Wednesday, 11 April 2018

சோப்பு வகைகள்

சோப்பு வகைகள்

1.மைலாஞ்சி

2.வெட்டிவேர்

3.நெல்லிக்காய்

4.சீகைகாய்

5.புங்கு

6.கடலை மாவு

7.செம்பருத்தி

8.காற்றழை

9.கஸ்தூரி மஞ்சள்

10.மஞ்சள்

11.முககாந்தி

12.ரத்த சந்தனம்

13.வேம்பு

14.துளசி

15.பாசிபயறு

16.கொண்டை கடலை

17.பழக்கலவை 

 


செயற்கை ரசாயனம் ,நிறம் சேர்க்காத 17 வகையான இயற்கையான ஒற்றை மூலிகை சோப்புகள்

           1.மைலாஞ்சி சோப்பு (HENNA SOAP –Lawsonia inermis)                                                                         இயற்கையான மைலாஞ்சி பொடி உபயோகித்து உருவாக்கிய சோப்பு, ,தூக்கமின்மை,முடி உதிர்தல்,கருந்தேமல், படைகள், கரும்படை,.வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் நிவாரணம் தருகிறது.

           2.நெல்லிக்காய் சோப்பு )AMALA SOAP-Emblica Officinalis(                                               இயற்கையான நெல்லிக்காய் உபயோகித்து உருவாக்கிய சோப்பு,தலைமுடிக்கு கருகரு நிறமும் நல்ல வளர்ச்சியும் உருவாக்குகிறது ,குளிர்ச்சியாகவும், உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியதாகவும் விளங்குகிறது மேலும் பொடுகு ,பேன் ,முடி உதிர்தல் நிறமாற்றம் போன்றவற்றையும் அகற்றிவிடுகிறது.

          3. சீகைகாய் சோப்பு (Shikkakai Soap-Acacia Concuna)

நாம் உடம்பில் தேய்த்து குளிப்பதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தும் ஒரு முக்கிய இயற்கை மூலிகை பொருளான சீகைகாய்,சோப்பு வடிவில் இப்போது தோல் சம்பத்தமான அணைத்து பிரச்சனைகளையும் களைந்து,உடல் சூட்டை குறைக்கும்.

          4.புங்கு சோப்பு (Pungu Soap- Millettia Pinnata)                                                                         ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்கள் புங்கை உபயோகபடுத்தி வந்துள்ளனர்,அணைத்து விதமான தோல் நோய்களை குணப்படுத்தும்(புண்,சொறி,சிரங்கு,வர்ணம் விக்கம்,முகப்பரு,கரும்புள்ளி,காயம்)

         5.கடலைமாவு சோப்பு (Groundnut Powder Soap- Arachis hypogaea)                                                           சருமம் வழுவழுப்பாகும்,தோல் சுருக்கம் இன்றி இளமையோடு காட்சியளிக்கலாம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடுகாட்சியளிக்கலாம். பளபளவென்று முகம் பிரகாசிக்கும். பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

 6.கொண்டை கடலை சோப்பு (Bengal Gram Soap-Cicer Arietinum)

முகம் பளிச்சென்று மாறும். படிப்படியாக நல்ல கலர் கிடைக்கும்.

 முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து முகத்தின் அழகு கூடி விடும்.வறண்ட சருமம் சுலபத்தில் சுருக்கம் விழுந்து விரைவில் முகத்தில் வயதான தோற்றத்தை காட்டும். எனவே இந்த சோப்பு தேய்த்து முகத்தை கழுவி வந்தால் முக சருமம் பாதுகாக்கப்படும். 

7.மஞ்சள் சோப்பு -முட்டா மஞ்சள்(Turmaric Soap-Curcuma Longa)                             அம்மை நோயினால் ஏற்பட்டதழும்புகளில் தடவினால் செம் புள்ளிகள் மறையும்.சருமத்தில் ஏற்படும் வீக்கம் ,அரிப்பு , புண் , உரசல் காயங்கள் ,தேமல் முகப்பருக்கள் போன்றவற்றிற்கும் மற்றும் சருமத்தில் உள்ள பிற நோய்களும் குணமாகும்.முகத்தில் வள‌ர்‌ந்து‌ள்ள முடியை மேலு‌ம் வளராம‌ல் தடு‌த்து மெ‌ன்மையா‌க்கு‌கிறது. சரும‌த்‌தி‌ற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது

        8.கஸ்துரி மஞ்சள் சோப்பு (Musk Turmaric Soap-Curcuma Aromatica)

இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு.முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும், அம்மை தழும்புகள் மாறும்.வீக்கமும் வலியும் குறையும்,அடிபட்ட புண் ,சிரங்குகள் விரைவில் குணமாகும்.முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.

                 9.கற்றாழை சோப்பு (Alow Soap-Alow vera)                                                                                                                பொடுகுத்  தொல்லை,முடி உதிர்தல்,பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை சரி செய்ய சிறந்ததாக உள்ளது.வழுக்கை அவது இருந்தால் அதை தடுத்து அங்கு கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.மேலும் வறண்ட சருமத்தை சீர் செய்கிறது

            10.செம்பருத்தி சோப்பு (Hibiscus Soap-Hibiscus rosa-sinensis)

செம்பருத்தி சோப்பு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும்.. பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தி சோப்புயை பயன்படுத்தலாம்.ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது. 

  சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு சோப்பை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். 

          11.வெட்டிவேர் சோப்பு (Vetiver Soap-Chrysopgon Zizaniodes)                            முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும்,உடம்புக்கு குளிர்ச்சி தரும்,வியர்வை ,துர்நாற்றம் போன்றவற்றை அகற்றுகிறது,உடலுக்கு இயற்கையான நறுமணத்தை கொடுக்கிறது,பிற தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

12.இரத்தாச்சந்தானம் சோப்பு(RedSandalwood Soap- Pterocarpus santalinus)                                    முக அழகை அதிகரிக்கிறது,முகபருக்களை குறைத்து வராமல் செய்கிறது ,முகத்தில் உள்ள வடுக்கள்,சுருக்கங்கள்,அம்மை தழும்புகள்,தோலின் மேல் உள்ள காயம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

          13.வேம்பு சோப்பு (Neem Soap-Azadiracta Indica)                                      தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள்,தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.மேலும் தோலில் உருவாக்கும் பங்க்ஸ் பாதிப்பை தடுக்கிறது.

            

                14.துளசி சோப்பு (Thulasi Soap-Ocimum Tenuiflorum)                                                  தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.தோலின் மென்மையான தன்மையை அதிகரிக்க செய்கிறது,தலையில் உள்ள பொடுகு,பேன் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.முகப்பருவை அகற்றும் பாசில் காம்பர்என்ற எசன்ஸ் இதில் உள்ளது.

           15.பாசிப்பயறு சோப்பு (Green Gram Soap- Phaseolus aureus Roxb)                      முகப்பரு தழும்புகள், முகத்தில் கரும்புள்ளிகள்மறைய செய்யும்,தோலின் நமைச்சல் குறையும்,சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்,தோலிற்கு கூடுதல் நிறம் அளிகிறது.

             16.முக காந்தி சோப்பு (Mughakandhi Herbal Face Bleaching Soap)                                    முகம் ப்ளிச் செய்வதற்கு பியுட்டி பார்லர் போக வேண்டியதில்லை,வீட்டிலிருந்தே செய்யலாம்,இந்த ப்ளிச்ங் சோப்பு முகப்பருக்களை அகற்றுகிறது ,முகத்தில் உள்ள வடுக்கள் ,தழும்புகள்,சுருக்கங்கள்,முக கருமை போன்ற பல்வேறு பிரச்சனைகளை அகற்றி அழகும் வசீகரமும் முகத்திற்கு தருகிறது.

           17. பழகலவை சோப்பு (Fruit Soap)                                          நாம்முடைய தோலுக்கு தேவையான சத்துகளை கொண்ட பழங்களின் கலவை கொண்டு இந்த சோப்பு தயாரிக்கப்படுகிறது,இதன் மூலம் எல்லா சத்துக்களும் நேரடியாக கிடைக்கப் பெற்று நம்முடைய தோல் எப்பொழுதும் புது பொலிவுடன் காட்சியளிக்கும்

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...