற்கு தான் இந்த ஜென்மம் எடுத்து இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இது சார்ந்த விஷயங்களில் மற்றவர்களை விட இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

💐அதாவது தன்னுடைய எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் செய்ய வேண்டியதை திருப்பி செய்வதற்குத் தான் இந்த பிறப்பை இவர் எடுத்திருக்கிறார் என்று அர்த்தம் இருப்பதிலேயே தனக்கு தான் அதிகமாக எதிரிகள் இருக்கவேண்டும் என்றும் மற்றும் அதிகமாக நண்பர்கள் பட்டாளம் இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.

💐தன்னுடைய வாழ்நாளில் இது சார்ந்த விஷயங்களில் எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஒரு நோக்கமும் ஒரு இலக்கும் இவர்களுக்கு இருக்கும்.எப்போதுமே இது சார்ந்த விஷயங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐மேலும் இவர்கள் உத்தியோகத்திற்கு செல்லவேண்டும் உத்தியோகத்தில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும்.உத்தியோகத்தில் எதையாவது ஒன்று பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் அதுதான் இவர்களின் லட்சியமாக இருக்கும்.

💐மேலும் 6ம் பாவத்தில் செவ்வாய் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் என்றைக்குமே கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது இவர்கள் கடன் வாங்கினார்கள் என்றால் அந்த கடனை திருப்பி செலுத்த படாத பாடு படுவார்.கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொடுத்த பணமும் திரும்ப வராது.

💐என்றைக்குமே கடன் வாங்கக்கூடாது, கடன் கொடுக்கக்கூடாது ,சீட்டு நடத்தக்கூடாது, loan எடுக்க கூடாது,
Credit card வாங்கக் கூடாது மீறி இது எல்லாம் செய்தார்கள் என்றால் பிரச்சனைகள் தான் போய் சிக்குவார்கள்.

💐மேலும் இவர்கள் என்றைக்குமே கோர்ட் கேசு இதுபோன்ற விஷயங்களில் செல்லக்கூடாது இவர்கள் யார் மீதும் கேஸ் போட கூடாது அப்படி கேஸ் போட்டால்  என்றைக்குமே இவர்கள் பக்கம் தீர்ப்பு சாதகமாக  வராது.

🌹(7ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் வெகுஜன 
மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இலட்சியமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.அதாவது வெளி உலக மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐எப்போதுமே வெளி உலக மக்களுடன் தொடர்பிலேயே இருப்பது யாருக்கும் இல்லாதவாறு தனக்குத்தான் அதிகமான வெளியுலக நட்புகள் இருக்க வேண்டும் அல்லது வெளி உலக மக்களின் தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற ஆசையும் நோக்கம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும்.

💐இவர்களுக்கு இருக்கக்கூடிய வெளியுலகத் தொடர்புகள்(public contact) யாருக்குமே இருக்காது அவ்வளவு இருக்கும்.யாருக்காகவும் எப்போதுமே இது சார்ந்த விஷயங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.இவர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமென்று நினைத்தார்கள் என்றால் அவர்களை இப்போதே உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐மேலும்  ஒரு ஆணுடைய ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அவர்களின் மனைவி இவர்களிடம் இருந்து எதையாவது ஒன்றை வேண்டும் என்றால் அதனை இப்போதுதே உடனடியாக வேண்டும்.என்ற ஒரு பிடிவாதமும் ஒரு அவசரமும் இவர்களின் மனைவிக்கு இருக்கும்.
இதே பெண்ணுடைய ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் இவர்களுடைய  கணவன் இதுபோன்று இருப்பார்.

💐மேலும் செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் என்றைக்குமே கூட்டு தொழில்( partnership business) செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் மற்றும் பிரச்சினைகளும் ஏற்படும்.

🌹(8ம் பாவத்தில் "செவ்வாய்")

💐எட்டாம் பாவம் என்பது ஆயுள் ஸ்தானம் ஆகும் அதாவது யாருடைய ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய ஆயுள் இருக்கும் வரை எதையாவது உருப்படியாக ஒன்று செய்ய வேண்டும் அல்லது உருப்படியாக ஒன்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மற்றும் மனோபாவம் ஒரு இலக்கு ஒரு நோக்கம் கண்டிப்பாக இவர்களுக்கு இருக்கும்.

💐ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.அதாவது யாருக்குமே தெரியாத அமானுஷம் சார்ந்த விஷயங்களை இந்த உலகத்திற்கு கட்டவிழ்பதற்குதான்
இந்தப் பிறப்பே இவர்கள் எடுத்திருப்பார்கள் என்று அர்த்தம்.

🌹(9ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் தந்தை தந்தை வழி உறவுகள் தந்தை வழி சொத்து இவற்றிற்காகவும் மற்றும் தொலைதூரப் பயணம் சார்ந்தும் உயர்கல்வி மேற்படிப்பு சார்ந்தும் ஆன்மீக ஈடுபாடு சார்ந்தும் தான் இவர்களின் நோக்கம் இவர்களின்
இலக்கு இவர்களின் பிறப்பின் லட்சியம் இருக்கும்.

💐தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களும் செய்ய வேண்டியதை திருப்பி செய்யத்தான் இவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.அல்லது தந்தையாக இந்த ஜென்மத்தில் தன்னுடைய கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் .
மேலும் இவர்கள் என்றைக்குமே தன்னுடைய தந்தையை யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐தொலைதூர பயணம் செல்லவேண்டும் யாருமே செல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும் சுற்றுலா செல்ல வேண்டும் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.அல்லது உயர்கல்வி மற்றும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் பிறப்பின் லட்சியமும் இவர்களுக்கு இருக்கும்.

💐தானம் தர்மம் செய்ய வேண்டும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருக்கும் நோக்கமும் இவர்களுக்கு இருக்கும்.

💐மேலும் ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்களுக்கு தந்தை மூலமாகவும் தந்தைவழி உறவினர்கள் மூலமாகவும் உயர் கல்வி சார்ந்தும் மேற்படிப்பு சார்ந்தும் வெளிநாட்டு பயணம் சார்ந்தும் பணக்கஷ்டம் பணப்பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.

🌹(10ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் பத்தாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் தொழிலில் சாதிக்க வேண்டும் அல்லது தொழில் சார்ந்த சில முக்கியமான விஷயங்களை வெளி உலகத்தில் கட்டவிழ்க்க வேண்டும்.என்ற நோக்கமும் என்ற லட்சியமும் இலக்கும் இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

💐பலதரப்பட்ட தொழில் செய்ய வேண்டும் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் இவர்களுக்கு இருக்கும்.
மேலும் இவர்கள் தொழில் சார்ந்த விசயங்களை யாருக்காகவும் எப்போதும் எந்த சூழ்நிலையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐மேலும் இவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களின் மூலம் பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும்.இவர்கள் என்றைக்குமே கடன் வாங்கி தொழில் செய்யக்கூடாது கடன் வாங்கி தொழில் செய்தார்கள் என்றால் கண்டிப்பாக தொழிலில் நஷ்டம் அடைவார்கள்.

🌹(11ம் பாவத்தில் "செவ்வாய்")

💐பதினோராம் பாவம் என்பது லாபஸ்தானம் ஆகும் யாருடைய ஜாதகத்தில் எல்லாம் பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருக்கிறது அவர்கள் தன்னுடைய வருமானத்தை அதிகமாக சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கமும் மற்றும் அதிகமான லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐மேலும் இவர்கள் தன்னுடைய மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பா அவர்களுக்கு செய்ய வேண்டிய திருப்பி செய்வதற்குத் தான் இந்த பிறப்பே எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.என்றைக்கும் இவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் மற்றும் விட்டுக்கொடுத்து பேசவே மாட்டார்கள்.

🌹(12ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் அவர்கள் அயன, சயன, போகம், சுகபோக வாழ்க்கை வாழவேண்டும், நிம்மதியாகத் தூங்க வேண்டும், நிம்மதியாக வாழவேண்டும்,நன்றாக சுகபோக உணவு சாப்பிட வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் இது சார்ந்த ஆசைகள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐படுக்கை அறையை சார்ந்த விஷயங்கள் காமம் சார்ந்த விஷயங்கள் காதல் சார்ந்த விஷயங்கள் இவற்றில் இவர்களுக்கு அதிகமான ஆசையும் நோக்கமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
எதற்காகவும் இது சார்ந்த விஷயங்களை எப்போதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் இதுதான் இவர்களின் பிறப்பின் லட்சியமாகும் மற்றும் பிறப்பின் நோக்கம் ஆகும் இதனை சார்ந்து தான் இவர்களின் எண்ணங்கள் இருக்கும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Thursday, 3 March 2022

ஜோதிட தகவல்

ஜோதிட தகவல்
📷
முதல் பாவம்:
உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:
சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:
கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
மேற்கண்ட பாவகங்களே ஒருவரது சுய ஜாதகத்தை இயக்கும் , மேற்சொன்ன பாவகங்கள் 6,8,12 பாவகங்களுடன் தொரபு பெற்றால் 100 சதவீத இன்னல்களையும் , பாதகஸ்தானத்துடன் தொரபு பெற்றால் 200 சதவீத இன்னல்களையும்  வாரி வழங்கும் .
சில ஜோதிடர்கள் மேற்சொன்ன 12 வீடுகளின் அதிபதிகள் நீசம்  அடைந்தாலும் , ராகு கேதுகளுடன் சேர்க்கை பெற்றாலும் இன்னல்கள் வரும் என்று பயமுறுத்துவார்கள் இது தவறாகும் .


கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...