Wednesday, 11 April 2018

இள நரை


இன்றையகாலக்கட்டத்தில்இளசுகளுக்குகூடநரைமுடிபிரச்சனைஉள்ளது.சுற்றுசூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது.நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் தினமும் சேர்‌த்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத காரியம். சரி வந்த நரை முடியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு மற்றொரு தீர்வு, வெந்தையத்தை இரவே ஊற விட்ட, காலையில் அதனை மைய அரைத்து அந்த விழுதை தலை முடிவேர்களில் பேக் போல போட்டு, காய்வதற்குள் சியக்காய் கொண்டு அலசவும்.

வாரம் ஒரு முறை ஒரு கின்னத்தில் நல்லெண்ணெய், விலக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் தேவையானவற்றை எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் சிறு சிறு வட்ட சுழல் முறையில் மசாஜ் கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்தில் எண்ணெய் போக முடியை சியக்காய் கொண்டு அல்லது ஹெர்பல் ஷாம்பூவை தண்ணீரில் கலந்தோ உபயோகிக்கவும்.

நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், அதனுடன் புதினா, கறுவேப்பிலை. இவை மூன்றையும் தனிதனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள்.

மூன்று நாட்களில் கொற கொறப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு. காய்வதற்குள் அலசவும். இந்த பேக்கை தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எதனுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரை முடி வருவதற்கு முன்பு செய்ய இது தான் சூப்பர் டிப்ஸ்.

வெள்ளை முடியை இயற்கை முறையில் போக்க சில வழிமுறைகளை காண்போம். 
 
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக  கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர,  நிரந்தரமாக மறையாது.

 

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும் கொட்டி விடும்.  எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய்:  தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை

முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய

ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

 

நெல்லிக்காய்:  நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த

எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை

நீங்கள் காண முடியும்.

 

கறிவேப்பிலை: கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

 

வெந்தயம்:வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை

நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.
 

நெய்:  நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும்  இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

 

மிளகு:  தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும். 

 

ப்ளாக் டீ:1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம். 
இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.

ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.இதே வெண்ணையைத் தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும்.

தலைமுடியின் வளர்ச்சிக்கும் கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் வறுக்க வேண்டும். காய் நன்றாக கருகும்வரை வறுத்தால், எண்ணெய் நன்றாக கருநிறமாகிவிடும்.

இந்த எண்ணெய் தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமனமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓரிரவு ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைத் தலையில் தேய்க்கலாம். இளநரைக்கு நல்லது.

இது எல்லாம் செய்ய பஞ்சியா?? கவலைய விடுங்கள்: இயற்கை முறையில் சாயம் பூசலாம்…

தலைக்குச் சாயம் (Hair Dye)

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம்.

கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெய்யை தினசரி உபயோகிக்கலாம். இது பீஹ்மீ போலப் பயன்படும். கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம்.

மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம்.

மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

இன்றைய காலக்கட்டத்தில் இளசுகளுக்கு கூட நரை முடி பிரச்சனை உள்ளது. சுற்று சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது. நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் தினமும் சேர்‌த்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத காரியம்.
சரி வந்த நரை முடியை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. இதற்கு மற்றொரு தீர்வு, வெந்தையத்தை இரவே ஊற விட்ட, காலையில் அதனை மைய அரைத்து அந்த விழுதை தலை முடிவேர்களில் பேக் போல போட்டு, காய்வதற்குள் சியக்காய் கொண்டு அலசவும்.

வாரம் ஒரு முறை ஒரு கின்னத்தில் நல்லெண்ணெய், விலக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் தேவையானவற்றை எடுத்து லேசாக சூடு செய்து, தலை முடியில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் கைகளால் சிறு சிறு வட்ட சுழல் முறையில் மசாஜ் கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்தில் எண்ணெய் போக முடியை சியக்காய் கொண்டு அல்லது ஹெர்பல் ஷாம்பூவை தண்ணீரில் கலந்தோ உபயோகிக்கவும்.

நெல்லிகாயை சிறு சிறு துண்டுகளாக்கவும், அதனுடன் புதினா, கறுவேப்பிலை. இவை மூன்றையும் தனிதனியாக காட்டன் துணியில் கட்டி சூரிய வெளிச்சம் அதிகம் படாமல் இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விடுங்கள்.

மூன்று நாட்களில் கொற கொறப்பாக காய்ந்ததும், அனைத்தையும் தண்ணீர் விடமால் பவுடராக அரைக்கவும். இந்த பவுடரை வாரம் ஒரு முறை, தலையில் பேக் போல போட்டு. காய்வதற்குள் அலசவும். இந்த பேக்கை தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு, புளித்த தயிர், தேன், சுத்தமான டீ டிகாஷன் என முடிக்கு உகந்த எதனுடனும் கலந்து உபயோகிக்கலாம். இதன் மூலம் உங்கள் முடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நரை முடி வருவதற்கு முன்பு செய்ய இது தான் சூப்பர் டிப்ஸ்.

வைட்டமின் பி12 நரையை போக்கும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்

இதனை போக்க மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும்.
இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் அலச வேண்டும்.
குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

இவ்வாரு தொடர்ந்து செய்தால் இளநரை மாயமாக மறைந்து விடும்...

மருதாணியில் பல மருத்துவக் குணங்கள்
உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும் பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.

மருதாணியினை இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தான் வயது வித்தியாசமின்றி மருதாணி வைக்கும் வழக்கம் அக்காலத்திலிருந்து இன்று வரை தொடருகிறது.

மருதாணியின் தைலம் முடிவளர ஏற்றது. இதன் தைலத்தை ஒவ்வொரு நாளும் தலைக்கு தேய்க்க முடி வளருவதோடு இள நரை அகலும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. இந்த முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல வடிவங்களில் மருதாணி இட்டுக் கொண்டால் அது நலம் தரும் .

மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது இதனால் தான் நகசுத்தியை தடுக்க நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். நகங்கள் அழகாவதோடு நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.

நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி காணப்படுவதால் நகக்கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் உடனடியாக குணமாகும்.

நகசுத்தியை மட்டுமல்ல உடலில் உருவாகும் சகல புண்களையும் ஆற்றவும் நல்ல மருந்தாக மருதாணி பயன்படுகிறது ஆறாத வாய்ப்புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம் . அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி னால் 3-5 நாளில் புண்கள் குணமாகும் இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும். கோடை வெயிலை தவிர்க்க உதவும் .

மருதாணியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு.

மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

கை கால்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதாணி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். அதேநேரம் இக்காலங்களில் உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் அப்பொழுது தான் முழுப்பலன் கிடைக்கும்.

மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் இட்டால் விரைவில் குணமாகும்.

இப்படி எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டது மருதாணி தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். பவுடராக வரும் இந்த மருதாணியில்,அதன் மருத்துவ குணக்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டே வருகின்றது.

முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
உணவில் கறிவேப்பிலையை நிறையச் சேர்க்க வேண்டும். 

பசு வெண்ணைக்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கிறது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வர வேண்டும். வெண்ணையுடன் சிறிது கறிவேப்பிலைப் பொடியைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதே வெண்ணையை தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும், கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. 

* நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணையில் வறுக்க வேண்டும். காய் நன்றாகக் கருகும் வரை வறுத்தால், எண்ணை நன்றாகக் கருநிறமாகிவிடும். இந்த எண்ணை தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓர் இரவு ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை தலையில் தேய்க்கலாம். இது இள நரைக்கு நல்லது. 

* சுத்தமான தேங்காய் எண்ணையில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கக்கூடிய லோகபஸ்மம் இவற்றைச் சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணையை வடிகட்டி தலைக்குப் பயன் படுத்தலாம். 

* கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணையில் கலந்து, அதன் சத்து முழுவதும் எண்ணையில் இறங்கும்வரை காய்ச்சி, அந்த எண்ணையைத் தினசரி உபயோகிக்கலாம். இது 'ஹேர் டை' போல பயன்படும. கடுக்காய் காய்ச்சிய நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தலாம். 

* மருதாணி இலையை நன்கு அரைத்து, அதை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சிஅந்த எண்ணையையும் பயன்படுத்தலாம். இது நரை முடிக்கான சாயமாகப் பயன்படும். சிலமணி நேரம் கழித்து அலசினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும். 

* செம் ப  ரு த் தி ப்பூக்களை நிழலிலும், வெயிலிலும் காயவைத்து தேங்காய் எண்ணையில் இட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதை, நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி, அதிக அடர்த்தியான தேயிலை நீரால் தலைமுடியை அலசுவதுதான். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

நரை முடியை கறுப்பாக்க - grey hair a thing the past after

நரை முடியா? இனி டை அடிக்காமல் கறுப்பாக்கலாம்

நெற்றியிலோ, காதின் ஒரத்திலோ கொஞ்சம் நரை முடி எட்டிப்பார்த்தாலே வயதாகிவிட்டதாக ஃபீல் பண்ணத் தொடங்கி விடுவார்கள். 'டை' அடித்து எப்படி அதை கறுப்பாக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் இனி டை தேவையில்லை, வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கும் புதிய மருந்தை யுகேவின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் தலைமுடியின் நரையை இந்த மருந்து மூலம் தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நரைக்கு என்ன காரணம்? 
தலைமுடியில் கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து நரை ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.


கறுப்பான தலைமுடி 
இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம் முடியின் இயற்கை வண்ணத்தை அதற்கு மீண்டும் அளிக்கமுடியும் என்று கண்டறிந்த இந்த ஆய்வாளர்கள் அந்த வேதிப்பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கினார்கள். அதை பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்தபோது அவர்களின் உடல் முடி தனது பழைய நிறத்திற்கு மாறியதாக இவர்கள் கூறுகிறார்கள்.


நிரந்தரமாக கறுப்பாக்கலாமா? 
அதேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வாளர்களால் உறுதியான விடையை கொடுக்கமுடியவில்லை.


வெள்ளைத் தழும்புகள் 
இயற்கையில் மனிதர்களின் தோலில் காணப்படும் மெலானின் என்கிற நிறத்துகள்கள் தோலின் சில இடங்களில் இல்லாமல் போவதால் இந்த வெள்ளைத்தழும்புகள் உருவாகின்றன. இந்த தோல் மற்றும் கண்ணின் இமைகள், புருவங்களில் காணப்படும் வெள்ளைத்தழும்புகளை குணப்படுத்துவதற்காக இவர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட நோயாளிகளிடம் நல்ல பலனை தந்ததை கண்ட ஆய்வாளர்கள், இந்த மருந்தை கொஞ்சம் மாற்றி அதை பயன்படுத்தி மனிதர்களின் முடியில் உருவாகும் நரையை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்து அதனை கண்டறிந்தனர். இந்த மருந்து நரைமுடியையும் தோலில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் ஒருசேர குணப்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கின்றனர் ஆய்வாளர்கள்.


வேரிலிருந்து குணப்படுத்தலாம் 
இதுநாள்வரை நரைமுடியை மறைப்பதற்கான வழிகள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ இதழ் தலைமை 
ஆசிரியர் ஜெரால்ட் வீஸ்மென், முதல்முறையாக, வெள்ளைமுடியை அதன் வேரிலிருந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறைக்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...